சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கருணாஸ் கார் உடைப்பு; போலீஸ் தடியடி

Added : செப் 01, 2017 | கருத்துகள் (2)
Share
Advertisement
கருணாஸ், கார் உடைப்பு, போலீஸ், தடியடி,

திருநெல்வேலி ; நெல்லை அருகே நடிகர் கருணாஸ் கண்ணாடி மீது கல்வீசி உடைத்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி, வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டுச்செவலில், சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் 302வது பிறந்த தின விழா நேற்று நடந்தது. துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், ராஜலட்சுமி, கடம்பூர் ராஜூ மற்றும் மனோஜ்பாண்டியன், முனுசாமி, வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ., மனோகரன் ஆகியோர் வந்தனர்.

மாலை அணிவித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், முதல்வராக ஜெ.,இருந்தபோதுதான் பூலித்தேவன் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டார். வரும் செப்.,12ல் நடக்கும் அ.தி.மு.க.,பொதுக்குழுவில் எந்த சிக்கலும் இல்லாமல் வெற்றிகரமாக நடக்கும் என்றார்.

தொடர்ந்து தினகரனின் ஆதரவாளர்கள் மாலையணிவித்தனர். நெல்லை ராஜ்யசபா எம்.பி.,விஜிலா, மாவட்ட செயலாளர் முத்தையா, ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ.,சுந்தரராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

தினகரன் ஆதரவாளரான தென்காசி எம்.பி.,வசந்தி நேற்று நிகழ்ச்சியில் பங்கேற்க வரவில்லை. இந்த அணிகளுடன் வராமல், அ.தி.மு.க.,ஆதரவு எம்.எல்.ஏ., நடிகர் கருணாஸ் தமது ஆதரவாளர்களுடன் வந்தார். அரசியல்வாதிகள் கார்களை நிறுத்திவிட்டு இறங்கி செல்வதற்கு போலீசார் ஒரு இடத்தை குறிப்பிட்டிருந்தனர். கருணாசின் கார் அதைவிட சற்று முன்னேறி சென்றதால், ஆத்திரமுற்ற வாலிபர்கள் அவரது இன்னோவா காரின் பின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தனர். கண்ணாடியை உடைத்த ஒரு நபருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pu.ma.ko - Chennai,இந்தியா
02-செப்-201702:00:18 IST Report Abuse
pu.ma.ko லொடுக்கு பாண்டிய உண்மையிலேயே லொடுக்கு ஆக்கிருவானுக போல...
Rate this:
Cancel
Deva Nesan - erode,இந்தியா
01-செப்-201718:09:55 IST Report Abuse
Deva Nesan அவனை ஏன் தேவையில்லாம பெரிய ஆள் ஆக்கிறீங்க ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X