உ.பி.,யில் தொடரும் அவலம் : பரூகாபாத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 49 குழந்தைகள் பலி

Updated : செப் 05, 2017 | Added : செப் 04, 2017 | கருத்துகள் (50)
Advertisement
உ.பி., குழந்தைகள் பலி, மருத்துவமனை, ஆக்சிஜன் பற்றாக்குறை

லக்னோ, உ.பி.,யில், கோரக்பூரை தொடர்ந்து, பரூக்காபாத்தில், ஒரே மாதத்தில், 49 குழந்தைகள், ஆக்சிஜன் பற்றாக்குறையால், உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், கோரக்பூர் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால், 73 குழந்தைகள் உயிரிழந்ததாக, சமீபத்தில் தகவல் வெளியாகி, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இங்குள்ள பரூக்காபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில், இதேபோன்ற சம்பவம் நடந்துஉள்ளது.இங்கு, பல்வேறு பாதிப்புகளால் அனுமதிக்கப்பட்டிருந்த, 49 குழந்தைகள், ஒரு மாதத்தில் இறந்துள்ளன.

குழந்தைகள் இறப்பிற்கு, ஆக்சிஜன் பற்றாக்குறையே முக்கிய காரணம் என, கூறப்படுகிறது. இதில், 30 குழந்தைகள், அவசர சிகிச்சை பிரிவில், இறந்துள்ளன; 19 குழந்தைகள், பிரசவத்தின் போது மரணமடைந்துள்ளன.இதுபற்றிய தகவல் வெளியானதும், முதல்வர் அலுவலகம் நடவடிக்கையில் இறங்கியது. தலைநகர் லக்னோவில் இருந்து, உயர்மட்ட குழு, பரூக்காபாத் விரைந்தது.

அந்த மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அங்கு பணியாற்றும் மருத்துவ பணியாளர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. சம்பவத்தை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர், ரவீந்திர குமார், தலைமை மருத்துவ அதிகாரி, உமாகாந்த் பாண்டே, தலைமை மருத்துவ கண்காணிப்பாளர், அகிலேஷ் அகர்வால் ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உமாகாந்த் மற்றும் அகிலேஷ் மீது, வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து, உ.பி., முதன்மை செயலர், பிரசாந்த் திரிவேதி கூறியதாவது: பரூக்காபாத் மருத்துவமனையில், குழந்தைகள் இறந்ததற்கு, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமல்ல; வேறு பல காரணங்களால் உயிரிழந்துள்ளன.சிலர் தவறான தகவல்களை கூறி வருகின்றனர். விரிவானவிசாரணை நடத்த, மருத்துவத் துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளோம். அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு, டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது, என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapathy - khartoum,சூடான்
04-செப்-201719:15:01 IST Report Abuse
ganapathy குறை பிரசவம் என்று கூறப்பட்டதை கவனிக்கவும்...இதற்க்கு தாய் கர்ப்பமாய் இருக்கும் போதே நல்ல உணவு, ஓய்வு, சரியான உடற்பயிற்சி..நல்ல உறக்கம், தேவையான டானிக்குகள் (இரும்பு சத்து...போலிக் ஆசிட் ) என்று எல்லாம் கொடுக்கணும்..பின்னர் குறை பிரசவம் ஆகும் காரணத்தை கண்டு பிடிக்கணும்...குறை பிரசவ குழந்தைகளை தோற்று னாய் தாக்கியது தான் மருத்துவ மனையின் குறைபாடு...அதற்க்கு டாக்டர் மற்றும் நர்ஸுக்கு நல்ல பயிற்சி தேவை...
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
04-செப்-201719:11:11 IST Report Abuse
Agni Shiva பரிதாபத்திற்குரிய இந்த சம்பவம் நடக்காமல் இருக்கட்டும். ஆனாலும் இது போன்ற பிள்ளைகள் இறப்பு போன்ற சம்பவங்கள் ஆண்டாடுகாலமாக நடந்து வரும் கொடுமை. நாட்டின் வட மாநிலங்களில் உள்ள பெரிய அரசு மருத்துவமனைகளில் இது தொடர்ந்து நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட இந்த மருத்துவமனையின் தலைமை டாக்டர் இதை பற்றி விளக்கமாக அறிக்கை கொடுத்துள்ளார். அதன் படி வேறு தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இருந்து "தேறாது" என்று கடைசி நேரத்தில் அனுமதிக்கப்பட்ட 145 குழந்தைகளில் 124 குழந்தைகளை காப்பாற்றி இருக்கிறார்கள். மீதி 21 குழந்தைகள் இறந்து இருக்கிறது. இது போன்று உண்மைகளை அவர் கூறியிருக்கிறார். அதிலும் இறந்த குழந்தைகள் எந்த நோயினால் இறந்திருக்கிறார்கள் என்பதையும் விவரித்து இருக்கிறார். இதற்கும் மேலும் உயிர்களை ஒரு மருத்துவரால் பிடித்து வைத்து காப்பாற்றமுடியும் என்றால் தெய்வத்திற்கும் மருத்துவரும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். யோகியை குற்றம்சாட்ட வேண்டும் என்றால் மூர்க்கன்கள் இன்று முதல் சந்திர கடவுளை தொழுவதை விட்டு விட்டு மருத்துவர்களை தொழ ஆரம்பிக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
04-செப்-201718:13:51 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM எங்கப்பா அந்த மாரப்ப கவுண்டரும், அக்கினி சிவாவும், காசிமணியும், ஸ்ரீராமும், நல்லவன் நல்லவனும், அண்ணாமலையும் , சேரன் பெருமாளும்?. எங்கனாச்சும் சந்துபொந்து இண்டு இடுக்களில் ஒழிந்து இருந்தால் துணிந்து கருத்து பகுதிக்கு வந்து நியாயமான பதிலை தரவும்...[ அண்ணாமலை எழுதிய செத்தவன் வாயில வெத்தலை கொடுத்த மாதிரியான கருத்தை தான் எழுத வருவீர்கள் என்றால் வரவே வேண்டாம்... அப்படியே சந்துபொந்து இண்டு இடுக்களில் இருந்து கொள்ளுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் ]
Rate this:
Share this comment
04-செப்-201718:53:07 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்ஏற்கெனவே பதிவிட்டது /// ஒவ்வொரு மாநிலத்திலும் பிஞ்சு குழந்தைகள் இறப்பு எண்ணிக்கையை எடுத்தால் உண்மை தெரியும். அனைத்து தனியார் மருத்துவமனைகளும் உயிர் பிழைக்கமுடியாது என்று தெரிந்ததும் உடனடியாக அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பிவிடுகிறார் , பிறகு சில நாட்களில் அந்த குழந்தை இறந்து விடுகிறது , பிறவியிலேயே இருக்கும் கோளாறுகள் மற்றும் ஜப்பானிய மூளை காய்ச்சல் போன்ற காரணங்களால். என் குழந்தையும் 17 வருடங்களுக்கு முன்பு லக்னோவில் உள்ள ஒரு தனியார் மருத்துமனையில் பிறந்தது , பிறந்த முதல் மூச்சு விடவில்லை , அழவில்லை , செயற்கை முறையில் இயங்கவைத்தார்கள் , மறுநாள் இங்கு பார்க்க வசதி இல்லை என்று அரசு மருத்துவ கல்லூரிக்கு மாற்றிவிட்டார்கள் , அங்கே 5 நாட்கள் வெண்டிலேட்டர் இயந்திரத்தில் வைத்திருந்தார்கள் , பிறகு இறந்துவிட்டது. அதற்காக அரசு மருத்துவமனையை குறை சொல்லமுடியுமா ?... ///...
Rate this:
Share this comment
04-செப்-201718:54:41 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்நோய் தொற்று மற்றும் செயற்கை ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுத்தியவர்களை கண்டிப்பாக அரசாங்கம் தண்டிக்க வேண்டும் என்றும் பதிவிட்டிருக்கிறேன். நீ அரசியல் செய்கிறாய் , நான் எதார்த்தத்தை சொல்கிறேன். இதுதான் வேறுபாடு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X