பதிவு செய்த நாள் :
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ5,000 அபராதம்


புதுடில்லி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ந்துள்ள அவதுாறு வழக்கில், தாமதமாக பதிலளித்த, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டில்லி உயர் நீதிமன்றம், 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால், Arvind Kejriwal, புதுடில்லி,
New Delhi,  மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, Union Finance Minister Arun Jaitley, அருண் ஜெட்லி, Arun Jaitley,  டில்லி உயர் நீதிமன்றம், Delhi high court, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,Chief Minister Arvind Kejriwal, உயர் நீதிமன்றம்,  Delhi High Court, விசாரணை,Investigation, ராம் ஜெத்மலானி,Ram Jethmalani, முதல்வர்,  Chief Minister,நீதிமன்றம், Court

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.

ரூ.10 கோடி


மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, டில்லி

கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த போது ஊழல் செய்ததாக, அரவிந்த் கெஜ்ரிவால்
குற்றஞ்சாட்டினார்.இதையடுத்து, 10 கோடிரூபாய் கேட்டு, கெஜ்ரிவாலுக்கு எதிராக, அருண் ஜெட்லி அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, கெஜ்ரிவாலின் வழக்கறிஞராக இருந்த, ராம் ஜெத்மலானி, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி குறித்து, சில ஆட்சேபகரமான வார்த்தைகளை கூறினார்.
டில்லி முதல்வர் கூறிய படி, இந்த வார்த்தைகளை பயன்படுத்தியதாக, ஜெத்மலானி கூறினார். இதை தொடர்ந்து, 10 கோடிரூபாய் கேட்டு, கெஜ்ரிவாலுக்கு எதிராக, மற்றொரு அவதுாறு வழக்கை, ஜெட்லி தொடர்ந்தார்.
இந்த இரு வழக்குகளின் விசாரணைகளும், டில்லி உயர் நீதிமன்றத்தில்

Advertisement

நடக்கின்றன.முதல் வழக்கின் போது, பதிலளிக்க தாமதம் செய்ததற்காக, கெஜ்ரிவாலுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டாவது வழக்கில், நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்
பட்டது. ஆனால், நீதிமன்றம் வழங்கிய அவகாசத்தை கடந்து, தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததால், கெஜ்ரிவாலுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
05-செப்-201710:25:41 IST Report Abuse

Cheran Perumalபச்சை பக்கிரிகள் எழுதுவதை (குறிப்பா ஜெயஹிந்த்புரம் என்ற டுபாக்கூர்) விடவா கெஜ்ரிவால் அவதூறாக பேசிவிட்டார்?

Rate this:
05-செப்-201711:53:11 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்ஜெயஹிந்த்புரம் என்ற டூபாக்கூர் இங்கே மட்டும் உளறுகிறது , அதற்கு மதிப்பு இல்லை , நம்பர் டூ டுபாக்கூர் , ஆனால் இந்த கெஜ்ரிவால் நம்பர் ஒன் டுபாக்கூர் , முதல்வர் பதவியில் இருந்து உளறும் டுபாக்கூர். ...

Rate this:
05-செப்-201709:10:33 IST Report Abuse

Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை)கருப்பு பண பாதுகாவலரின் கைகளில் நாட்டின் நிதித்துறை ... கடவுள் நின்று கொல்வார்..

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
05-செப்-201708:44:29 IST Report Abuse

Srinivasan Kannaiya5,000 ரூபாய் அபராதம் ஒன்றும் பெரியது இல்லை... ஆனால் அது ஏற்படுத்தும் தாக்கம் பெரிது அல்லவா...

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X