பதிவு செய்த நாள் :
தேர்தலில் யார் போட்டியிடலாம்?
சுப்ரீம் கோர்ட் விரைவில் முக்கிய முடிவு

கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்ப ட்டோரை, எந்த நிலையில், தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது, என்பது தொடர்பான வழக்கை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றுவது குறித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தேர்தலில் யார் போட்டியிடலாம்? சுப்ரீம் கோர்ட் விரைவில் முக்கிய முடிவு

மூன்று நீதிபதிகள் அமர்வு



கிரிமினல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோர், தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது தொடர்பான வழக்குகளை, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான

, மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின் அல்லது குற்றச்சாட்டு பதிவு செய்த பின்அல்லது வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட பின், இவற்றில், எந்த சமயத்தில், ஒருவரை, தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது என்பது தொடர்பாக, இந்த வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கில் கருத்து தெரிவிக்கும்படி, மத்திய சட்டக் கமிஷனுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

விரைவில் முடிவு


'குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டவர், தேர்தலில்போட்டியிட தடை விதிக்கலாம்' என, சட்டக் கமிஷன் கூறியிருந்தது; தேர்தல் கமிஷனும் இதை ஏற்றது.
ஆனால், இதை ஏற்க, மத்திய அரசு மறுத்தது. பார்லி., நிலைக்குழுவின் கருத்தை கேட்பதாக,

Advertisement

மத்திய அரசு கூறியிருந்தது. சட்டக் கமிஷன், தேர்தல் கமிஷன் பரிந்துரையை, பார்லி., நிலைக்குழு நிராகரித்தது. 'இந்த வழக்கை, அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும்' என, மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டிருந்தது.'வழக்கை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்றுவது குறித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும்' என, அமர்வு, நேற்று தெரிவித்தது.- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
05-செப்-201714:00:09 IST Report Abuse

JeevaKiranமத்திய அரசு ஏன் மறுப்பு தெரிவிக்கணும். இதிலிருந்தே தெரியவில்லையா? அனைத்து அரசியல் வியாதிகளும் கிரிமினல்கள் என்று. பார்லி குழு என்பதும் எல்லாம் அரசியல் வியாதிகளின் கூட்டுத்தான். பின் எப்படி நாடு உருப்படும்.

Rate this:
ananda - thirunelveli,இந்தியா
05-செப்-201710:44:07 IST Report Abuse

anandaயார் வேண்டுமானாலும் யார் மேலும் குற்றம்சாட்டிடலாம் அதை நியாயப்படுத்தவும் செய்யலாம். இன்றய சூழலில் எந்த அரசியல்கட்சியும் விலக்கல்ல எந்த அரசியல் தலைவர் அல்லது தனிநபர்களோ ஊழல் லஞ்சம் கையூட்டு வாங்கமாட்டொம் என்று உறுதியளித்தால் மட்டுமே அவர்களுக்கு வோட்டு அளிக்க வேண்டும் மற்றும் வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
05-செப்-201716:55:15 IST Report Abuse

Darmavanஎல்லா உறுதியையும் அளித்து விட்டு திருடுவார்கள்.... இப்போது பதவிப்பிரமாணம் செய்யும் போது உறுதி அளிக்க வில்லையா? அப்புறம் என்ன நடக்கிறது....

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
05-செப்-201709:58:26 IST Report Abuse

நக்கீரன்மெதுவா மாத்துங்க... ஒரு பத்து வருஷம் போகட்டும். இப்ப என்ன?

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X