பதிவு செய்த நாள் :
பெரா வழக்கு, Bera Case, தினகரன்,Dinakaran, TTV தினகரன், TTV Dinakaran,சுப்ரீம் கோரட், Supreme Court of India,புதுடில்லி,New Delhi,  நீதிபதிகள்,judges, சசிகலா, Sasikala,அமலாக்கத் துறை,Enforcement Department,பிரிட்டன், UK, Britain, குற்றவியல் நீதிமன்றம், Criminal Court, சென்னை உயர் நீதிமன்றம் , madras High Court,அன்னிய செலாவணி மோசடி, Foreign Exchange Fraud, கிஷோர் சந்த், Kishore Chand, விசாரணை, Investigation,உச்ச நீதிமன்றம்,

புதுடில்லி: 'பெரா' வழக்கில், 'டிமிக்கி' கொடுக்கும் தினகரனுக்கு, உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது;மூன்று மாதத்தில், வழக்கை முடிக்க நீதிபதிகள் கெடு விதித்தனர். 'வழக்கை இழுத்தடிக்க, இது போன்ற மனுக்களை தாக்கல் செய்தால், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, நீதிபதிகள் எச்சரித்தனர்.

பெரா வழக்கு, Bera Case, தினகரன்,Dinakaran, TTV தினகரன், TTV Dinakaran,சுப்ரீம் கோரட், Supreme Court of India,புதுடில்லி,New Delhi,  நீதிபதிகள்,judges, சசிகலா, Sasikala,அமலாக்கத் துறை,Enforcement Department,பிரிட்டன், UK, Britain, குற்றவியல் நீதிமன்றம், Criminal Court, சென்னை உயர் நீதிமன்றம் , madras High Court,அன்னிய செலாவணி மோசடி, Foreign Exchange Fraud, கிஷோர் சந்த், Kishore Chand, விசாரணை, Investigation,உச்ச நீதிமன்றம்,

சசிகலாவின் அக்கா மகன் தினகரன், 1996ல், பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில், சட்ட விரோதமாக, பல கோடி ரூபாய் முதலீடு செய்தது தொடர்பாக, அமலாக்கத் துறை, இரு வழக்குகளை பதிவு செய்தது.

மனு தாக்கல்இவை, சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், 20 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. 'இந்த வழக்குகளை விரைந்து விசாரித்து மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
'இவ்வழக்குகளில் போதிய விசாரணை நடக்கவில்லை. எனவே, இவற்றை விரைந்து முடிக்க கூடாது; உயர் நீதிமன்ற

உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என கோரி, உச்ச நீதிமன்றத்தில், தினகரன் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள், ஏ.கே.கோயல், உதய் லலித் அடங்கிய அமர்வு முன், நேற்று, விசாரணைக்கு வந்தது. அப்போது, கடும் கோபமுற்ற நீதிபதிகள், வழக்கை தாமதப்படுத்துவதற்காக, இது போன்ற மனுவை தாக்கல் செய்வதா என, கேள்வி எழுப்பினர். வழக்கை இழுத்தடித்தால், 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், கண்டிப்புடன் கூறினர்.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: வழக்கை, தாமதப்படுத்தும் நோக்கில், இதுபோன்ற மனு தாக்கல் செய்வது, வியப்பளிக்கிறது. எந்த ஒரு வழக்கையும் விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று தான் விரும்புவர்.

ஏற்க முடியாதுஆனால், அதற்கு மாறாக, வழக்கை இழுத்தடிக்க விரும்புகிறீர்கள்; வழக்கை தாமதப்படுத்தும் நோக்கம் தெரிகிறது. இது போன்ற செயலை, ஏற்க முடியாது.
இந்த மனுவை திரும்ப பெறாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். இதுபோன்று வழக்கு தொடர்ந்தால், 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் எச்சரித்தனர்.
இதையடுத்து, தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள், மனுவை திரும்ப பெறுவதாக, அறிவித்தனர்.

Advertisement

பெரா வழக்கில் டிமிக்கி கொடுக்கும் தினகரனுக்கு, உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறுக்கு விசாரணை துவக்கம்


தினகரன் மீதான, அன்னிய செலாவணி மோசடி வழக்கில், குறுக்கு விசாரணை துவங்கி உள்ளது. சசிகலாவின் அக்கா மகன், தினகரன், 20 ஆண்டுகளுக்கு முன், வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்து, அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக, அமலாக்கத்துறை, சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றங்களில், இரு வழக்குகள் தொடர்ந்துள்ளது. இதில் ஒரு வழக்கு, நேற்று, மாஜிஸ்திரேட் மலர்மதி முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரன் சார்பில், மூத்த வழக்கறிஞர், குமார் ஆஜாரானார்.
அவர், அமலாக்கத்துறை சார்பில் ஆஜர்படுத்தப்பட்ட, முன்னாள் அதிகாரி, கிஷோர் சந்த் என்பவரிடம், குறுக்கு விசாரணை நடத்தினார்.இதையடுத்து, இந்த வழக்கை, மாஜிஸ்திரேட் தள்ளி வைத்தார். தினகரன் மீதான மற்றொரு வழக்கும், விசாரணைக்கு வர உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivan Mainthan - Coimbatore,இந்தியா
05-செப்-201722:35:00 IST Report Abuse

Sivan Mainthanதமிழ் நாட்டோட தலைவிதி. தலைவலி.

Rate this:
Kumar -  ( Posted via: Dinamalar Android App )
05-செப்-201720:43:03 IST Report Abuse

Kumarமுதல்ல இவனை உள்ளே தள்ளுங்க

Rate this:
sundaram - sdfasf,சியர்ரா லியோன்
05-செப்-201717:29:55 IST Report Abuse

sundaramபுடிங்க சார் இவன... புடிச்சி ஜெயில்ல போடுங்க ... இன்டர்நேஷனல் 420 ...

Rate this:
மேலும் 41 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X