அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
உட்கட்சி விவகாரம் கவர்னர் தலையிட முடியாது
உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் வாதம்

சென்னை: 'அரசுக்கு எதிராக, எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் அளிக்கவில்லை; உட்கட்சி விவகாரத் தில், கவர்னர் தலையிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண் தெரிவித்தார்.

கவர்னர் ,Governor, சென்னை உயர் நீதிமன்றம், Chennai High Court, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ,Advocate General Vijay Narayan, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy,அ.தி.மு.க.,ADMK, தினகரன், Dinakaran,எம்.எல்.ஏ, MLA, சட்டசபை, Legislative Assembly, நீதிபதி இந்திரா பானர்ஜி,Judge Indira Banerjee, நீதிபதி எம்.சுந்தர் ,Justice M. Sunder, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்,Advocate Radhakrishnan, பெரும்பான்மை, Majority,பழனிசாமி,Palanisamy, சென்னை, Chennai , உயர் நீதிமன்றம், High Court,தமிழகம் , Tamil Nadu, High Court of chennai, madras high court ,tamilnadu,

அ.தி.மு.க.,வில், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க் கள், ௧௯ பேர், கவர்னரை சந்தித்து, முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என, தனித் தனியே கடிதங்கள் அளித்தனர். இதை அடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க, சட்ட சபையை கூட்டும்படி, கவர்னருக்கு உத்தர விட கோரி,

சென்னை உயர் நீதிமன்றத்தில், வக்கீல் புகழேந்தி மனு தாக்கல் செய்தார்.மனு, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் ராதா கிருஷ்ணன், ''முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என, 19 எம்.எல்.ஏ.,க் கள் கடிதம் அளித்து உள்ளனர்; இது, அமைச்சரவைக்கு எதிரானது தான். எனவே, சட்ட சபையை கூட்ட வேண்டிய கடமை, கவர்னருக்கு உள்ளது.

''பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வருக்கு உத்தரவிடக் கோரி, எதிர்க்கட்சி தலைவரும் கவர்னருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். கவர்னர் நடவடிக்கை எடுக்காதது, குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும்,''என்றார்.

கவர்னரின் செயலர் சார்பில், அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண் வாதிட்டதாவது:அரசுக்கு எதிராக, 19 எம்.எல்.ஏ.,க்களும் கடிதம் கொடுக்கவில்லை; முதல்வருக்கு எதிராக தான் கொடுத்துள்ளனர். இது, உட்கட்சி விவகாரம்; கவர்னர் தலையிட முடியாது.

Advertisement

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல், தற்போது எழவில்லை. நீதிமன்றத்தை அணுக முடியாதவர்களுக்கா கவே, பொது நல வழக்கு தொடர முடியும்.உயர் நீதிமன்றத்தை, எதிர்க்கட்சி தலைவர் அணுக முடியும். இந்த வழக்கு, விசாரணைக்கு ஏற்பு டையது தானா என்பது குறித்து, முதலில் வாதாட வேண்டி உள்ளது. இவ்வாறு அவர் வாதிட்டார். இதை யடுத்து, விசாரணையை, அக்., 3க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.


Advertisement

வாசகர் கருத்து (27)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
L.Pannneerselvam - chennai,இந்தியா
06-செப்-201721:47:57 IST Report Abuse

L.Pannneerselvamஅட்வகேட் ஜெனரலின் சொத்தையான வாதம் இந்த 19 பேரும் கட்சிகார்ர்கள் என்பதையும்தாண்டி, எம்எல்ஏக்கள். இந்த எம்எல்ஏக்கள் எல்லாம் சேர்ந்துதான் முதலமைச்சராக பழனிச்சாமியை தேர்ந்தெடுத்தனர். அப்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டவர்கள், இப்போது முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று சொன்னால் கட்சி பிரச்சினையா? முதல்வர் மெஜாரிட்டியுடன் இருக்கவேண்டும் என்ற சட்டவிதிகளின்படிதானே இருக்கவேண்டும், ஆனால் இப்போது அது உள் கட்சி விவகாரமா? அட்வகேட் ஜெனரல் என்பதால் கோர்ட்டில் தான் எது சொன்னாலும் எடுபடும் என்று நினைக்கிறார் போலும் அதை ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், திமுக எம்எல்ஏக்கள் கேட்டார்களே, முதல்வர் சட்டசபையை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்கவேண்டும் என்று, அதற்கு கவர்னர் பதில் என்ன? உள் கட்சி விவகாரம் என்றால் ஆளும் கட்சி எம்எலஏக்கள் எப்படிவேண்டுமானாலும் இயங்கலாம், ஆதரவு தெரிவிக்கலாம், எதிர்பு தெரிவிக்கலாம் ஆனால் ஆட்சியில் முதல்வர் தொடரலாம் என்பதுதான் ஜனநாயகமா? இதுதான் சட்டமா? ஆளுநரின் பார்வையில் இதுதான் சட்டம், தார்மீகம், ஜனநாயகம் போலும்.

Rate this:
vijay - kanchipuram,இந்தியா
06-செப்-201720:15:11 IST Report Abuse

vijayஜெயலலிதா இறந்த பொது பன்னிர் சி ம் ஆனார் அப்போது சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடந்ததா

Rate this:
Balaji - Khaithan,குவைத்
06-செப்-201717:11:46 IST Report Abuse

Balajiஒரு அமர்வுக்கு அடுத்த அமர்வுக்கு எதற்காக இவ்வளவு கால அவகாசமோ தெரியவில்லை????? வழக்கு விசாரணைகள் அனைத்தும் முடிந்து தீர்ப்பு வாசிப்பதற்கு வழக்கை ஒத்திவைத்தாலும் அதில் ஒரு அர்த்தமிருக்கிறது ........... ஆனால் தேவையே இல்லாமல் எதற்காக அடுத்த இயரிங்குக்கு ஒருமாதகால அவகாசம் என்று யாரிடம் கேட்பது??????

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X