பதிவு செய்த நாள் :
உலகுக்கு முன்னுதாரணமாக இருப்போம்!
நட்புக்கரம் நீட்டிய மோடி, ஜின்பிங் உறுதி

ஜியாமென்: 'எல்லையில், எதிர்காலத்தில் எந்தப் பிரச்னைகளும் ஏற்படாமல் இரு தரப்பும் ஒற்றுமையுடன் செயல்படுவோம். ஒற்றுமையுடன், ஒருவரை, ஒருவர் மதித்து நடப்பதால், அண்டை நாடுகளுக்கு இடையே அமைதியான நட்புறவு நிலவும்; இதற்கு முன்னுதாரணமாக இருப் போம்' என, சீன அதிபர், ஜி ஜின்பிங், பிரதமர், நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளனர்.

உலகுக்கு,முன்னுதாரணமாக,இருப்போம்,மோடி,ஜின்பிங், உறுதி

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப் பிரிக்கா நாடுகள் இணைந்த, பிரிக்ஸ் கூட்ட மைப்பின் மாநாடு, சீனாவின் ஜியாமெனில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர், நரேந்திர மோடி சீனா சென்றார். டோக்லாம் எல்லைப் பிரச்னையில், இந்தியா - சீனா சமீபத்தில், சுமுகமாக தீர்வு கண்டன. அதன் பிறகு நடக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற, பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர், ஜி ஜின்பிங்கை நேற்று சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இரு தலைவர்கள் இடையேயான பேச்சு குறித்து, நம் வெளியுறவு செயலர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர்

ஜெங்க் ஷூவாங்க் ஆகியோர் கூறியதாவது: இந்தியா - சீனா இடையே உறவை அடுத்த கட்டத் துக்கு எடுத்து செல்வது குறித்து, இரு தலைவர் களும் ஆலோசனை நடத்தினர். ஒரு மணி நேரம் நடந்த இந்த பேச்சின்போது, எல்லைப் பகுதி யில் மீண்டும் எந்தப் பிரச்னைகளும் இல்லாமல், அமைதியுடன் இருப்பதை உறுதி செய்ய, இருவரும் தீர்க்கமான முடிவை எடுத்துள்ள னர்.

இது தொடர்பாக, இரு தரப்பு, பாதுகாப்பு, ராணுவம், வெளியுறவு துறைகளின் அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து, ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்றும் முடிவுசெய்யப்பட்டது.

இந்தியா - சீனா இடையே, நட்புறவுக்காக செய்யப் பட்ட பஞ்சசீல கொள்கை அடிப்படையில் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்த னர். எல்லையில், அமைதி, இணக்கமான சூழ்நிலை நிலவுவதை இருவரும் உறுதி செய்வோம்; சமீபத் தில் நடந்தது போன்ற பிரச்னை ஏற்படாமல் இருக்க, இரு தரப்பும் ஒத்துழைப்போம் என, இருவரும் தெரிவித்தனர்.
ஒற்றுமையுடன், ஒருவரை, ஒருவர் மதித்து நடப்ப தால், அண்டை நாடுகள் இடையே, அமைதியான நட்புறவு நிலவும்; இதற்கு முன்னுதாரணமாக இருப் போம், என்று மோடி ,ஜின்பெங் குறிப்பிட்டனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நாடுகளின் வளர்ச்சிக்கு 10 உன்னத கடமைகள்


பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே, வளர்ந்து வரும் நாடுகளுக்கு இடையேயான சந்தை வாய்ப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில், பிரிக்ஸ் நாடுகளுடன், சிறப்பு அழைப்பாளர்களான,

Advertisement

எகிப்து, தஜிகிஸ்தான், தாய்லாந்து, மெக்சிகோ, கென்யாவைச்சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி பேசியதாவது:


உலக மக்கள் தொகையில், 50 சதவீதம் பேர், பிரிக்ஸ் நாடுகளில் உள்ளனர். நாம் அனை வரும் இணைந்து ஒற்றுமையுடன் செயல் பட்டால், புதிய உலகத்தை உருவாக்க முடியும். நம் நாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டால்,அதன் தாக்கம் மற்ற நாடுகளிலும் இருக்கும் என்ற நோக்கத்துடனே, நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

அதற்கேற்பவே எங்களுடைய திட்டங்கள் உள் ளன.மக்களை அச்சுறுத்தும், பயங்கரவாதம், சைபர் குற்றம் போன்றவற்றை முதலில் திட்ட மிட்டு தடுக்க வேண்டும். பேரிடர் நிர்வாகத்தி லும் இணைய வேண்டும். இதை தவிர, தொழில் திறன் மேம்பாடு, டிஜிட்டல் மயமாக் கம் என, 10 முக்கிய உன்னதமான கடமைகள் நமக்கு உள் ளன. அவற்றை செயல்படுத்தி னாலே, நாடுகள் வளர்ச்சியை காணமுடியும். இவ்வாறு மோடி பேசினார்.

மியான்மர் சென்றார்

:
சீன பயணத்தை முடித்து, மற்றொரு ஆசிய நாடான மியான்மருக்கு சென்றார், பிரதமர் மோடி. அந்த நாட்டுக்கு பிரதமர் மோடி மேற் கொள்ளும், முதல், அரசு முறை பயணம் இது; மியான்மர் அதிபர், ஹின் கியாவ், அரசு ஆலோ சகர், ஆங் சான் சூகி ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். முன்னதாக, 2014ல், ஆசியான் மாநாட்டில் பங்கேற்க, மியான்மருக்கு மோடி சென்றார். ஆங் சான் சூகி, கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்திருந்தார்.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
06-செப்-201716:59:09 IST Report Abuse

r.sundaramஆக சீன பிரதமர் தோப்புக்கரணம் போட்டுவிட்டார் என்று சொல்லுங்கள். இனிமேல் பாகிஸ்தானை ஒரு கை பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
06-செப்-201712:16:25 IST Report Abuse

ganapati sbஉலக மக்கள் தொகையில் சுமார் 20 % இந்தியர்களே ஒவ்வொரு ஐந்து உலக மக்களுக்கு ஒரு இந்தியன் உள்ளான் சீனாவும் அப்படியே பிரிக்ஸ் நாடுகள் இணைத்தால் 50 % உலகமே நம் கையில் நாம்தான் மெஜாரிட்டி மற்றவர்கள் நம் வழிக்கு வந்தாக வேண்டும் பழம் பெரும் பாரம்பரிய சிறப்பு குடும்ப கலாச்சாரம் கொண்ட இரு பெரும் நாடுகளும் இணைந்தால் வெற்றி நிச்சயம் ஆனாலும் துரோகத்தால் வீழாதிருக்க விழிப்பும் அவசியம்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
06-செப்-201708:49:54 IST Report Abuse

Srinivasan Kannaiyaஜியாமென் கொண்டான் என்று பட்ட பெயர் தரலாம் நமது பிரதமருக்கு...

Rate this:
ganesha - tamilnadu,இந்தியா
06-செப்-201716:30:15 IST Report Abuse

ganeshaஅதானே பாத்தேன், வயித்தெரிச்சல் புடிச்ச ஆளுங்க, இந்தியாவுக்கு எதிரான நயவஞ்சகர்கள் இன்னும் கமெண்ட் போஸ்ட் பண்ணலேயே என்று. ...

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X