அரசியல் செய்தி

தமிழ்நாடு

சமூக நீதி காக்க ஒன்றுபடுவோம் : தலைவர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

Added : செப் 06, 2017 | கருத்துகள் (44)
Advertisement
சமூக நீதி காக்க ஒன்றுபடுவோம் : தலைவர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

சென்னை: ''அரசியல் கட்சிகளுக்குள் வேறுபாடு இருந்தாலும், சமூக நீதி காக்க, வேறுபாடுகளை மறந்து, நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்,'' என, கட்சி தலைவர்களுக்கு, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

முரசொலி பவள விழா பொதுக்கூட்டம், சென்னையை அடுத்த, கொட்டிவாக்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:சமூக நீதிக்காக போராடிய நாம், இன்று, மாணவி அனிதாவை பலி கொடுத்துள்ளோம். நாம் அனைவரும், சமூக நீதியை காக்க, இந்த விழாவில் உறுதி எடுப்போம். மாநில சுயாட்சி, சமூக நீதி மற்றும் மாநில உரிமைகளுக்கு ஆபத்து வந்துள்ளது. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கைக்கு, ஆபத்து வந்துள்ளது. கொள்கை வேறுபாடு காரணமாக, நாம் பிரிந்திருக்கலாம். எனினும், சமூக நீதியை காக்க, வேறுபாடுகளை மறந்து, நாம் ஒன்றுபட வேண்டும். அ.தி.மு.க., பிளவை பயன்படுத்தி, தமிழகத்தில், பா.ஜ., காலுான்ற முயற்சித்து வருகிறது. 'எட்டாத கனிக்கு கொட்டாவி விடாதீர்கள்' என, அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தை காப்போம்; வேற்றுமையில் ஒற்றுமை பெற்றுள்ள இந்தியாவை காக்க, உறுதி எடுப்போம். ஆட்சிக்கு வந்தால், அதை செய்வோம்; இதை செய்வோம் எனக்கூறி, பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. பிரதமராவதற்கு முன், 'கருப்பு பணத்தை ஒழிப்பேன்' என்றார்; ஒழிக்கவில்லை. 'சுவிஸ் வங்கியில் உள்ள, கருப்பு பணத்தை கொண்டு வருவேன். இந்திய குடிமகன் கணக்கில், 15 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்வேன்'என்றார்; அதுவும், நிறைவேற்றப்படவில்லை. மத்தியில் அமைந்துள்ளது மோடி ஆட்சி அல்ல. மோசடி ஆட்சி. இதை அம்பலப்படுத்த தயாராவோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

கூட்டத்தில், காங்., தமிழக தலைவர், திருநாவுக்கரசர், ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ, இ.கம்யூ., செயலர் முத்தரசன், இந்தியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹீருல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
06-செப்-201721:58:22 IST Report Abuse
Nakkal Nadhamuni சமூக நீதின்னா கழக பாஷைல கொள்ளடிச்சு பங்கு போட்டுக்கலாம்னு அர்த்தம்... அவங்கப்பா தொண்டைல ஓட்டை போடுவதற்கு முன்னாடி சொல்லிட்டு போயிருக்காரு...
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
06-செப்-201720:02:32 IST Report Abuse
Barathan திமுக உறுபட்டமாதிரிதான்.
Rate this:
Share this comment
Cancel
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
06-செப்-201717:52:34 IST Report Abuse
சூரிய புத்திரன் தி.மு.க செயல் தலைவராக இருக்கும் திரு.ஸ்டாலின் அவா் கூறிய ஜமக்காள நீதி.... மன்னிக்கவும் சமூக நீதி அடிப்படையில் கட்சியில் அவா் குடும்பத்தினா் வகித்து வரும் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகி அதே கட்சியை சோ்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சாா்ந்த தொண்டா்களுக்கு சுழற்சி முறையில் பதவியை வழங்குவாா் என்பதையும், உள் ஒதுக்கீடாக இஸ்லாமிய மற்றும் அருந்ததி இன தொண்டா்களுக்கு 3.5 % அளிப்பாா் என்று எதிா்பாா்க்கிறோம் கோடி கணக்கில் உள்ள அண்ணா அறிவாலய டிரஸ்ட் சொத்துக்களை பராமாிக்க ஒடுக்கப்பட்ட தமிழ் சமூக தொண்டா்களை நியமித்து சமூக நீதியை நிலைநாட்டுவாா் என்று திமுக தொண்டன் எதிா்பாா்க்கிறான்..... செய்வீா்களா திரு.ஸ்டாலின்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X