பொது செய்தி

தமிழ்நாடு

இன்று முதல் ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம்

Added : செப் 06, 2017 | கருத்துகள் (56)
Advertisement
அசல் ஓட்டுனர் உரிமம், Original driving license, கட்டாயம், Compulsory,டிராபிக் ராமசாமி , Trffic Ramasamy,சென்னை உயர் நீதிமன்றம், Chennai High Court,நீதிபதி இந்திரா பானர்ஜி,Judge Indira Banerjee,சென்னை, Chennai, சட்டைப்பை,Pocket, ஏ.டி.எம் கார்டு,ATM card,  போக்குவரத்து துறை ,Transport Department,    விசாரணை, Investigation,  சிறை தண்டனை , Prison, போலீஸ், police, ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ்,லைசென்ஸ், licence, madras high court ,high court of chennai,

சென்னை: 'சட்டைப்பையில், ஏ.டி.எம்., கார்டு வைத்திருப்பது போல, அசல் ஓட்டுனர் உரிமத்தையும் வைத்திருந்தால், மூன்று மாத சிறை தண்டனையில் இருந்து தப்பிக்கலாம்' என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'வாகன ஓட்டுனர்கள், செப்., 1 முதல், அசல் ஓட்டுனர் உரிமத்துடன் செல்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது' என, மாநில போக்குவரத்து துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதை எதிர்த்து, சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி உள்ளிட்டோர், சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


தள்ளி வைப்பு :


வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, 'அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பதில், என்ன பிரச்னை உள்ளது; அதை வைத்திருக்க வேண்டும்' எனக்கூறி, 8ம் தேதிக்கு, விசாரணையை தள்ளி வைத்தது.

நீதிமன்றம் விதித்துள்ள காலக்கெடு முடிந்ததால், இன்று முதல், வாகன ஓட்டுனர்கள் அசல் ஓட்டுனர் உரிமத்துடன் செல்வது கட்டாயமாகி உள்ளது. அதனால், அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவோர், மூன்று மாத சிறை தண்டனை மற்றும், 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


தப்பலாம்:

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'சட்டைப்பையில், ஏ.டி.எம்., கார்டு வைத்திருப்பது போல, அசல் ஓட்டுனர் உரிமத்தையும் வைத்திருந்தால், மூன்று மாத சிறை தண்டனையில் இருந்து தப்பிக்கலாம்' என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilarasan - Karaikudi,இந்தியா
07-செப்-201701:40:23 IST Report Abuse
Tamilarasan நீதி வழங்குவதில் தவறு இருந்தும் நீதிபதி பதவி விலகிய வரலாறு உண்டா??? காவல்துறை அனுமதி வழங்கும்போபோது நம்மிடம் அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக்கொகொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் அனுமதி ரத்து செய்யப்படும் என்று சொல்லும் உங்களை நான் கேட்கிறேன் உங்கள் கண் முன்னே எத்தனை அசம்பாவிதம் நடந்துள்ளது நீங்கள் உங்கள் பதவியை ரத்து செய்தது உண்டா??? எத்தனை ஏரி குளங்களை ஆக்கிரமித்த நயவஞ்சகர்களுக்கு பட்டா வழங்கி தங்கள் குடும்ப நலனில் மட்டுமே சிந்தனை செலுத்தி நீர் ஆதாரங்களை அழித்த வருவாய்த்துறை மற்றும் பத்திரப்பதிவுதுறை அதிகாரிகளே நீங்கள் யாரும் சிறை சென்றதுண்டா???
Rate this:
Share this comment
Cancel
Baalu - tirupur,இந்தியா
06-செப்-201714:06:10 IST Report Abuse
Baalu ATM இல்லாமல் கூட வங்கியில் பணம் எடுக்க முடியும். ஓட்டுநர் உரிமம் தொலைந்தால் எப்படி வண்டி ஓட்டுவது. இரண்டையும் இணைத்து பேசுபவர்கள் முட்டாள்கள்.
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
06-செப்-201716:47:16 IST Report Abuse
Sanny நீ முதல்ல திருந்து, எதுக்கு தொலைக்கணும். இதுவரை எத்தனை லட்சம் ரூபாய்களை தொலைத்திருப்பாய், ஒரே தொலைக்கிற கேஸ் போல....
Rate this:
Share this comment
Cancel
jayaraman - attayampatti,இந்தியா
06-செப்-201713:48:17 IST Report Abuse
jayaraman சட்டம் இயற்றுபவர்கள் அனைவருமே மிக வசதியான AC கார்களிலும் விமானத்திலும் மட்டுமே பயணம் செய்பவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சாமானியர்களின் கஷ்டங்கள் என்றுமே புரிவதில்லை . பர்ஸ் ல் வைத்துக் கொள்ளும் ஒரிஜினல் லைசென்ஸ் ம் நான்கு நாட்களில் பல் இளித்து விடும் . அதன் பிறகு அதில் முகமோ எழுத்துக்களோ தெரிய போவதில்லை . ATM கார்டு மட்டும் ஒன்றும் ஆகாதா என கேட்டால் அதனை எளிதாக வங்கியில் பெற்றுக் கொள்ளலாம் . ஆனால் ஒரிஜினல் லைசென்ஸ் பெற ஒரு நாள் முழுதும் அலைய வேண்டும் . அதுவும் திருடன் கையில் சாவியை கொடுக்கும் கதை நடை பெறப் போகிறது
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
06-செப்-201716:49:11 IST Report Abuse
Sanny சகோதரா உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்கணும், தொலைத்தவன் அலையனும். அப்போ தான் அடுத்தமுறை தொலைக்கமாட்டான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X