சாலை விபத்து: சீனாவை மிஞ்சியது இந்தியா

Updated : ஜூன் 15, 2010 | Added : ஜூன் 13, 2010 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி :கடந்த சில ஆண்டுகளாக, சாலை விபத்துகள் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. மக்கள் தொகையில் முதலிடம் வகித்து வரும் சீனாவை விட, இரண்டாமிடத்தில் இருக்கும் இந்தியா, சாலை விபத்தில் முந்தி விட்டது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.கடந்த 2006ல் சாலை விபத்தில் சீனாவை இந்தியா மிஞ்சி விட்டது. 2008ல் மட்டும் ஒரு லட்சத்து 18 ஆயிரம் சாலை விபத்துகள் இந்தியாவில்
Road accudent,india,china,சாலை விபத்து,சீனா,இந்தியா

புதுடில்லி :கடந்த சில ஆண்டுகளாக, சாலை விபத்துகள் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. மக்கள் தொகையில் முதலிடம் வகித்து வரும் சீனாவை விட, இரண்டாமிடத்தில் இருக்கும் இந்தியா, சாலை விபத்தில் முந்தி விட்டது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.கடந்த 2006ல் சாலை விபத்தில் சீனாவை இந்தியா மிஞ்சி விட்டது. 2008ல் மட்டும் ஒரு லட்சத்து 18 ஆயிரம் சாலை விபத்துகள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 40 சதவீதம் அதிகம். இதற்குப் பல காரணங்களை அடுக்குகின்றனர் நிபுணர்கள்.


நிபுணர்கள் கூறுவதாவது:சாலை அமைப்பதில் மோசமான திட்டமிடுதல், சட்டத்தை முழுமையாக அமல்படுத்தாதது, லாரிகள், கார்கள் இவற்றோடு பயிற்சியே பெறாத டிரைவர்கள் இவர்களின் எண்ணிக்கை தாறுமாறாக பெருகி வருவது இவைதான் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன.சாலைகளில் அலட்சியமான பயணம், நடைபாதைகளுக்கு அருகிலேயே கனரக வாகனங்கள் செல்வது, மக்களிடையே சாலை விதிமுறைகள் பற்றிய போதுமான அடிப்படை அறிவு இல்லாதது இவையும் சாலை விபத்துகள் நிகழக் காரணமாகின்றன.சாலை விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டிய போலீசாரே பல சமயங்களில் அதைக் கண்டு கொள்வதில்லை. விபத்துக்குக் காரணமானவர்களுக்கு மிகக் குறைந்தபட்சத் தண்டனை மட்டுமே வழங்கப்படுகிறது.


அதோடு, வாகன உரிமம் பெறுவது என்பது மிக எளிதாகி விட்டது.சாலை விதிகளை மீறுவோர் மீது போக்குவரத்துப் போலீசார் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். சில நேரங்களில் சாலைக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களின் கண்முன்னால் பொதுமக்கள் சாலை விதிகளை மீறும்போது அவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விடுகிறது.விபத்தால் பாதிக்கப்பட்ட சிலர் ஒன்றிணைந்து சாலைப் பாதுகாப்பு மற்றும் மிதமான வேகத்தில் பயணம் இவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும் அது பரந்த அளவில் நிகழவில்லை.பல போலீஸ் நிலையங்களில் ஒரே ஒரு ஜீப் மட்டும்தான் உள்ளது.


விபத்து வழக்குகளில் துப்பு துலக்க வேண்டும் என்று போலீசார் நினைத்தாலும் அதற்கான வசதிகள் அவர்களுக்கு இல்லை. லாரிகள் அளவுக்கு மீறி பாரம் ஏற்றிக் கொண்டு, மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் மட்டுக்கு மீறிய வேகத்துடன் செல்வதும் தடுக்கப்பட வேண்டும்.இதுகுறித்துப் பல்வேறு பகுதிகளில் மக்கள் புகார் அளித்தாலும் நிர்வாகமோ அரசியல் தலைவர்களோ கண்டுகொள்வதில்லை. பொறுப்பைத் தட்டிக் கழிப்பதில் தான் முனைந்து நிற்கின்றனர்.இவ்வாறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dyna - salem,இந்தியா
26-டிச-201010:45:40 IST Report Abuse
dyna சாலை விதிகளை பற்றி அரசாங்கம் மட்டும் நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது நாம் ஒவ்வொருவருக்கும் அக்கறை வேண்டும் . அறிவுரைகள் அடுத்தவருக்கு மட்டும் என்று இல்லாது நாம் ஒவ்வொருவரும் கடைபிடித்தாலே விபத்தை குறைக்கலாம்.
Rate this:
Cancel
சஞ்சீவ் - bangalore,இந்தியா
17-ஜூன்-201016:06:06 IST Report Abuse
 சஞ்சீவ் இ ஸ்ரீகாந்த் அவர்களே, ஒன்னு மறந்துட்டீங்க இது இந்தியா, தமிழ்நாடு, ஆனா ஒன்னு கவனிச்சீங்களா அவனுங்க தப்பான ரூட்ட்ல வந்தாலும் அதுலயும் இடது பக்கம் மாத்திரம் வண்டியோட்டி வருவதை அது அவனுங்களுக்கு இருக்குற RTO பயத்தை காட்டுல? அப்போ RTO ஆபீசுல என்ன புடிங்கிட்டு இருக்காங்களான்னு கேக்குறீங்களா? எனக்கு அந்த ஒரு விஷயம் மாத்திரம் புரிய மாட்டேங்குது
Rate this:
Cancel
முஜீப் - ABUDHABI,இந்தியா
14-ஜூன்-201021:12:16 IST Report Abuse
 முஜீப் தூதுவளை இலைகளை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, ஒரு தேக்கரண்டி பொடியை 1 டம்ளர் பசும்பாலில் கல‌ந்து ‌தினமு‌ம் காலையில் மட்டும் குடித்து வர நாவறட்சி, கபநீர், மூட்டு வலி, காசநோய் குணமாகும். தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, கடைந்தோ உண்டு வரக் கபக் கட்டு நீங்கி உடல் பலம் பெறும். தூதுவளை இலையைச் சாறு பிழிந்து அதேயளவு நெய்யில் காய்ச்சி 1 தேக்கரண்டியளவு 2 வேளை குடித்து வர, எலும்புருக்கிக் காசம், மார்புச் சளி உடனே நீங்கும். தூதுவளைக் காயை நிழலில் உலர்த்திக் காயவைத்து தயிர், உப்பு சேர்த்து பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உணவுடன் உண்டு வர மனநலம் பாதிப்பு, இதய பலவீனம், மலச்சிக்கல் குணமாகும். தூதுவளைப் பூக்கள் 10 எடுத்து 1 டம்ளர் பாலில் காய்ச்சி வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்து 48 நாட்கள் இருவேளை குடித்து வர, தாது விருத்தி, உடல் பலம், முகவசீகரம் பெறலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X