மாற்றாந்தாய் மனப்பான்மையில் மத்திய அரசு : நரேந்திர மோடி

Updated : ஜூன் 14, 2010 | Added : ஜூன் 13, 2010 | கருத்துகள் (24)
Share
Advertisement
பாட்னா :"பா.ஜ., ஆளும் மாநிலங்களைப் பொருத்தவரையில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது' என்று, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த பா.ஜ., செயற்குழு மாநாட்டில், மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாட்சி பற்றிய தீர்மானம் கொண்டு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி,
Central goverment, treatment,good,narendra modi, மாற்றாந்தாய் மனப்பான்மை,மத்திய அரசு,மோடி

பாட்னா :"பா.ஜ., ஆளும் மாநிலங்களைப் பொருத்தவரையில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது' என்று, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.


பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த பா.ஜ., செயற்குழு மாநாட்டில், மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாட்சி பற்றிய தீர்மானம் கொண்டு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அதுகுறித்துப் பேசியதாவது:மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் பற்றி சர்க்காரியா கமிஷனில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.குறிப்பாக, கவர்னர் மற்றும் மாநிலத் தலைமை நீதிபதி நியமனம் குறித்து பா.ஜ., ஆளும் மாநிலங்களிடம் மத்திய அரசு கலந்து பேசுவதில்லை. ஆனால், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இவ்விஷயத்தில் சர்க்காரியா கமிஷன் பரிந்துரைப்படி, மாநில அரசுகளைக் கலந்து பேசியபின்பே நியமனங்கள் நடந்தன.குஜராத் சட்டசபையில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பின்பும், அவை கவர்னர் அல்லது மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் கூட்டாட்சித் தத்துவத்தை நீர்த்துப் போகச் செய்து விடும்.பா.ஜ., ஆளும் மாநிலங்களிடம் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் நடந்து கொள்கிறது.இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.


போபால் விஷவாயு வழக்கில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு குறித்து, மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.


அதில், "ஓர் அமெரிக்கர் அல்லது வேறு எந்த நாட்டுக் குடிமகனையும் ஒப்பிடுகையில், இந்தியக் குடிமகனின் உயிர் ஒன்றும் மலிவானதல்ல. போபால் வழக்கில் வெளியான தீர்ப்பு, அந்தக் கொடூரத்தால் பாதிக்கப்பட்டு உயிர்வாழ்ந்து கொண்டிருப்பவர்களை சிக்கலில் ஆழ்த்தியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் என்ன நீதி வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனரோ அதைத் தர வேண்டிய அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


பா.ஜ., பொதுச் செயலர் ஆனந்த் குமார் கொண்டு வந்த தீர்மானத்தில், ஆளும் கட்சிக்கு சாதகமாக சி.பி.ஐ., பயன்படுத்துவது குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதில், சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு எதிரான வழக்குகளையும் சி.பி.ஐ., நீர்த்துப் போகச் செய்து விட்டது' என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் நிறைவுரையாற்றிய மூத்த தலைவர் அத்வானி, "சீனா, பாகிஸ்தான் எல்லை தாவா விஷயங்களில் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு பொறுப்பற்று நடந்து கொள்கிறது' என்று குற்றம்சாட்டினார்.


Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HANEEF - SECONDARIYA,எகிப்து
15-ஜூன்-201000:23:20 IST Report Abuse
 HANEEF கோத்ரா ரயில் சம்பவம் இயற்க்கையானது என்று ஆராய்ந்து அரசு சொல்லியும் அதற்க்கு வருந்தாத மோடியே .அங்கு இஸ்ரேல் சியோனிஸ்டுகள் கூட கூட்டு சேர்ந்து கற்பழிப்பு ,கொள்ளை ,கொலை .என ஒரு இன அழிப்பை முன்னின்று நடத்தி 6000 மக்களை கதறகதற கொன்று குவித்து ஒன்றும் நடக்காததை போல் உன்முகபாவத்தை வைத்தாலும் நீ நடத்திய நரபலியை உன்குடும்பம் அனுபவித்தால் எப்படி இருந்து இருக்கும் என்பதை நினை நீ மனிதனாக இருந்தால் ,குஜராத் பாமரமக்களின் மனதில் வக்கிரத்தை வளர்த்து . பல ஆண்டுகள் மூளை சலவைசெய்து இந்தியாவிலேயே அந்த மண்ணின்மைந்தர்களை அகதிகளாக்கிய அயோக்கியன் நீ உன் ஹிந்துத்வாவின் நீதியை காட்டிவிட்டாய், கருணையே நிறைவான இறைவனும் அவன் நீதியை அவன்பால் இருந்து காட்டுவான் பொறுத்திரு . அக்கிரமக்காரர்களுக்கு ஆயுள் என்றுமே அதிகம் ,ஏன் என்றால் இன்னும் அனுபவிக்கவேண்டியதை அனுபவிக்கனுமே
Rate this:
Cancel
ச நாராயணசுவாமி - Doha,கத்தார்
14-ஜூன்-201022:20:14 IST Report Abuse
 ச  நாராயணசுவாமி திப்பு சொல்வதை கேட்டால் சிரிப்புதன் வருது. இவரு வாழும் நாட்டில் நமது இந்தியர்களை நாயை போல நடத்துவது உலகம் அறிந்த உண்மை. கோத்ரா ரயில் பயணிகளின் சாபம் உன் போன்றோரை சும்மா விடாது. ராகவன், உண்மை என்னவென்று தெரிந்துகொண்டு பேசவேண்டும். மோடி அரசு நல்லாட்சி saigiradhu
Rate this:
Cancel
Ravi - Mysore,இந்தியா
14-ஜூன்-201021:14:24 IST Report Abuse
 Ravi மோடி ஒரு நல்ல ஆட்சியாளர் . குஜராத்தில் பவர் கட் இல்லை., மது இல்லை , ரோடு நன்றாக உள்ளது . குஜராத்தி ஒரு செம்மொழி என்று கூறி 1000 கோடி செலவு செய்ய வில்லை. இலவச டிவி போன்ற ஏமாற்று சம்சாரம் இல்லை. கிங் சுல்தான் அவர்களே மோடி பற்றி மற்றும் குஜராத் பற்றி பேசுமுன் அங்கே Poiய் வாருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X