சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை சீரழித்த காமுகர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு

Added : செப் 08, 2017
Advertisement

சென்னை: மயக்க ஊசி செலுத்தி, 15 வயது சிறுமியை சீரழித்த காமுகர்கள் மீது, பாலியல் வன் கொடுமை வழக்கு பதிந்து, போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர், ராணி. கணவர் இறந்ததால், இரு மகன்களுடன் சென்னைக்கு வந்த ராணி, கோயம்பேட்டில் தங்கி, அங்குள்ள தனியார் வங்கியில், துப்புரவு ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன், ராணி சொந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவிற்கு, மகள்களுடன் சென்றிருந்தார். அங்கு வந்திருந்த, வேலுார் மாவட்டம், ஆரணியைச் சேர்ந்த, உறவுக்கார பெண் சித்ராவுடன், ராணியின், 15 வயதான மூத்த மகளுக்கு, பழக்கம் ஏற்பட்டது.
பின், சென்னைக்கு வந்ததும், மொபைல் போன் வாயிலாக, ராணியின் மூத்த மகளை சித்ரா பேசி, ஆரணியில் உள்ள, ஜவுளிக்கடையில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டியுள்ளார்.
பின், சுரேஷ் என்பவர் வழியாக, ராணியின் மூத்த மகளை ஆரணிக்கு, வேனில் கடத்தி சென்றுள்ளார். தன் வீட்டில், சுரேஷுடன் கட்டாய உறவு கொள்ள வைத்து, சித்ரவதை செய்துள்ளார். சுரேஷ் மற்றும் சித்ரா, அந்த சிறுமியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, பலருக்கு, 'இரை'யாக்கியுள்ளனர். மயக்க ஊசி செலுத்தி, ஆரணியில் உள்ள அரசு டாக்டர் ஒருவரின் காமப் பசிக்கும், சிறுமியை இரையாக்கி உள்ளனர். சித்ரா மற்றும் சுரேஷ் உள்ளிட்டோரின் பிடியில் சிக்கி தவித்த சிறுமியை, சித்ராவின் சகோதரர் குமார் மீட்டு, ராணியிடம் ஒப்படைத்துள்ளார். இது குறித்து, ராணி, நேற்று முன்தினம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
திருமங்கலம் மகளிர் போலீசார், குழந்தைகளுக்கு எதிரான பாலியன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, அரசு டாக்டர் உள்ளிட்ட காமுகர் களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X