மெக்சிகோவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் : பலி 61 ஆனது

Updated : செப் 09, 2017 | Added : செப் 09, 2017 | கருத்துகள் (15)
Advertisement
மெக்சிகோ,Mexico,  நிலநடுக்கம்,  Earthquake,  தெற்கு கடற்கரை, South Beach, டபாஸ்கோ,Tabasco,  ஆக்சகா , Axaha,  சியாபஸ்,Ciapus, அதிபர் என்ரிக்யூ நினா நியடோ, President Enrique Nina Niedo,

மெக்சிகோ : மெக்சிகோவின் தெற்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
டபாஸ்கோ, ஆக்சகா மற்றும்சியாபஸ் உள்ளிட்ட மாகாணங்களில் பெரிய அளவில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. ரிக்டர் அளவுகோலில் 8.1 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கத்தால் 200 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் என்ரிக்யூ நினா நியடோ தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு நாள் முழுவதும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும், கொடிகள் அரைகம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அதிபர் அறிவித்துள்ளார். கட்டிடங்கள் பலவும் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகி உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.ANNADURAI - madurai ,இந்தியா
09-செப்-201715:11:46 IST Report Abuse
M.ANNADURAI மெக்ஸிகோ மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள், இந்த இடர்பாட்டிலிருந்து மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
09-செப்-201712:16:25 IST Report Abuse
ரஞ்சித் 7 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்....
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
09-செப்-201711:15:55 IST Report Abuse
Mohamed Ilyas நோர்த் கோரிய ஒரு ஹைட்ராஸின் குண்டு சீன ஒரு அணு குண்டு அமெரிக்கா ஒரு ஆட்டம் bomb என்று போய் கடலில் போட்டு டெஸ்ட் பண்ணு போகம்பம் வராம வசந்த காற்றை வீசும் அமைதி தேசத்தின் சொந்த காரர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X