தேர்தல் வரும் போது பா.ஜ., கூட்டணி குறித்து பரிசீலனை: முதல்வர் பழனிசாமி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் வரும் போது பா.ஜ., கூட்டணி குறித்து பரிசீலனை: முதல்வர் பழனிசாமி

Updated : செப் 09, 2017 | Added : செப் 09, 2017 | கருத்துகள் (62)
பா.ஜ., BJP,உள்ளாட்சி தேர்தல்,Local body elections,  முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, ஸ்டாலின், Stalin, ஜெயலலிதா, Jayalalithaa,அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,Minister Rajendra Balaji,  அதிமுக, ADMK, சுப்ரீம் கோர்ட்,Supreme Court, நீட், Neet, neet exam,neet 2017

காஞ்சிபுரம்: உள்ளாட்சி தேர்தல் வரும் போதுதான் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச முடியும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் சின்னையன்சத்திரம் பகுதியில் முதல்வரிடம், உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.


பெரும்பான்மை:

அதற்கு முதல்வர் அளித்த பதில்: தேர்தல் வரும் போதுதான் கூட்டணி குறித்து பேச முடியும். பொதுக்குழு குறித்த வழக்கு கோர்ட்டில் உள்ளது. அதிமுக அரசு பெரும்பான்மையாக உள்ளது. அதிமுகவிற்கு 134 எம்எல்ஏக்கள் உள்ளனர். ‛நீட்' போராட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிவிட்டது. ஆட்சியை அகற்ற வேண்டும் என 7 மாதங்களாக ஸ்டாலின் கூறி வருகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்து 7 மாதங்களான நிலையில், ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை, நிறைவேற்ற அவரது வழியில் பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X