பொது செய்தி

தமிழ்நாடு

யு.ஜி.சி., நிபந்தனைகளை ரத்து செய்தால் கல்வி தரம் பாதிக்கும்

Added : பிப் 11, 2011
Advertisement

மதுரை : சட்ட கல்லூரி விரிவுரையாளர் பணிகளுக்கான பல்கலை மானிய குழு நிர்ணயித்த நிபந்தனைகளை ரத்து செய்தால் கல்வியின் தரம் பாதிக்கப்படும் என மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது. மதுரையை சேர்ந்த திரவியபாண்டியன், சுரேஷ் உட்பட 13 பேர் தாக்கல் செய்த மனு: நாங்கள் சட்ட கல்லூரிகளில் தற்காலிக விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வருகிறோம். தமிழக சட்ட கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப சட்ட கல்வி இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விரிவுரையாளர் பணிக்கு எம்.எல்., படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும், நெட், ஸ்லெட் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந் நிபந்தனைகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், ஆர்.சுப்பையா பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: பல்கலை மானிய குழு கல்வியின் தரத்தை மேம்படுத்திட, இத்தகைய நிபந்தனைகளை விதித்துள்ளது. அதை ரத்து செய்ய முடியாது. அதில் மாற்றம் செய்யவும் இயலாது. சட்ட கல்லூரிகளிலுள்ள காலி இடங்களை மூன்று மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும், என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X