பொது செய்தி

தமிழ்நாடு

கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை; அதிகாரிகள் வியப்பு

Added : பிப் 11, 2011
Advertisement
கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை; அதிகாரிகள் வியப்பு

ஊட்டி: ஊட்டி இளைஞர் ஒருவர் கண்களில் இரு நாணயங்கள் வைத்து, 710 ஸ்டிராக்களுடன் 25 கிலோ எடையை வாயில் தூக்கி சாதனை படைத்தார்.


ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (28). விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் மிகுந்த இவர் பல்வேறு சாதனைகள் படைத்து கின்னஸ் மற்றும் லிம்கா சாதனை புத்தகங்களில் இடம் பெறுவதை லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.இதன் பேரில், இவர் கடந்த ஐந்தாண்டுகளாக பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். கடந்த 2004ம் ஆண்டு கும்பகோணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த குழந்தைகள் நினைவாகவும், தீ குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி, கொட்டும் மழையில் 24 மணிநேரம் தொடர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். பின்னர், 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி லயன்ஸ் சங்கம் சார்பில் நடந்த விழாவில், 360 ஸ்டிராக்களை 7 நிமிடங்கள் வாயில் வைத்து சாதனை படைத்தார். பின்னர் பல முறை தனது சாதனைகளை தானே முறியடித்தார்.


கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி, ஊட்டியில் நடந்த சுதந்திர தின விழாவில் 700 ஸ்டிராக்கள் 5 நிமிடங்கள் வாயில் வைத்து சாதனை படைத்தார். இதற்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த திருமூர்த்தி என்பவர் 1976ம் ஆண்டு 356 ஸ்டிராக்கள் 5 நிமிடங்கள் வாயில் வைத்திருந்தது சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில், அந்த சாதனையை முறியடித்து 700 ஸ்டிராக்களை 5 நிமிடங்கள் வைத்து பிரசாத் கடந்த 2009ம் ஆண்டு "லிம்கா' சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.


இந்தாண்டு புதிய "ஹாட்ரிக் சாதனை' படைத்து மீண்டும் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் முயற்சியின் முதற்கட்டமாக, நேற்று ஊட்டி கிரசண்ட் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தனது இரு கண்களிலும் இரு நாணயங்கள் வைத்து, வாயில் 710 ஸ்டிராக்களுடன், 25 கிலோ எடையை 5 நிமிடங்கள் தூக்கினார். இந்த சாதனை நீலகிரி கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X