கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொதுக்குழு தீர்மானங்கள்: கோர்ட் உத்தரவுக்கு கட்டுப்பட்டது

Added : செப் 12, 2017 | கருத்துகள் (19)
Advertisement
பொதுக்குழு, General Council, அ.தி.மு.க.பொதுக்குழு,AIADMKGeneralCouncil,  சென்னை உயர் நீதிமன்றம் ,Chennai High Court, முதல்வர் பழனிசாமி ,Chief Minister Palanisamy,வெற்றிவேல்,Vetrivel, பன்னீர்செல்வம்,Panneerselvam,  நீதிபதி, Judge,நீதிபதி சி.வி.கார்த்திகேயன், Judge CV Karthikeyan, சென்னை,Chennai, தீர்மானங்கள்,Decisions, கோர்ட்,Court,

சென்னை: சென்னையில், இன்று நடக்க உள்ள அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. பொதுக்குழுவில் எடுக்கும் முடிவுகள், வழக்கின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் பழனி சாமி தலைமையிலான அணியும், பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இணைந்ததை தொடர்ந்து, சென்னையில், இன்று பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

'அ.தி.மு.க., பெயரை பயன்படுத்தக் கூடாது; பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்' எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் மனு தாக்கல் செய்தார்.

மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவு: கட்சிக்கு பொறுப்பேற்றிருப்பதாக கூறி, இவ்வழக்கில், எதிர்மனுதாரராக தினகரன் சேர்க்கப்பட்டுள்ளார். பல வழக்குகளில், மனுதாரராக இருக்க வேண்டியவரை, எதிர்மனுதாரராக சேர்க்கின்றனர். இவ்வாறு பின்பற்றப்படும் நடைமுறை கண்டிக்கத்தக்கது. இத்தகைய பின்னணியில், தினகரனை, எதிர்மனுதாரராக சேர்த்திருக்கலாம்.மனுதாரர், மூன்று விஷயங்களை தேர்ந்தெடுக்கலாம். தனிப்பட்ட முறையிலோ, எம்.எல்.ஏ., என்ற முறையிலோ, பொதுக்குழுவில் கலந்து கொள்ளலாம்; அல்லது குடும்பத்துடன் வீட்டில் இருந்து, மதிய உணவு, மாலை சிற்றுண்டி சாப்பிட லாம்; அல்லது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, முன்னர் செய்த தொழிலுக்கு செல்லலாம்.

எம்.எல்.ஏ., - எம்.பி., தாக்கல் செய்யும் வழக்கு, தலைமை நீதிபதியின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட வேண்டும் என, சுற்றறிக்கை உள்ளது. தலைமை நீதிபதியின் அனுமதியின்றி, இம்மனுவை, பதிவுத்துறை அனுமதித்துள்ளது.

தடை கோரிய மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு, ஒரு லட்சம் ரூபாய், வழக்கு செலவு தொகை விதிக்கப்படுகிறது. இதை, தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த, நீதிபதிகள் ராஜிவ் ஷக்தர், அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' நேற்றிரவு, 9:20 மணிக்கு பிறப்பித்த உத்தரவு: பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த, தனி நீதிபதியின் உத்தரவில், நாங்கள் உடன்படுகிறோம். இந்தக் கூட்டத்தில், எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், அது, வழக்கின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது. எனவே, பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கவோ, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கவோ கோரியதை நிராகரிக்கிறோம்.

மேல்முறையீட்டு வழக்கில், எதிர் தரப்பில் உள்ளவர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இரண்டு வாரங்களில், அவர்கள் பதிலளிக்க வேண்டும். அதற்கு, மனுதாரர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கலாம். இவ்வழக்கு விசாரணை, அக்., ௨௩க்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (19)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Kalyani S - Ranipet,இந்தியா
12-செப்-201714:53:59 IST Report Abuse
Kalyani S "இந்தக் கூட்டத்தில், எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், அது, வழக்கின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது".................. ஜெயாவாலேயே அனுமதி மறுக்கப்பட்ட நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் தொடங்க இந்த அரசு அனுமதி வழங்கவில்லை என்றால் இறுதி உத்தரவு எப்படி இருக்கும் என்று EPS க்கு தெரியும். எனவே நவோதயா பள்ளிகளில் சேர மாணவர்களே தயாராகுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
12-செப்-201713:12:54 IST Report Abuse
Appu கோர்ட்டின் இறுதி தீர்ப்பு தமிழகத்தை கொல்லைபுறமாக ஆண்டு கொண்டிருப்போருக்கு மிக சாதகமாக அமையும்...பொறுத்திருந்து பாருங்கள்...
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
12-செப்-201713:11:40 IST Report Abuse
Appu கோர்ட் இப்ப எல்லாம் குறிப்பிட்ட கட்சியின் செம்பாக மாறி அவர்களுக்கு சாதகமான பதில்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தருவதை மக்கள் பலரும் அறிவர்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X