வட மாநிலங்களில் தமிழ்நாடு தினம் பிரதமர் மோடி புது யோசனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வட மாநிலங்களில் தமிழ்நாடு தினம் பிரதமர் மோடி புது யோசனை

Added : செப் 12, 2017 | கருத்துகள் (173)
நரேந்திர மோடி,Narendra modi, தமிழ்நாடு தினம், Tamilnadu Day,வேற்றுமையில் ஒற்றுமை,unity in diversity, சுவாமி விவேகானந்தர் , Swami Vivekananda, மாணவர்கள் ,Students, தீன்தயாள் உபாத்யாய் ,Deendayal Upadhyay,    வீடியோ கான்பரஸ், Video Conference,தமிழகம், Tamil Nadu, கேரளா,  Kerala, மோடி,Modi, பிரதமர் நரேந்திர மோடி ,Prime Minister Narendra Modi, அமெரிக்கா, USA,சிகாகோ,Chicago,

"வேற்றுமையில் ஒற்றுமையே நம் சிறப்பு. வட மாநிலங்களில், தமிழ்நாடு தினத்தை ஏன் கொண்டாடக் கூடாது," என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அமெரிக்காவின் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றியதன், 125வது ஆண்டு மற்றும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு, மாணவர்கள் இடையே, பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார். டில்லியில் நடந்த நிகழச்ச்யில், 'வீடியோ கான்பரஸ்' மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக மாணவர்களிடம், தமிழில் வணக்கம் கூறி, அசத்தினார் மோடி.

நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் நாட்டின் பெருமை. ஆனால், அதை நாம் முறையாக கொண்டாடுகிறோமா, கடைபிடிக்கிறோமா? ஒவ்வொரு மாநிலம் குறித்தும், ஒவ்வொரு மொழி குறித்தும், நாட்டு மக்கள் அனைவரும் பெருமை அடைந்தால் தான், அது சாத்தியமாகும்.

தமிழ்நாடு தினத்தை ஹரியானாவிலும், பஞ்சாபில் உள்ள பள்ளி, கல்லூரியில், கேரளா தினத்தையும் ஏன் கொண்டாடக் கூடாது. அவ்வாறு அந்த மாநில நாள் கொண்டாடும்போது, அந்த மாநிலம் மற்றும் மொழியின் பாரம்பரியம், கலாசாரத்தை அனைவரும் தெரிந்து கொள்ள முடியும்.

அந்த நாளில், அந்தந்த மாநிலத்தின் உடையை அணிந்தும், அந்த மாநில மொழியில் பாடல் பாடியும், நடனமாடியும் கொண்டாடலாம். தமிழகம், கேரளாவில் உள்ளதுபோல், கைகளால் அரிசி சாதத்தை சாப்பிடுவது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும். அந்த மொழிகளில் உள்ள சினிமாவையும் பார்க்க வேண்டும்; இது முடியாத விஷயமல்ல. அனைவரும் ஒரு அடி எடுத்து வைத்தால், இது சாத்தியமே.இவ்வாறு அவர் பேசினார்.

- நமது சிறப்பு நிருபர் -

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X