அரசியல் செய்தி

தமிழ்நாடு

செப்.,18 ல் சென்னை வருகிறார் கவர்னர்

Added : செப் 14, 2017 | கருத்துகள் (9)
Share
Advertisement
கவர்னர், வித்யாசாகர் ராவ், சென்னை,

சென்னை: பரபரப்பான சூழ்நிலையில் மும்பை சென்ற கவர்னர் வித்யாசாகர் ராவ் வரும் திங்கட்கிழமை சென்னை வர உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்று கொண்டதை தொடர்ந்து அரசின் மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என கவர்னர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை(செப்.,9) ஸ்டாலின் உள்ளிட்டோர் கவர்னரை சந்தித்து மனு அளித்து கெடு விதித்தனர். இதன் பின்னர் அவர் மும்பை கிளம்பி சென்றார். இந்நிலையில், கவர்னர் வித்யாசாகர் ராவ் வரும் திங்கட்கிழமை(செப்., 18) சென்னை வர உள்ளதாக தமிழகஅரசின் வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
15-செப்-201701:14:25 IST Report Abuse
Arachi மக்களே காலங்கள் வீணாகிக்கொண்டிருக்கின்றன இந்த வீணாப் போனவர்களால். தமிழகத்தை படுகுழியில் தன் சொந்த நலனிற்காக தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Cancel
selva - mumbai,இந்தியா
14-செப்-201719:41:58 IST Report Abuse
selva இந்த பொம்மை ஆளுநர் வந்தால் என்ன வராவிட்டால் என்ன . ஜெயா இருக்கும் போதே ஒரு கேரளா ஜோசியர் சொன்ன செய்தி வெகு விரைவில் நிஜம் ஆகும் போல இருக்கிறது . 2017. ADMK. சிதறும், கட்சியே காணாமல் போகும் என்று சொன்னார் , அது கண்முன்னே தெரிகிறது ஆனால் பிச்சர் கிளியரன்ஸ் இல்லாமல் மங்கலாக தெரிகிறது விரைவில் சரியாகிவிடும் . இவர்களின் ஆட்டத்தை மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் . ஆனால் ஒன்று மட்டும் நிச்சியம் 2018.இல் ADMK. என்ற கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போகும் . அதற்க்கு இவர் ( ADMK. ) கட்சி காரர்களே கரணம் .
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201719:12:53 IST Report Abuse
Srinivasan Kannaiya பாவம் சென்னைக்கும் பாம்பேக்கும் ஷட்டில் அடிப்பதே அவர் பொழப்பாக ஆகிவிட்டது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X