அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி போட்ட பிச்சையா : தமிழிசை ஆவேசம்

Added : செப் 15, 2017 | கருத்துகள் (10)
Advertisement
கருணாநிதி போட்ட பிச்சையா : தமிழிசை ஆவேசம்

சென்னை: ''நான் மருத்துவம் படித்தது, கருணாநிதி போட்ட பிச்சை என, ஸ்டாலின் கூறியிருப்பது தவறு,'' என, பா.ஜ., மாநில தலைவர், தமிழிசை தெரிவித்துள்ளார்.
மருத்துவ சேர்க்கைக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு தொடர்பாக, தமிழகத்தில், பா.ஜ.,வுக்கும், எதிர் கட்சிகளுக்கும் இடையே, வார்த்தை மோதல் வெடித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, 'தமிழிசை மருத்துவ படிப்பில் சேர்ந்தது, கருணாநிதி போட்ட பிச்சை' என, ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.

இதுகுறித்து, தமிழிசை நேற்று, சென்னையில் அளித்த பேட்டி: நான் மருத்துவ படிப்பில் சேர்ந்தபோது, எம்.ஜி.ஆர்., தான் முதல்வராக இருந்தார். அப்போது, நேர்முக தேர்வு மட்டுமே அமலில் இருந்தது. நான் எந்த தேர்விலும், 'அரியர்ஸ்' வைக்காத, மாணவியாக இருந்தவள்; வெளிநாடுகளிலும், தகுதியோடு தான் படித்தேன். நான், மருத்துவ படிப்பில் சேரும்போது, கருணாநிதி, பதவியில் இல்லை. அதனால், இதை கொச்சைப்படுத்த வேண்டாம். இதுகுறித்து, ஸ்டாலின் கூறியது நாகரிகமற்ற வார்த்தை. 'தமிழ், தமிழ்...' என முழங்கும், தி.மு.க., பிரமுகர்களின், வீட்டு குழந்தைகளில் எத்தனை பேர், தமிழ் படிக்கின்றனர் என, கூற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
15-செப்-201711:20:36 IST Report Abuse
DSM .S/o PLM சரி தமிழிசை சில சலுகைகள் மூலமாகவே மருத்துவம் படித்தார் என்றே வைத்து கொள்வோம் , அதில் ஒன்றும் சட்ட விரோதமோ இயலாமையோ இல்லையே ? இதெல்லாம் விமர்சிக்கும் ஸ்டாலினும் கல்வித் திறன் பற்றி கொஞ்சம் அலசுவோமா ? கல்லூரி காலங்களில் அவரது யோக்கியதையென்ன ? வெளிப்படையாக அவரால் அதை விவாதிக்க இயலுமா ? காலத்தால் மறக்க பட்டு விடும் என்கிற தைரியத்தில் அவர் நிறைய தத்து பித்து என்று பேசிக்கொண்டிருக்கிறார். தமிழக பாஜ தலைவர்கள்சரி இல்லாததால் இதெல்லாம் எடுத்து சொல்லி அவருக்கு சரியான பதிலடி தருவதில்லை ..இந்த இடத்தில் ஜெயா போன்ற தைரியசாலி , அறிவுக்கூர்மை கொண்ட தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தை திமுக தனக்குசாதகமாக பயன் படுத்தி கொள்வதை உணர முடிகிறது
Rate this:
Share this comment
Cancel
A shanmugam - VELLORE,இந்தியா
15-செப்-201710:58:58 IST Report Abuse
A shanmugam அப்போ யார் போட்ட பிச்சை தமிழக மக்களுக்கு ஒளிவு மறைவும் இன்றி தெரிவிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா
15-செப்-201707:51:57 IST Report Abuse
Vilathur Nandhiyar தமிழிசை மருத்துவருக்கு படித்தபோது எம் ஜி ஆர் முதல்வராக இருந்தார் .தமிழிசை படிக்கும்போது மருத்துவத்திற்கு நுழைவு தேர்வு இல்லை ...அதிக மார்க் வாங்கியதன் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பிற்கு தேர்வு பெற்றிருக்கிறார் இது ஸ்டாலினுக்கு தெரிய வாய்ப்பில்லை . தமிழிசை அரசியலில் இருப்பதால் அவரின் அரசியலை விமர்சியுங்கள் .... இப்படி அண்ட புளுகு புளுகுவது கருணாநிதிக்கும் அவர் புதல்வனுக்கும் கைவந்த கலை பள்ளிப்படிப்பை முடிக்காமல் பள்ளி இறுதி ஆண்டு தேர்வில் பலமுறை தோல்வியுற்று இருந்த கருணாநிதிக்கு அண்ணாமலை பல்கலை கழகம் டாக்டர் பட்டத்தை பிச்சை போட்டதா ? ஸ்டாலினுக்கு பச்சையப்பா கல்லூரி பி ஏ பட்டத்தை பிச்சை போட்டதா ? முதல்வர் பதவி தமிழ்உ நட்டு மக்கள் கருணாநிதிக்கு போடப்பட்ட பிச்சையா ..உதயகுமாரின் மரணத்தை பரிசாக கொடுத்து வாங்கியதல்லவா கருணாநிதியின் டாக்டர் பட்டம் ..வரலாறு அறிந்து பேசத்தறியாத கைபிள்ளை ஸ்டாலின் ...கடைசிவரை இலவுகாத்த கிளியாக புலம்ப வேண்டியதுதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X