சிறப்பு பகுதிகள்

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 10

Added : செப் 15, 2017
Advertisement
பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 10

கல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந்திரம் ஆசிரியர் களுக்கும் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கும் வழங்க பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது.
இதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட கலைத் திட்டக் குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரிடம் தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கியிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத்துக்களை, தினமலர் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்களையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.


15.NATARAJAN JAYAMANIYour ideas are genuine in the matter of autonomous for schools.
I am kindly submit this my suggestion in front of you who due respect.
During the period of 1960, While I was studying at the St joseph's convent and St Mary's high schools in Madurai that the schools are taught independently to us,that even they are receiving subsidicy from the government.
They are given not only the educational subjects but also they had special periods for moral (Nallolukkam),and vocational training periods of music, carpentry, book binding, chairs wire binding etc. In the school for the students studying in the 1,2,3 and 4th forms. ,levels.The choice is students own wish.The above said are clearly shows and its aware that the schools authorities are not only responsible for the students study but also for their moral activities in the common life,to get life by earnings from vocational training jobs and also to get the implications of experiences to learn our cultural and arts are in the school time itself.
For an example that if will not remember and say the vowvels like a,e,i,o,and u. to the teacher that the punishment is too hard and the impositions also likewise. No one including the parents never could raise any questions about the above said deeds and against the school authorities that what ever students from various VVIP sources like collectors, magistrates, police higher officials sons.And the punishment is the same to everybody in equal.
So that the students are in those independent schools are got good moral, study, good condition with all necessary habits of a social life in the community.
For an instance, I have discontinued the SSLC in tamil medium only, but I can read write and able to speak in English Tamil and Hindi fluently. Moreover I can speak in Malayalam Kannada Telugu the regional languages well.
Also basically known about all in all subjects,also could challenge any post and master degree graduates,Dean and Faculty of any subjects that only except the computer sciences.
Step by step the government involves and put its nose in to the educational policy and changed the total and entire old customs and it's systems, so that everything was ruined in the school education old policy.The answer is that now a student studying M.Sc in English literature can't fill an application forms himself independently at various government officials.
Parents are coming to courts against the schools authorities due to their childrens are punished by the school authorities, hence the teachers are suffering with mental agony and leave them the students freely now.
Hence therefore, Your ideas are genuine and a clever one also to be welcomed one. The schools should be and must be in freedom and they should be brought under autonomous bodies for the welfare of societies and of the students futures.தினமலர் விளக்கம்: பள்ளிகளில் தன்னாட்சி என்ற கல்விப் புரட்சியை தாங்கள் வரவேற்றிருப்பது எங்களுக்கு மிகுந்த ஊக்கமளிக்கிறது.நம் கருத்தை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
பள்ளிகளில் கல்வித்தரம் குறைந்ததற்குத் தாங்கள் சில காரணங்களைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். அன்று, பாடத் திட்டம் மட்டுமன்றி, நல்லொழுக்க வகுப்புகளும் தொழிற்பயிற்சி வகுப்புகளும் இருந்தன. அதனால் தொழில் கற்றுக் கொண்டு, சம்பாதித்து வாழும் நிலையிலும் ஒழுக்கம் தவறக் கூடாது என்று மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு வளர்ந்தனர். தவிர, தப்பு செய்யும் மாணவன், யாராக இருந்தாலும், அவனுடைய பெற்றோர் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், அவன் உறுதியாகத் தண்டிக்கப்பட்டான். பெற்றோர்களும் எந்த எதிர்ப்பும் தெரிவித்ததில்லை. அதனால், சமூகத்தில் எப்படி ஒழுக்கத்துடன் வாழ வேண்டுமென்பதை அன்றைய மாணவர்கள் பள்ளிகளில் கற்றுக் கொண்டனர்.தமிழைப் பயிற்சி மொழியாகக் கொண்டு, பின் குகுஃஇ படிப்பை முடிக்க முடியாமல் இருந்தாலும் தாங்கள் பல மொழிகளில் திறமை பெற்றுள்ளீர்கள். இன்றைய எந்த முதுகலை மாணவரையும் விட என்னால் நன்றாகப் பேச முடியும்; அதற்கு காரணம் அன்றைய பள்ளிகளின் செயல்முறையும் மாணவர்களின் ஒழுக்கமும் என்று சுட்டிக்காட்டியுள்ளீர்கள். தரம் குறைய அரசின் தலையீடு காரணம் என்று சொல்லியுள்ளீர்கள். இந்த நிலை மாற, பள்ளிகளில் தன்னாட்சி வேண்டும் என்று முடித்துள்ளீர்கள்.
கல்வித்தரம் பள்ளிகளில் தொடர்ந்து சரிய, தாங்கள் கூறியுள்ள காரணங்கள் விவாதத்திற்குரியவையாகத் தென்படுகின்றன. தவிர, நம்முடைய இன்றைய முயற்சியான பள்ளிகளில் தன்னாட்சி என்ற கல்விப் புரட்சிக்கு, தாங்கள் கூறியுள்ள காரணங்களை விவாதிப்பது, அதாவது தவறு என்று மறுப்பதோ, சரியென்று ஏற்பதோ இந்நிலையில் தேவையற்றதென நாம் கருதுகிறோம். எனினும், தாங்கள் பள்ளிகளில் தன்னாட்சி என்ற கருத்தை ஏற்றுக்கொண்டதற்கு மறுபடியும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

-தொடரும்

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X