பொது செய்தி

இந்தியா

தொப்பை போலீசாருக்கு ஜனாதிபதி பதக்கம் கிடையாது!

Added : செப் 15, 2017 | கருத்துகள் (8)
Advertisement
தொப்பை, போலீசாருக்கு, ஜனாதிபதி பதக்கம், கிடையாது!

புதுடில்லி,தொப்பை இல்லாமல், நல்ல உடல் தகுதியுள்ள போலீசாரை மட்டுமே, பதக்கங்களுக்கு பரிந்துரைக்க வேண்டும், என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும், மாநில மற்றும் தேசிய அளவில் சிறப்பாக பணிபுரிந்த, போலீசாருக்கு, ஜனாதிபதி பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், மாநில அரசுகள் மற்றும் மத்திய போலீஸ் அமைப்புகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:சிறந்த சேவைக்காக பதக்கம் பெறுவதற்கு பரிந்துரைக்கப்படும் போலீசார், அவர்களின் பணி மூப்பு மற்றும் சேவை மட்டுமல்லாமல், நல்ல உடல் தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.
தொப்பை இல்லாமல், பதவிக்கு சரியான நபராக இருக்க வேண்டும். தொப்பை உள்ள போலீசாரின் பெயர்கள் பரிசீலனைக்கு அனுப்பக்கூடாது.போலீசாரின் உடல் தகுதி, ஷேப் - 1, ஷேப் - 2 என இரண்டு விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், ஷேப் - 1ல் உள்ள போலீசார் மட்டுமே, ஜனாதிபதி பதக்கம் பெறுவதற்கு பரிசீலிக்கப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
16-செப்-201713:01:36 IST Report Abuse
bal முதலில் யார் இப்படிப்பட்ட ஆளுங்களுக்கு பரிந்துரை செய்தார்கள்.அவர்களையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். ஒரு வரைமுறை என்பதே இல்லாமல் எப்படி பதக்கம் தர பரிந்துரை செய்ந்திருக்க முடியும்
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
16-செப்-201712:10:01 IST Report Abuse
Rajasekaran Palaniswamy தொப்பை இல்லாத போலீசா? அப்படியானால் 90 % போலீசுக்கு பதக்கம் கிடையாது. இதற்க்கு பதில் தொப்பை உள்ள போலீசுக்கு வேலை கிடையாது என்று அறிவித்தால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
baski - Chennai,இந்தியா
16-செப்-201711:50:47 IST Report Abuse
baski அப்ப திறமைக்கு கிடையாதா....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X