பதிவு செய்த நாள் :
தயார் நிலையில் ராணுவம்! நிர்மலா உறுதி

வாரணாசி:''நாட்டின் எல்லைகள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன; எந்த சவாலையும் எதிர்கொள்ள, ராணுவம் முழுமையாக தயாராக உள்ளது,'' என, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் கூறினார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில், கன்டோன்மென்ட் வாரியம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அவர் பேசியதாவது: இந்தியாவை துாய்மை படுத்தும் திட்டத்தை, பிரதமர், நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார். இதில், ராணுவமும்

பங்கேற்று வருகிறது.நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை துாய்மையாகவைத்து இருக்க வேண்டியதன் அவசியம் பற்றி, ராணுவம் சார்பில், மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, 15 முதல், அக்., 2 வரை, ராணுவ அமைச்சகம் சார்பில், சிறப்பு துாய்மை பணி மேற்கொள்ளப்படும். ராணுவ பாசறை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், இந்த பணி மேற்கொள்ளப்படும்.

காஷ்மீர் எல்லை, டோக்லாம் பகுதி உள்ளிட்ட நாட்டின் எல்லைப்பகுதிகள் அனைத்தும், பாதுகாப்பாக உள்ளன. தேசத்தின் எல்லைகளை பாதுகாப்பதில், மத்திய அரசு, மிகவும் விழிப்புடன்

Advertisement

ராணுவம், Army, நிர்மலா சீதாராமன்,Nirmala Sitharaman, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், Minister of Defense Nirmala Sitharaman,   பிரதமர் மோடி,Prime Minister Modi,  உத்தர பிரதேசம் ,Uttar Pradesh, முதல்வர் யோகி ஆதித்யநாத், Chief Minister Yogi Adityanath, மத்திய அரசு,Central Government,  பாகிஸ்தான், Pakistan,

செயல்படுகிறது. இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் அரசு எடுத்து வருகிறது. எனவே நாட்டின் பாதுகாப்பு குறித்து, யாரும் அச்சம் கொள்ள தேவை இல்லை.எந்த சவாலையும் எதிர்கொள்ள, ராணுவம் முழுமையாக தயாராக உள்ளது.
எல்லையில், பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு, விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
16-செப்-201720:21:27 IST Report Abuse

balமுதலில் இந்த தீவிரவாதத்தால் ராணுவ வீரர்கள் சாவதை நிறுத்தவும். ராணுவம் ராப்பகலாக நமது எல்லையை காத்து கொண்டு இருக்கிறது. .

Rate this:
aravind - chennai,இந்தியா
16-செப்-201718:34:40 IST Report Abuse

aravindதயார் நிலையில் உள்ளது என்ற உங்கள் வார்த்தை நன்றாக இருக்கின்றது, ஒரு நாட்டின் மீது போர் வந்து அந்த போரில் ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தால் அது வீர மரணம், ஆனால் சில தீவிரவாத இயக்கத்தால் இந்திய ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தால் அது வருத்தம்... அப்படி நடக்காமல் தயார் நிலையில் இருக்க வேண்டும்...

Rate this:
Kamaraj Nithiyanandam - chennai,இந்தியா
16-செப்-201717:36:24 IST Report Abuse

Kamaraj Nithiyanandamபேசாம பிஜேபில சேந்துடலாம் போல. வாய்க்கு வந்ததுதான் வரலாறு. எதுக்கும் ஆதாரம் தர தேவையில்லை.

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X