kalvipurachi -11 | பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 11| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 11

Added : செப் 15, 2017
பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 11

கல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந்திரம் ஆசிரியர் களுக்கும் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கும் வழங்க பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது.

இதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட கலைத் திட்டக் குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரிடம் தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கியிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத்துக்களை, தினமலர் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்களையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.


16.SRIDHARAN .SI was amazed by your idea of autonomy in school education. It will produce world class education. The private sector will act immediately to scale up.

The main problems in the Tamilnadu samacheer kalvi system are

a) The department pressing for more that 95% pass in the schoolfinal exams. This is set by people who have noknowledge about the overall situation and to appease thepoliticians. If you see the UP and Andhra schooling results which produce the most IAS officers and one third of the IIT grades respectively, it is around 60 to 70 percent only.

b) Since the instructions is to produce abnormally high results, the teachers take a short cut of repeating the earlier questions time and againin the final exams (you can very well check it) thereby achieving higher pass percentage. The students are restricted to study only the old questions which will be repeated. It is also easier for the teachers to limit themselves to teaching a little of the total portion. Because of this, the students can not study a considerable portion of the syllabus that is why they fail in the first year of engineering and also in the other competitive exams like JEE.

c) Once the teachers accustomed to teaching very little portionsonly, they feel comfortable and they start shouting even if one or few questions are asked out of the book to protect themselves. They make the student to rote the lessons.
d)The social value system in Tamil nadu is also a reason why we have very limited number of good teachers who are the backbone of the educational system. For the past few decades, only engineering particularly computers and medicine have been considered worth studying and people do not want to become teachers.Compare with Tamilnadu where if one is aged (haveseniority) and possess a BEd along with a degree, one becomes a teacher. They even don't want to take competitive exam telling shamelessly that they studiedlong ago and cannot take exams. They are mostly candidates failed to get amedical of engineering seat in their student life and how can one expect them to teach to produce students higher than their levels?

The system of autonomy forschools will be very useful in raising the standards of education. The private schools will act swiftly and again students from there will capture seats in top colleges of Tamilnadu.

தினமலர் விளக்கம்: பள்ளிகளில் தன்னாட்சி என்ற கல்விப்புரட்சியைத் தாங்கள் ஏற்றுக் கொண்டு உற்சாகத் துடன் வரவேற்றுள்ளீர்கள். மிகவும் நன்றி.

பாடத்திட்டம் பொதுவாக கல்வித் தரத்தை உயர்த்தி நிலைப்படுத்துவதற்காகத் தான். குறிப்பிட்ட காலவரை யறைக்குள் தொடர்ந்து மாற்றப்பட்டு வரும். இப்பொழுது, பல ஆண்டுகளுக்குப் பின்னரே என்றாலும் கூட, அரசு நல்ல முடிவையெடுத்திருக்கிறது. புது பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களிடம் கருத்துக்களையும் கேட்டு வந்திருக்கிறது. புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதில் பள்ளி ஆசிரியர்களின் கருத்துக்களைக் கேட்டு, பின் அவற்றைத் தொகுத்து, ஆராய்ந்து அரசிற்கும் சிபாரிசு செய்யும் ஒரு வல்லுநர் குழுவையும் அமைத்திருக்கிறது. அக்குழுவில் பல்கலைக்கழக துணைவேந்தர்களும் சிறந்த அறிவியல் வல்லுநர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்தச் செயல்கள் நமக்குச் சுட்டிக் காண்பிப்பது, அரசு மாணவர்களின் கல்வித் தரத்தில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்பதுதான். அதனால்தான் பள்ளிகளில் தன்னாட்சி கொள்கையை வலியுறுத்த இதுவே சரியான தருணம் என்று கருதி, அக்கொள்கையை அரசின் முன் கொண்டு சென்றோம்.

தாங்கள் சொல்லியிருக்கிற அதே கருத்தைத் தான் நாமும் வலியுறுத்தி வருகிறோம். கல்வித்தரம் உயர ஆசிரியர்களின் பங்கு மிக மிக முக்கியமானது.
கல்வித்தரம் சரிய தாங்கள் சில காரணங்களைக் கூறியுள்ளீர்கள். அவற்றை இங்கே சுருக்கமாக தருகிறோம். ஏனெனில், இதைப் படிக்கும் ஆசி<ரியர்களும் அதிகாரிகளும் அவற்றை அறிந்திருத்தல் மிகவும் அவசியம். குறைகளை நீக்க இது உதவும். தரக்குறைவு தாங்கள் எடுத்துக் காட்டியுள்ள முக்கியமான கார<ணம். 95% தேர்ச்சி பள்ளி மாணவர்களிடம் வலியுறுத்தப் படுவதால், ஆசிரியர்கள் வேறு வழியின்றி தேர்ச்சிக்கு முதன்மை தந்து, தேர்வுக்குத் தேவையானவற்றை மட்டும் மாணவர்களுக்கு கற்பிக் கின்றனர். மனப்பாடத்திற்கு அதிக மதிப்பு தரப்படுகிறது.

மருத்துவப் படிப்பும் இன்ஜினீயரிங் படிப்பும் தான் சமூகத்தில் மதிப்புப் பெற்றுத் தருவதால், பெரும்பாலான வர்கள் ஆசிரியர் தொழிலைத் தேர்ந்தெடுப்பதில்லை. ஆகையால் நல்ல ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. தாங்கள் சொல்லுகின்ற கருத்துகள் உண்மைக்குப் புறம்பானவை யென்று சொல்ல முடி<யாது. அதே நேரத்தில் அவை முழு உண்மையாக இருக்க முடியாது. இன்னும் நல்ல ஆசிரியர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.

தவிர, தேர்வுக்காகப் படிக்கும் பொழுதும், அந்தந்த பாடத்தில் இருக்கின்ற முக்கியமான செய்திகளும் பகுதிகளும் தான் மாணவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப் படுகின்றன. மேலும், புகழ் பெற்ற நிறுவனங்கள் மாணவர்களிடம் எதிர்பார்ப்பது, வெறும் புத்தக அறிவு மட்டுமல்ல; தாங்களே கூறியுள்ளீர்கள். அது தவிர, வேறு சில திறமைகள் மாணவர்களிடம் இருக்க வேண்டும். 95% மதிப்பெண் பெற்ற ஒரு மாணவன், பேச்சுத் திறமை இல்லையெனில் அவனுக்கு வேலைவாய்ப்பு மிகவும் அரிது. இன்றைய சூழலில், மருத்துவமும் இன்ஜினீயரிங் படிப்பும் அன்று பெற்றிருந்த அதே முதன்மை முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன என்று சொல்ல முடியாது. பல இன்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாகத் தான் இருக்கிறது.

இதையெல்லாம் நாங்கள் ஏன் எடுத்துக் கூறுகிறோம் என்றால், இன்று தர உயர்வை நோக்கி செயல்படத் தொடங்குவது சமூகப் பொறுப்புள்ள அத்தனை பேருக் கும், பள்ளி ஆசிரியர்கள், நிறுவனங்கள், அரசு அதிகாரி கள்- அத்தனை பேருக்கும் தலையாய கடமை என்று உணர்த்த விரும்புவது தான். பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டுமென முடிவெடுத்த அரசு ஆசிரியர்களின் தர உயர்வைப் பற்றியும் கவனம் எடுத்துக்கொள்ளும்; அதற் கான திட்டங்களையும் உருவாக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மறுபடியும், தாங்கள் பள்ளிகளில் தன்னாட்சியை வரவேற்றதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடரும்Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X