அரசியல் செய்தி

தமிழ்நாடு

‛இனியும் இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது': நள்ளிரவில் ஜெ., நினைவிடத்தில் தீபா

Updated : செப் 16, 2017 | Added : செப் 16, 2017 | கருத்துகள் (63)
Advertisement
 அ.தி.மு.க, A.D.M.K, ஜெயலலிதா, Jayalalithaa, தீபா, Deepa, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,  former Chief Minister Jayalalithaa, தமிழகம் , Tamil Nadu, ஜெயலலிதா அண்ணன் மகள், Daughter of Jayalalithaa brother, சென்னை,Chennai,

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., நினைவிடத்தில், எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவையின் நிறுவனர் தீபா, அவரது கணவன் மாதவன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.


மக்களுக்காகவே...


நள்ளிரவு சுமார் 12.20 மணியளவில் மரியாதை செலுத்திய தீபா, பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: அ.தி.மு.க.,வை காக்க வேண்டும் என்பதே என் லட்சியம். காவல்துறையின் கட்டுப்பாட்டில் தற்போது தமிழகம் செயல்பட்டு வருகிறது. மக்களுக்காகவே என் அரசியல் செயல்பாடுகள் இருக்கும். நீட் தேர்வை தமிழக மாணவர்கள் மீது திணிக்கக்கூடாது.


ஆட்சி தொடரக்கூடாது:


அ.தி.மு.க.,விற்கு வலிமையான தலைவர்கள் இல்லாததால், பா.ஜ., இயக்குவதாக தோற்றம் உருவாகியுள்ளது. மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. இனியும் இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malar - nsw,ஆஸ்திரேலியா
16-செப்-201718:46:55 IST Report Abuse
Malar இவ்வளவு நாட்கள் எங்கே இருந்தாய் என்று தீபாவை கேட்பது நியாயம் இல்லை. சசிகலா அவரை அணுகவே விடவில்லை என்பது உலகமறிந்த உண்மை. தீபாவிற்கு அரசியல் செய்ய நல்ல வழிகாட்டியும் இல்லை அனுபவமும் இல்லை. இனி இவர் விலகி விடுவதே இவர் எதிர்காலத்திற்கு நல்லது. கிடைக்க கூடிய ஆதாயத்தை வாங்கி கொண்டு இருக்கிற சொத்தோடு சேர்த்து கொண்டு. நல்லவிதமாக மாதவனோடு குடும்பம் நடத்தி இவராவது குழந்தைகள் பெற்று ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை அமைத்து க்கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
16-செப்-201716:00:38 IST Report Abuse
இந்தியன் kumar செய்தியாளர்கள் எப்போதும் ஊழல் அம்மாஜி சமாதி அருகில் இருக்கிறார்களா என்ன ???
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
16-செப்-201714:55:09 IST Report Abuse
Baskar மாதம் இரு முறை வரும் நாளிதழ் போல் வந்து போகும் தீபா அரசியலுக்கு லாயக்கில்லாதவர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X