‛இனியும் இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது: நள்ளிரவில் ஜெ., நினைவிடத்தில் தீபா - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

‛இனியும் இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது': நள்ளிரவில் ஜெ., நினைவிடத்தில் தீபா

Updated : செப் 16, 2017 | Added : செப் 16, 2017 | கருத்துகள் (63)
 அ.தி.மு.க, A.D.M.K, ஜெயலலிதா, Jayalalithaa, தீபா, Deepa, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,  former Chief Minister Jayalalithaa, தமிழகம் , Tamil Nadu, ஜெயலலிதா அண்ணன் மகள், Daughter of Jayalalithaa brother, சென்னை,Chennai,

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., நினைவிடத்தில், எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவையின் நிறுவனர் தீபா, அவரது கணவன் மாதவன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.


மக்களுக்காகவே...


நள்ளிரவு சுமார் 12.20 மணியளவில் மரியாதை செலுத்திய தீபா, பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: அ.தி.மு.க.,வை காக்க வேண்டும் என்பதே என் லட்சியம். காவல்துறையின் கட்டுப்பாட்டில் தற்போது தமிழகம் செயல்பட்டு வருகிறது. மக்களுக்காகவே என் அரசியல் செயல்பாடுகள் இருக்கும். நீட் தேர்வை தமிழக மாணவர்கள் மீது திணிக்கக்கூடாது.


ஆட்சி தொடரக்கூடாது:


அ.தி.மு.க.,விற்கு வலிமையான தலைவர்கள் இல்லாததால், பா.ஜ., இயக்குவதாக தோற்றம் உருவாகியுள்ளது. மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. இனியும் இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X