இரட்டை இலை விரைவில் கிடைக்கும் : பன்னீர்செல்வம் நம்பிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இரட்டை இலை விரைவில் கிடைக்கும் : பன்னீர்செல்வம் நம்பிக்கை

Added : செப் 16, 2017 | கருத்துகள் (27)
இரட்டை இலை விரைவில் கிடைக்கும் : பன்னீர்செல்வம் நம்பிக்கை

காஞ்சிபுரம்: "ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் எடுத்த எந்த முயற்சிகளும் பலிக்கவில்லை; இன்னும் ஒரே வாரத்தில், இரட்டை இலை சின்னம் கிடைக்கும்," என, துணை முதல்வர் பன்னீர்செல்வம், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 109வது பிறந்த நாள் விழா, காஞ்சிபுரத்தில் நடந்தது. இதில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது: கைத்தறி துணிகள் ஒரு காலத்தில் தேங்கிய போது,அந்த துணிகள் விற்க, அண்ணாதுரை பல முயற்சிகள் செய்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இலவச வேட்டி, சேலை திட்டங்களை கொண்டு வந்தனர். எம்.ஜி.ஆர்., மறைந்த போது, அ.தி.மு.க.,வில், 17 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். ஜெயலலிதா தலைமையில், 1.5 கோடி தொண்டர்களை கொண்டதாக இந்த இயக்கம் வலிமை அடைந்தது.தி.மு.க.,வின் அராஜக ஆட்சி, குடும்ப ஆட்சியை, 2011ல் வீழ்த்தி, ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது, தி.மு.க.,வின் நில அபகரிப்பு, சட்டம் ஒழுங்கு மோசம் போன்ற பிரச்னைகளுக்கு முடிவு கட்டினார்.
எந்த குடும்பத்தின் இரும்பு பிடியிலும் இந்த கட்சி இருக்கக்கூடாது என, ஜெயலலிதா நினைத்தார். சூழ்நிலை காரணமாக, நாம் இரு அணிகளாக பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இன்னும் ஒரு வாரத்தில் இரட்டை இலை நமக்கு கிடைத்து விடும். இதைக் கண்டு, எதிர்க்கட்சிகள் கதி கலங்கியுள்ளனர். ஸ்டாலின் பல முயற்சிகளை எடுத்தும் பலிக்கவில்லை. பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி தொடரும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X