ரூ.100 கோடி சொத்து, குழந்தையை கைவிட்டு துறவறம் செல்லும் தம்பதி

Added : செப் 16, 2017 | கருத்துகள் (33)
Advertisement
குழந்தை,Child, ஜெய்ப்பூர், Jaipur, துறவறம், Asceticism, அனாமிகா,Anamika,  சுமித் ரத்தோர்,Sumit Rathore,  ஜைன குரு, Jain Guru, ராம்லால் மஹாராஜ், Ramlal Maharaj,குடும்பம்,Family,  ராஜஸ்தான்,Rajasthan, முதல்வர் வசுந்தரா ராஜே ,Chief Minister Vasundhara Raje,பா.ஜ.,BJP,  அசோக் சந்தாலியா, Ashok Chanthaliya,

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுடன், மூன்று வயது குழந்தையை கைவிட்டு, துறவறம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர், வசுந்தரா ராஜே தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சித்தோர்கர் மாவட்ட, பா.ஜ., முன்னாள் தலைவர், அசோக் சந்தாலியா. இவரது மகள் அனாமிகாவுக்கும், ம.பி., மாநிலத்தை சேர்ந்த சுமித் ரத்தோருக்கும் நான்கு ஆண்டு களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

பிரிட்டனின் லண்டன் நகரில் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான பட்டய படிப்பு முடித்த சுமித், அங்கேயே பணிபுரிந்து வந்தார். பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில், சில ஆண்டுகளுக்கு முன், நாடு திரும்பி, தந்தையின் தொழிலை கவனித்து வந்தார்.

பொறியியல் பட்டதாரியான அனாமிகா, ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஐ.டி., துறையில் பணியாற்றினார். திருமணத்திற்கு பின், வேலையை துறந்து குடும்பத்தை கவனித்து வந்தார். இவர்களுக்கு, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

இந்நிலையில், ஆத்ம திருப்திக்காக, குழந்தை, குடும்பம் மற்றும் சொத்துக்களை துறந்து, ஜைன குரு, ராம்லால் மஹாராஜின் முன்னிலையில், 23ம் தேதி, துறவறம் மேற்கொள்வதாக, சுமித் ரத்தோர், அனாமிகா அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அனாமிகாவின் தந்தை கூறுகையில், 'மகள் மற்றும் மருமகனின் துறவு முடிவை தடுத்து நிறுத்த, இரு தரப்பு குடும்பத்தினரும் செய்த முயற்சி பலனளிக்கவில்லை; உள்ளுணர்வு உந்துதலால் துறவறம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sabari - thiruchi,இந்தியா
21-செப்-201703:46:42 IST Report Abuse
sabari முட்டாள் ஹிந்து மக்கள் எத்தனை லட்சம் ஹிந்துக்கள் வீடு வாசல் இல்லாமல் இருக்கிறார்கள்,,எத்தனை லட்சம் ஏறி காடு இருக்கு ,குறைந்தது ஒரு ஆயிரம் மரங்களை நட்டு விட்டு சென்று இருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Varadhaiyah - PUDHUCHERRY,இந்தியா
17-செப்-201705:14:29 IST Report Abuse
Srinivasan Varadhaiyah சொத்தை விட்டும் துறவு போகட்டும் அந்த குழந்தை என்ன தவறு செய்தது அதை பெற்றோர் போல் யார் காப்பார்கள் இறைவா அவர்களுக்கு நல்ல புத்தியை கொடு
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
16-செப்-201720:58:47 IST Report Abuse
srisubram இறைவன் அந்த குழந்தையை ஆசிர்வதிக்கட்டும் .. மிகவும் உன்னதமான நிலையை நோக்கி செல்லும் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் .. இந்த மனநிலை அனைவருக்கும் ஏற்படவேண்டும் இறைவா . இந்த உன்னதமான மனநிலையை புரியாமல் கொச்சை படுத்தும் எம்மக்களை நீர் மன்னித்து அருள்வாயாக . இந்த மனநிலை எல்லோருக்கும் ஏற்பட்டால் , இந்தியாவில் , வன்முறை , குடும்ப வன்முறை எதுவும் ஏற்படாது ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X