கொலையாளியின் முகத்தை பார்த்த கவுரி லங்கேஷ்; கேமரா காட்சிகள் பதிவு

Added : செப் 16, 2017 | கருத்துகள் (59)
Advertisement
கொலையாளி,killer,  கவுரி லங்கேஷ், Kauri Langeesh, துப்பாக்கி, gun, கண்காணிப்பு கேமரா, surveillance camera, முதல்வர் சித்தராமையா,chief minister Sitaramaya,  சிசிடிவி ,CCTV,   பெங்களூரு ,Bangalore,

பெங்களூரு : 'துப்பாக்கியால் சுடப்படும் முன், கொலையாளியின் முகத்தை, கவுரி லங்கேஷ் பார்த்துள்ளார்' என, போலீசார் தெரிவித்தனர்.

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் 'லங்கேஷ்' என்ற பத்திரிகையின் ஆசிரியர், கவுரி லங்கேஷ் செப்., 5ம் தேதி, அவரது வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை குறித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு, முதல்வர், சித்தராமையா உத்தர விட்டுள்ளார். மாநில உளவுப்பிரிவு, ஐ..ஜி., - பி.கே.சிங் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு, கவுரி லங்கேஷின் வீடு, அலுவலகத்தில் ஆய்வு செய்தது, கவுரி லங்கேஷின் வீடு அமைந்துள்ள பகுதியில் இருந்த, 'சிசிடிவி' எனப்படும், 30 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை, புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்தனர். கவுரி லங்கேஷ் வீட்டின் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், கொலை சம்பவம் பதிவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த கேமராவில், பதிவாகியிருந்த காட்சிகள் விபரம்: கவுரி லங்கேஷ், வீட்டின் பெரிய கேட்டை திறக்க முயற்சிக்கிறார். அப்போது, ஹெல்மெட் அணிந்த கொலையாளி, அவரை கூப்பிடுகிறான். இதையடுத்து, கவுரி திரும்பி பார்க்கிறார். அடுத்த நிமிடம், கொலையாளி சுடுகிறான். இதில், கவுரியின் வலது விலாவில், குண்டு பாய்கிறது. இரண்டாவது குண்டு, இடது விலாவில் பாய்கிறது. ரத்தம் பீறிட, கவுரி, வீட்டுக்குள் ஓட முயற்சிக்கிறார்.

கொலையாளி, இரண்டடி முன்னால் வந்து சுடுகிறான்; குறி தவறுகிறது. நான்காவது குண்டு, அவரது முதுகில் பாய்ந்தது; சரிந்து விழுகிறார் கவுரி. அடுத்த நிமிடம், மோட்டார் சைக்கிளில், கொலையாளி தப்பிச் செல்கிறான். இவ்வாறு, கண்காணிப்பு கேமராவில், காட்சிகள் பதிவாகியுள்ளன.

போலீசார் கூறுகையில், 'கொலையாளி கூப்பிட்டவுடன், கவுரி திரும்பி பார்க்கிறார். அதனால், கொலையாளியின் முகத்தை அவர் நன்கு பார்த்திருக்கிறார். மூன்றாவது குண்டு தாக்கிய பின், சில வினாடிகளில், அவர் உயிர் இழந்தார்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
16-செப்-201715:27:11 IST Report Abuse
Anand கொலையாளியின் முகத்தை, கவுரி லங்கேஷ் பார்த்துள்ளார். ஆதலால் கௌரி வந்து சொன்னால் நிச்சயமாக சில நாட்களில் கொலையாளியை பிடித்து விடுவோம்.....................
Rate this:
Share this comment
Cancel
A shanmugam - VELLORE,இந்தியா
16-செப்-201713:54:31 IST Report Abuse
A shanmugam இதே நீயா படத்தில் வரும் நாக பாம்பாக இருந்தால் கொலையாளி கண், நாகபாம்பு கண்ணில் பதிந்திருக்கும். அதை வைத்து கொலையாளியை பிடித்துவிடலாம். ஆனால், மனிதனின் கண் பாம்பு கண் போல் பிரதிபலிக்காது.
Rate this:
Share this comment
Cancel
Murugan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
16-செப்-201713:34:00 IST Report Abuse
Murugan அட பாசக அடிமைகளே தேவையில்லாத இந்த விசயத்தில் பொழுதுபோக்காமல் சீக்கிரமாக பெட்ரோல் விலையைப் பற்றிய செய்திக்கு வந்து கமெண்ட் போடுங்கள் உங்களுக்கு வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X