அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் ‛மாமியார்' வீட்டுக்கு போவார்: முதல்வர் ஆவேசம்

Added : செப் 16, 2017 | கருத்துகள் (69)
Advertisement
முதல்வர் பழனிசாமி,chief minister palanisamy,தினகரன், dinakaran, ஜெயலலிதா, jayalalithaa, எம்.ஜி.ஆர்.,  MGR,திண்டுக்கல் சீனிவாசன்,dindigul srinivasan எம்எல்ஏ,MLA,  அதிமுக,  admk,

சென்னை: தினகரன் விரைவில் ‛ மாமியார் ' வீட்டுக்கு போவார் என முதல்வர் பழனிசாமி ஆவேசமாக பேசினார்.


துரோகம்:

அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னையில் நேற்று நடந்த விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: ஜெயலலிதா இருக்கும் வரை சென்னை பக்கம் கூட தினகரன் வந்தது இல்லை. ஆனால், அனைவருக்கும் சீட் வாங்கி கொடுத்ததாகவும், பதவி வாங்கி கொடுத்ததாகவும் கூறி வருகிறார். ஆட்சியை கலைக்கும் தினகரன் கனவு ஒரு நாளும் நிறைவேறாது. எம்.ஜி.ஆர்., உருவாக்கிய கட்சிக்கும், ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சிக்கும், தினகரன் துரோகம் இழைக்க பார்க்கிறார்.


சும்மா விடாது:

எங்களை வீட்டிற்கு போக சொல்கிறார். நாங்கள் வீட்டிலிருந்துதான் விழாவிற்கு வந்தோம். விழா முடிந்ததும், மீண்டும் வீட்டிற்குதான் செல்வோம். ஆனால், வீட்டில் இருந்து வந்த தினகரன் விரைவில் ‛ மாமியார் ' வீட்டுக்குத்தான் போவார். அதனை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். இங்கு நடப்பது அனைத்தையும் ஜெயலலிதா ஆத்மா கவனிக்கிறது. துரோகம் செய்தவர்களை ஜெயலலிதா ஆன்மா சும்மா விடாது. ஒவ்வொருவராக வாட்டி வதைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


கொலை?

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: ஜெயலலிதா சிகிச்சைக்காக படுத்த படுக்கையாக இருந்தார். அவரை பார்க்க வந்த கவர்னர், அமித்ஷா, அருண் ஜெட்லி, ராகுல் ஆகியோரை கூட பார்க்க விடவில்லை. கண்ணாடி வழியாக கூட பார்க்க முடியவில்லை. மிகப்பெரிய தொற்றுநோய் உள்ளது, பார்த்தால் பாதிக்கும் எனக்கூறினார். ஆனால், சிகிச்சை அளித்த வார்டு பாய், நர்ஸ், டாக்டர் ஆகியோர் ஜெயலலிதாவை பார்த்தனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உண்மை என்னவென்றால், ஜெயலலிதாவை நேரில் சென்று யாராவது பார்த்தால், தனக்கு தெரிந்த உண்மைகளை சொல்லிவிடுவார் என்ற பயம் காரணமாக யாரையும் பார்க்க விடாமல் கொலை செய்ததாக தகவல் வந்துள்ளது.
அவருக்கு ஏற்பட்டுள்ள நோய்க்காக மருந்து வேண்டுமென்றால், உலகத்தின் எந்த மூளையில் இருந்தும் கொண்டு வந்திருக்க முடியும். இதற்கு அரசு தயாராக இருந்தது. ஜெயலலிதா நோய் முற்றி இயற்கையாக சாகட்டும் என அவர்கள் காத்திருந்தனர். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராக வேண்டும். எடப்பாடியை விலக்க வேண்டும் என தினகரன் திட்டமிட்டதை நாங்கள் புரிந்து கொண்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
நேற்று தினகரன் அளித்த பேட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வீட்டுக்கு போவார், அவர் சொந்த ஊருக்கு போக வேண்டிய காலம் வந்து விட்டது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manasakshi - chennai,இந்தியா
17-செப்-201700:22:11 IST Report Abuse
manasakshi மாமியார் வீட்டுல இருக்கவேண்டிய எல்லா கும்பல்களும் , ஸ்டேட்மென்ட் விடுகிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel
manasakshi - chennai,இந்தியா
17-செப்-201700:19:56 IST Report Abuse
manasakshi இந்த பரதேசிகள் கிட்ட மாட்டிண்டு முழிக்கிற நிலைமையை பார்த்தால் , நம் தமிழ்நாட்டுக்கு இந்த கும்பல்கிட்டேந்து எப்ப விடிவு காலமோ தெரியல ?
Rate this:
Share this comment
Cancel
Ramachandran CV Ramachandran - thanjavur,இந்தியா
16-செப்-201720:27:31 IST Report Abuse
Ramachandran CV Ramachandran இவர் தமிழக முதல்வர் இவர் ளகரத்தை லகரமாகவும் னகரத்தை நகரமாகவும் உச்சரிக்கிறார். இவர் நமது முதல்வர் வெட்ககேடு. தினகரனாவது தனது சொந்த பணத்தை செலவு செய்து வருமானவரி மற்றும் அந்நியச்செலாவணி மோசடி என்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். இவர் மக்கள் பணத்தை இன்னும் கை வைக்கவில்லை. இனிமேல்தான் அதற்கு வருவார். அனால் அமைச்சரவையில் உள்ள விஜயபாஸ்கர் மற்றும் மணல் மாபியா கும்பல் உள்ளது. அவர்கள் எந்த மாமியார் வீட்டிற்கு செல்வார்கள்? மக்கள் பணத்தை மோசடி செய்யாத அமைச்சர்களே இல்லை. இவர்கெல்லாம் எந்த மாமியார் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்? பன்னீர் ஏற்கனவே இருந்த பொதுப்பணித்துறையில் 40 சதம் கமிசன் தரவேண்டும் என்று பொறியாளர்கள் வாட்சப்பில் செய்தி பகிர்ந்தார்களே அந்த துறை அமைச்சர் எந்த வீட்டிற்கு அனுப்பப்படுவர். தயவுசெய்து மீடியாக்கள் இதை கேட்டு வெளியிட்டால் நன்று. முதலில் அனைத்து அமைச்சர்களும் நல்ல தமிழ் பேசட்டும். இல்லாவிட்டால் வெளியேறட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X