அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
19 தொகுதிகளில் தேர்தல் முதல்வர் திடீர் முடிவு

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்து விட்டு, ஆர்.கே.நகருடன்
சேர்ந்து, 19 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து, முதல்வர் பழனிசாமி, சட்ட நிபுணர்களுடன் ஆலோனை நடத்தியதாக தகவல் கசிந்துள்ளது.

 19 தொகுதிகளில், தேர்தல், முதல்வர், திடீர் முடிவு

'முதல்வர் பழனிசாமிக்கு அளிக்கும் ஆதரவை திரும்ப பெறுகிறோம்' என, கவர்னரிடம் கடிதம் கொடுத்த, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 19 பேருக்கு விளக்கம் கேட்டு, சட்டசபை
சபாநாயகர் தனபால், 'நோட்டீஸ்' அனுப்பினார்.

இதில், ஜக்கையன் மட்டும் பதில் அளித்தார்; அத்துடன், முதல்வர் அணிக்கும் மாறினார். ஆனால், மற்ற, 18 பேர் இன்னும் விளக்கம் தரவில்லை.

இந்நிலையில், மூன்றாம் முறையாக, தனபால் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், 'நேரிலோ, கடிதம் வாயிலாகவோ, செப்., 20, மாலை, 5:00 மணிக்குள் விளக்கம் தர வேண்டும். 'விளக்கம் தராவிட்டால், நீங்கள் செய்த தவறையும், தகுதி நீக்கத்தையும் ஏற்றதாக கருதப்படும்.

எம்.எல்.ஏ.,வாக தேர்வானது ரத்து செய்யப்பட்டு, தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும்' என, குறிப்பிடப்பட்டுள்ளதாககூறப்படுகிறது.அதனால், 18 பேரும், வரும், 20ல், விளக்கம் அளிக்கவில்லை என்றால், அவர்களை, எம்.எல்.ஏ.,க்களாக தேர்வு செய்ததை ரத்து செய்ய வாய்ப்புள்ளது.

இந்த நடவடிக்கை வாயிலாக, ஆட்சியை தக்க வைக்கவும், முதல்வர் பழனிசாமி திட்டமிட்டு
உள்ளாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும், 18 தொகுதிகளுடன், ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள, ஆர்.கே.நகரையும் சேர்த்து, 19 தொகுதிகளுக்கும், ஆறு மாதங்களில் இடைத் தேர்தல் நடத்தும்படி, தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொள்வது குறித்து, சட்ட நிபுணர்களுடன், முதல்வர் ஆலோசனை நடத்தியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
john - chennai,இந்தியா
19-செப்-201700:04:57 IST Report Abuse

johnJayalalitha cm died. Can you bring reelection.all problem will be solved.Tamil Nadu saved forever from you

Rate this:
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
18-செப்-201723:13:45 IST Report Abuse

Poongavoor RaghupathyOur past experience in Tamilnadu is people vote either for DMK or AIADMK. Since now AIADMK is in wretched state and there is no AMMA to give freebies to the people chances of DMK winning the election are more.in case election is decided.But Both DMK and AIADMK are almost same in Public service AND people may choose DMK for a change. In the present economic condition of Tamilnadu nothing much can be expected from the DMK. BJP came to power only because Congress was ineffective.Same status would follow in TAMILNADU. No sane and good people are ready to come to gutter politics and voters do not have much choice. The choice will be between the devil or deep sea.The Govt is trying to earn from liquor sale and for that also there are many protests from women. DMK already announced Prohibition in State if they come to power. How this Tamilnadu govt would survive is anybody's guess.

Rate this:
aravind - chennai,இந்தியா
18-செப்-201719:05:38 IST Report Abuse

aravind19 தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால், அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்குமா அமைத்து போட்டியிடுமா? இடைத்தேர்தல் வந்தால் இடைத்தேர்தல் போரில் ரஜினி தன் பலத்தை கட்ட வாய்ப்புள்ளதா? இலக்கண செய்யுளில் பேசி தலைவலி தரும் கமல் நிற்பாரா? திமுக நின்று வெற்றி பெற முடியுமா? அல்லது ஆட்சியை கலைத்து 234 தொகுதிகளுக்கும் முழுவதும் தேர்தல் நடக்குமா ? என்ன நடக்கும் யாருக்காவது தெரியுமா? உண்மையாக சொல்ல முடியுமா ????

Rate this:
Vivek Palaniappan - paris,பிரான்ஸ்
18-செப்-201720:54:20 IST Report Abuse

Vivek Palaniappan10 நாளைக்கு வந்து பதில் சொல்லுவாங்க, சோ ஆட்சி கொஞ்ச நாள் இருக்கும் , என்ன செய்றது ...

Rate this:
மேலும் 66 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X