அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்...| Dinamalar

அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்...

Updated : செப் 19, 2017 | Added : செப் 19, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement


அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ?

என் பேர் சூடாமணி
வயது 28
எனக்கு இடுப்புக்கு கீழ் இரண்டு காலும் செயல்படாது ஊன்றுகோல் உதவியுடன்தான் நடக்கமுடியும், தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன் பத்தாயிரம் ரூபாய்க்கு மேலே சம்பளம் வாங்குகிறேன்

எனக்கு என்னைப் போலவே ஊனமுள்ள ஒரு மாப்பிள்ளை தேவை, ஏன்னா அவருக்குத்தான் இந்த ஊன வாழ்க்கையின் வலி தெரியும்
என்னையும் என் மனசையும் புரிஞ்சுக்கிட்ட அப்படிப்பட்ட ஒருவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சா போதும் வேலைக்கு போகலைன்னாலும் பராவாயில்லை நான் அவரை பார்த்துக்கிறேன் என்கிட்ட அன்பா இருந்தா போதும்,சாதி மதம் பேதமில்லை
நிறுத்தி நிறுத்தி சின்ன சின்ன வார்த்தைகளால் அந்த பெண் பேசிமுடித்த போது மொத்த அரங்கமும் அமைதியானது.எங்கு இருந்தாவது இந்த பெண்ணின் மனதிற்கு பிடித்த ராஜகுமாரன் வரவேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனையாக இருந்தது.
இது போல பல 'சூடாமணிகள்' அந்த மேடையில் ஏறி நின்று தாங்களாகவும் தங்களுடன் வந்த உறவுகள் மூலமாகவும் அறிமுகம் செய்துகொண்டு அரங்கம் முழுவதும் கண்களை அலைபாயவிட்டனர்.
இதில் சில பெண்களைப் பார்த்தபோது கொஞ்சமும் மாசு மருவற்றவர்களாக இருந்தார்கள் அறிமுகம் செய்யும் போதுதான் அவர்களுக்கு காது கேட்காது பேச்சுவராது என்பது தெரியவந்தது.
சென்னையில் உள்ள தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பும் ,ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளையும் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்வில்தான் மேற்ச் சொன்ன சம்பவங்கள் நடந்தேறின.
ஊனம் காரணமாக மனம் நொந்த நிலையில் இருப்பவர்கள் எந்த விதத்திலும் நோகும்படி நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக அமைப்பின் தலைவர் சிம்மசந்திரன் ஏற்பாடுகளை பார்த்து பார்த்து செய்திருந்தார்,அதற்கு ஒரு முக்கிய காரணம் அவரும் ஒரு மாற்றுத்திறனாளி.
சுயம்வரத்தில் கலந்து கொண்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பலரை அவருக்கு நன்கு தெரிந்திருக்கிறது, அறிமுகம் செய்யும் போதே உங்களுக்கு இவர் சரியா வருவார்னு நினைக்கிறேன்? பேசிப்பாருங்கள் என்று பேசிப்பார்க்க வாய்ப்பு கொடுக்கிறார்.அப்படிப்பேசி தங்களுக்குள் திருமணம் செய்ய சந்தோஷமாக சம்மதித்தவர்களை மேடையில் வைத்து பூங்கொத்து கொடுத்து கவுரவிக்கவும் செய்தார்.
கீதா பவன் அறக்கட்டளையினரை உள்ளபடியே மனதார பாராட்ட வேண்டும் வருடத்திற்கு ஒரு முறை தாங்கள் நடத்தும் இந்த சுயம்வரத்தை தங்கள் வீட்டு விசேஷம் போல நடத்துகின்றனர்.அப்படியொரு சாப்பாடு மற்றும் கவனிப்பு.சுயம்வரத்தில் கலந்து கொண்டு திருமணம் செய்து கொள்ளும் ஒவ்வொரு ஜோடிகளுக்கும் சுமார் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு தங்கத்தாலி உள்பட 51வகை சீர்வரிசை வழங்குகின்றனர்.
திருமணத்திற்கு சம்மதித்த ஜோடிகள் பற்றிய விசாரிப்பு ஒரு மாதத்திற்கு மேல் நடக்கும் பின் சரிதான் என தெரிந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நவம்பர் மாதம் 20ந்தேதி இதே மண்டபத்தில் திருமணம் செய்துவைக்கின்றனர்.
இவர்கள் திருமணத்தை ரிஜிஸ்தர் செய்வது வேலை வாய்ப்பு பெற்றுத்தருவது பிறக்கும் குழந்தைகளை படிக்கவைப்பது போன்றவற்றை கூட்டமைப்பின் சார்பாக சிம்மசந்திரன் பார்த்துக்கொள்கிறார்.
சுயம்வர மேடையில் எவ்வித குறையும் இல்லாத ஆண் மற்றும் பெண்கள் சிலர் தாங்கள் ஒரு ஊனமுற்றவரை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்து பலரது பாராட்டைப் பெற்றனர்.
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் என்பது மற்றவர்களை மகிழ்ச்சிபடுத்தி பார்ப்பதுதான் அதிலும் மாற்றுத்திறனாளிகள் பலரை மணமக்களாக்கி பார்க்கும் சந்தோஷம் இருக்கிறதே அதற்கு ஈடும் இல்லை இணையும் இல்லை இந்த முயற்சி எடுத்தவர்களை மனதார வாழ்த்துவோம். அடுத்து நடைபெறும் சுயம்வர தேதியை தெரிந்து கொண்டு உங்களுக்கு தெரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள் அதற்கான எண்: 9444115936.
-எல்.முருகராஜ்.
murugaraj@dinamalar.in


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malar - nsw,ஆஸ்திரேலியா
20-அக்-201705:25:31 IST Report Abuse
Malar மிகவும் பாராட்டுகிறேன் . "எவ்வித குறையும் இல்லாத ஆண், பெண்கள் ".என்றால்? மாற்று திறனாளிகளை இன்னும் குறை உள்ளவர்களாக பார்க்கிறீர்களா? மனதளவில் உள்ள குறைகளை கண்டறிய முடியுமா, காண முடியாத குறைகளும் உண்டே? எப்படி இருந்தாலும் நல்ல செயல் மகிழ்ச்சி
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
25-செப்-201713:06:07 IST Report Abuse
Bhaskaran கீதாபவன் மற்றும் கூட்டமைப்பின் பணி போற்றத்தக்கது. மன ஊனம் மட்டுமே ஊனமாகும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X