பொது செய்தி

இந்தியா

ரயில்வே உணவில் அளவு மற்றும் விநியோகிப்பவர் விவரங்கள் இடம் பெறவேண்டும்: மத்திய அமைச்சர் உத்தரவு

Added : செப் 21, 2017 | கருத்துகள் (6)
Advertisement
ரயில்வே உணவில் அளவு மற்றும் விநியோகிப்பவர் விவரங்கள் இடம் பெறவேண்டும்: மத்திய அமைச்சர் உத்தரவு


புதுடில்லி: ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் அளவு மற்றும் விநியோகிப்பவரின் விவரங்கள் இடம் பெறுவதனை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு பொருட்களில் தற்பொழுது, சைவம் அல்லது அசைவம் ஆகியவையே குறிப்பிடப்படுகிறது. ஆனால் உணவு பொருட்களை விநியோகிப்பவர் விவரம் இல்லை. ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு பற்றி மத்திய கணக்கு தணிக்கை கடந்த வருடம் கடுமையாக விமர்சித்தது . இதையடுத்து பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரத்தை உயர்த்திட ரயில்வே வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக மத்திய ரயில் அமைச்சர் பியூஸ்கோயல் கடந்த 5-ம் தேதி அனைத்து ரயில்வே மண்டல பொது மேலாளர்களுக்கும் கடிதம் அனுப்பினார். இதில் ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம், சுகாதாரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் ரயில்வே வாரியத்தின் கூடுதல் உறுப்பினர் (சுற்றுலா மற்றும் உணவு வசதி) சஞ்சீவ் கார்க் ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் சைவ அல்லது அசைவ உணவில் அதனை விநியோகிப்பவர் அல்லது ஒப்பந்தக்காரரின் பெயர், எடை, பேக்கிங் செய்யப்பட்ட நாள் மற்றும் தனித்துவ குறியீடு ஆகியவை இடம் பெற வேண்டும். இந்த வழிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-செப்-201708:19:44 IST Report Abuse
Srinivasan Kannaiya சாதாரண நபருக்கா உரிமம் கொடுப்பீர்கள்.. ?ஏதோ ஒரு அமைச்சரின் பினாமிக்கு கொடுப்பீர்கள் அவர்களை பொதுமக்கள் உணவை பற்றி குறை சொன்னால்... நீங்கள் எங்கு வேண்டும் என்றாலும் சொல்லி கொள்ளுங்கள் கவலை இல்லை... என்னுடைய .......கூட முடியாது என்பார்.....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
22-செப்-201706:57:52 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இவங்கெல்லாம் இவர்கள் சொல்லும் சொல்லுக்கும், நடைமுறைக்கும், என்ன வித்தியாசம் என்பதை கண்டுகொள்ளாத முட்டாள்கள். இந்தாளு சொல்றதெல்லாம் அதிலே இருந்தால் அது சுத்தமான உணவாகிவிடுமா? இல்லை எடை சரியாக இருக்குமா? ஏன்னா இவனெல்லாம் விமானத்தில் பறப்பவன்..
Rate this:
Share this comment
Cancel
Uyirinam - Frankfurt,ஜெர்மனி
22-செப்-201705:35:58 IST Report Abuse
Uyirinam ரயிலில் சாப்பிடுவதை நிறுத்தி பலவருஷம் ஆச்சு. ஒருமுறை சென்னை to டெல்லி போற train ல, விநியோகிக்கபோற சாப்பாட்டை கழிவறைல store செஞ்சு வச்சத பார்த்தப்புறம் ஜன்மத்துக்கு ரயில் சாப்பாடு சாப்பிடக்கூடாதுன்னு முடிவுபண்ணியாச்சு. போற உசுரு பட்டினில போகட்டும் .. வீட்ல இருந்து கொண்டுவரது உத்தமம் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X