இரட்டை இலை சின்னம் விவகாரம்: அக்.,5-ம் தேதி இறுதி விசாரணை

Updated : செப் 21, 2017 | Added : செப் 21, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 இரட்டை இலை, சின்னம், விவகாரம்: அக்.,5-ம் தேதி, இறுதி விசாரணை

புதுடில்லி: இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து வரும் 5-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக. இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடை தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி ஓ.பி.எஸ் அணி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். தொடர்ந்து ஓ.பி. எஸ் ., மற்றும் பழனிசாமி அணியினர் இணைந்த நிலையில் மீண்டும் இரட்டை சிலைசின்னத்தை மீட்க முடிவு செய்தனர். இந்நிலையில் சின்னம் தொடர்பாக விரைவில் முடிவு எடுக்க கோரி மதுரை ஐகோர்ட் கிளை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து வரும் 29-ம் தேதிக்குள் இரு தரப்பும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யும் படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து வரும் 5-ம் தேதி இறுதி விசாரணை நடக்கும் எனவும், 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதிக்கு பின்னர் கூடிய செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் பட்டியலையும் சமர்பிக்கும் படியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
22-செப்-201708:57:19 IST Report Abuse
Makkal Enn pakam என்னைக்கு நீங்க தேர்தலுக்கு வாறிங்களோ அன்னைக்கு இருக்கு உங்களுக்கு ஆப்பு
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-செப்-201708:16:06 IST Report Abuse
Srinivasan Kannaiya இப்பிடியே அடுத்த தேர்தல் அறிவிப்பு வரும் வரை இழுத்து கொண்டே போகலாம்... அப்பறம் வேறு ஏதாவது சின்னம் கொடுத்து விடலாம்...
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
22-செப்-201702:38:08 IST Report Abuse
Aarkay சின்னம் கிட்டினாலும், தேர்தலில் அசிங்கப்படப்போவதென்னவோ நிச்சயம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X