அரசியல் காமெடி செய்யும் இருவர் சென்னையில் சந்திப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியல் காமெடி செய்யும் இருவர் சென்னையில் சந்திப்பு

Updated : செப் 22, 2017 | Added : செப் 21, 2017 | கருத்துகள் (347)
Advertisement

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூட்டை தணிக்கும் வகையில், சென்னையில் நேற்று, அரசியல், 'காமெடி' நிகழ்வு அரங்கேறியுள்ளது. டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவாலும், நடிகர் கமலும் சந்தித்து, அரசியல் பேசினர்.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால், டில்லியில் முதல்வராக இருந்தாலும், அரசியல் வட்டாரங்களில், காமெடியன் போலவே பார்க்கப்படுகிறார்.


'ஜன் லோக்பால்'


அவர், 'மோடியை வீழ்த்திக் காட்டுவேன்' என கொக்கரித்தபோதும், வாரணாசியில், 3.37 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியபோதும், 'மாநில அரசியலே போதும்' என, டில்லிக்கு ஓடிய போதும், அவரை, அரசியல் காமெடியனாகவே, நாடு பார்த்தது.
'ஜன் லோக்பால்' சட்ட மசோதாவை நிறைவேற்ற, சமூக சேவகர், அன்னா ஹசாரேவுடன் கைகோர்த்து, போராட்டத்தில் குதித்த, இந்த முன்னாள் அரசு அதிகாரி, பின், அவரையே குற்றம் சாட்டி, கை கழுவினார்.

திடீரென நள்ளிரவில், யாரும் இல்லாத சாலையில், மறியல் செய்து, சாகசம் படைத்தது மட்டுமின்றி, மாலை போட வந்தவர்களிடம், அடி வாங்கிய அனுபவமும் பெற்றவர்.பிரதமர் மோடியை, தரம் தாழ்ந்து விமர்சித்ததால், 'டுவிட்டரில்' ஆயிரக்கணக்கானோர், கழுவிக் கழுவி ஊற்றிய வரலாறும் உண்டு. நள்ளிரவுக்குப் பின், 'டுவிட்' செய்வது, இவரது தனிச் சிறப்பு.


வாய்க்கு வந்தபடி, ஊழல் குற்றச்சாட்டு கூறியதால், சிறைக் கம்பி எண்ணியவர்; அவதுாறு வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.மனம் போன போக்கில் பேசுவதும், பின், அதை மறுப்பதும் என, அவரது காமெடிக்கு அளவே கிடையாது.

காங்கிரசை சேர்ந்த, ஷீலா தீட்சித்தை, 'ஊழல்வாதி' என, ஒரு நாளும்; 'நல்லவர்' என, மறுநாளும் சான்றிதழ் கொடுத்து, அரசியல் நையாண்டி செய்வதில் வல்லவர். யாரும் நினைத்து கூட பார்க்காத வகையில், 'டில்லியில், ஒற்றைப்படை பதிவு எண் வாகனங்கள் ஒரு நாளிலும், இரட்டை படை பதிவெண் வாகனங்கள், ஒரு நாளிலும் இயங்க வேண்டும்' என, கோமாளித்தனம் செய்து, 'வாங்கி' கட்டியவர். 'ஊழலை ஒழிப்பேன்' எனக் கூவிய இவரது அமைச்சர்களே, ஊழலில் சிக்கியது தனி கதை.
இதுபோல், தமிழகத்தில், கமல், புது காமெடியனாக அவதாரம் எடுத்துள்ளார். அவரது, விஸ்வரூபம் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட போது, 'நாட்டை விட்டே வெளியேறுவேன்' என கூறி, சர்ச்சையில் சிக்கியவர். ஜெ., இருந்த வரை, எதிர்த்து பேச பயந்தவர், தற்போது, 'சவுண்டு' விடுகிறார்.
திடீரென, 'அருள்' வந்தவர் போல், கேரள முதல்வரிடம் சென்று, அரசியல் பாடம் படித்து வந்துள்ளார். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதல்வர்களாக இருந்தபோது, அமைதியாக இருந்துவிட்டு, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கிடைக்கும் கைதட்டல்களை தவறாக புரிந்து, அரசியல் வசனங்களை பேசி திரிகிறார். கொள்கை அளவில் எதிர் துருவமான ரஜினியுடன் சேர்ந்து, அரசியலில் இறங்கத் தயார் என்றும் குழப்பி வருகிறார். இவ்வாறு, வடக்கில் காமெடியனாக உலா வரும் கெஜ்ரிவாலும், தெற்கில் புது காமெடியனாக உருவாகியுள்ள கமலும் சந்தித்த, ஒரு நிகழ்வு, நேற்று அரங்கேறியது.


நிருபர் சந்திப்பு:

அதன் விபரம்: ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், சென்னையில், நேற்று நடிகர் கமல்ஹாசனை சந்தித்து, ஒரு மணி நேரம் பேசினார்.இந்த சந்திப்புக்கு பின், ஆம் ஆத்மி கட்சியில், கமல் சேருவார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.


சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, கமல் இல்லத்தில், இந்த சந்திப்பு நடந்தது. அங்கு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, மதிய விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, சென்னை விமான நிலையத்தில், கெஜ்ரிவாலை, கமலின் மகள், அக் ஷரா வரவேற்று, வீட்டுக்கு அழைத்து வந்தார்.

அரசியல் குறித்து, இருவரும் தனியாக பேசினர். அப்போது, ஆம் ஆத்மியில் சேரும் படி, கமலுக்கு கெஜ்ரிவால் அழைப்பு விடுத்தார்; இதன்பின், இருவரும் கூட்டாக, நிருபர்களை சந்தித்தனர்.


'சிறப்பு வாய்ந்த சந்திப்பு'


டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, கெஜ்ரிவால் கூறியதாவது: நான், கமலின் தீவிர ரசிகன். தற்போது, ஊழல் மற்றும் மதவாதம் உள்ளிட்ட பிரச்னைகளில், நாடு சிக்கியுள்ளது. இந்த பிரச்னையை தீர்த்து வைக்க, ஒருமித்த கருத்து கொண்டவர்கள் இணைந்து பேச வேண்டும்; இணைந்து செயல்பட வேண்டும்.
நாட்டு மக்கள், மதவாதத்திற்கும், ஊழலுக்கும் எதிரான மன நிலையில் உள்ளனர். மதவாதத்திற்கு எதிரான நிலையை, கமல், தன் கருத்துக்கள் வாயிலாக தெளிவுபடுத்தி உள்ளார். தீவிர அரசியலில், கமல் ஈடுபட வேண்டும். எங்கள் சந்திப்பு, சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


'பெரும் பாக்கியம்'


நடிகர் கமல், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கெஜ்ரிவால், என்னைச் சந்திக்க வேண்டும் எனக் கூறியதை, பாக்கியமாக கருதுகிறேன். நாங்கள் சந்தித்துப் பேசியதை, உங்களால் யூகிக்க முடியும். ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும், எனக்கு உறவினர்களாகி விடுகின்றனர் என்பது தான் உண்மை.
அந்த வகையில், இந்த உறவு தொடர்கிறது. என் தந்தை இருந்தபோது, இந்த வீடு, அரசியல் தொடர்புடன் இருந்தது; அதை, நான் ஓரத்தில் இருந்து கவனித்திருக்கிறேன். ஊழலுக்கு எதிராக, நீண்ட காலமாகவே, கெஜ்ரிவால் போராடி வருகிறார்.

ஊழல் மற்றும் மதவாதத்திற்கு எதிராக போராடுபவர்களும், எனக்கு உறவினர்கள். கெஜ்ரிவாலுடன் நடந்த சந்திப்பு, எனக்கு சில நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள உதவியது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (347)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thonipuramVijay - Chennai,இந்தியா
23-செப்-201700:46:14 IST Report Abuse
thonipuramVijay தனி ஒரு ஆளாக ஒரு மாநிலத்தின் மூத்தவராக உயர்ந்திருக்கிறார் மேலும் சில மாநிலங்களில் செல்வாக்கு படைத்திருக்கிறார் ..... இப்போது இருக்கும் அரசியல்வாதிகளுக்கு கமல் எவ்வளவோ மேலானவர் ....இவர்கள் சந்திப்பை காமெடி என்று நீங்கள் எழுதுவது கண்டிக்கத்தக்கது ..... இளிச்சவாயன் கிடைத்தால் என்னவேண்டுமென்றாலும் எழுதலாம் என்ற உங்கள் குணம் நல்லதல்ல .....நீங்கள் எழுதுவது மக்களின் எண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் ...எனவே ஞாய மானதாக எழுதுங்கள் ...... குறிப்பு : நான் கமல் ரசிகனோ அல்லது கெஜ்ரிவால் கு கூஜா வோ தூக்கவில்லை ....உங்கள் எழுத்து நியாயமானதாக இருக்கவேண்டும் என்பதே என் ஆதங்கம் ....
Rate this:
Share this comment
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
26-செப்-201709:35:33 IST Report Abuse
R.BALAMURUGESANப.ஜ.கா வை இரண்டு முறை, தொடர்ந்து டில்லியில் மண்ணை கவ்வ வைத்ததை எழுதவே இல்லை... அடுத்த முறையும் பார்ப்போம் யார் காமெடியன் என்று......
Rate this:
Share this comment
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
26-செப்-201709:51:27 IST Report Abuse
R.BALAMURUGESANஇவெங்கெ ட்விட்டரில்தான் அரசியலே நடத்துறாங்கெ, இதில் கெஜ்ரிவால் நள்ளிரவில்தான் ட்விட் செய்வார் என்கிறார்கள்... ஏன் நள்ளிரவில் மோடி மஸ்தான் மட்டும்தான் டுவீட் செய்ய வேண்டுமா, வேறு யாரும் செய்ய கூடாதா என்ன......
Rate this:
Share this comment
Cancel
lax - nagercoil,இந்தியா
22-செப்-201721:20:54 IST Report Abuse
lax மக்கள் நினைத்தால் கமல் முதல்வர்...
Rate this:
Share this comment
Cancel
Krishna - Dindigul,இந்தியா
22-செப்-201721:12:15 IST Report Abuse
Krishna வாழ்த்துக்கள் தினமலர்..ஐ லவ் யூயூ ....ஹஹஹஹ ....கமல் தனியா நின்னு சொன்னா கூட எதோ பரவால்ல ங்களாம்..... இந்த 420 மற்றும் பினராயி விஜயனோட சேந்து ஊழல ஒழிப்பேன்னு சொன்னான் பாத்தியா.... அடேங்கப்பா.... அப்போவே தெரிஞ்சு போச்சு இவன் எப்படி ஒழிப்பான்னு.. இந்த 420 AK தான் மம்தா லாலு காங்கிரஸ் ஓட சேந்து ஊழலை ஒளிச்சுட்டு இப்போ வந்துருக்காம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X