அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க., ADMK, தேர்தல் கமிஷன், Election Commission, இரட்டை இலை, irattai ilai, முதல்வர் பழனிசாமி,Chief Minister Palanisamy, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி,Ex-Minister KP Munusamy, பொதுக்குழு,General Council, சசிகலா , Sasikala, சின்னம், Symbol,பழனிசாமி,palanisamy,

தேர்தல் கமிஷன் முடக்கிய, அ.தி.மு.க., மற்றும் இரட்டை இலை சின்னத்தை பெற, முதல்வர் பழனிசாமி தரப்பு, முனைப்பு காட்டி வருகிறது. இரண்டு அணிகள் இணைந்ததற்கான ஆவணங்கள் மற்றும் கட்சி பெயர் மற்றும் சின்னத்தை பெறுவதற்கான மனு, டில்லியில், நேற்று தலைமை தேர்தல் கமிஷனிடம் அளிக்கப்பட்டது.

அ.தி.மு.க., ADMK, தேர்தல் கமிஷன், Election Commission, இரட்டை இலை, irattai ilai, முதல்வர் பழனிசாமி,Chief Minister Palanisamy, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி,Ex-Minister KP Munusamy, பொதுக்குழு,General Council, சசிகலா , Sasikala, சின்னம், Symbol,பழனிசாமி,palanisamy,

அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டதில் இருந்து, நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்களைக் காட்டிலும், தேர்தல் கமிஷனுக்கு, அதிக குழப்பம் ஏற்பட்டது. இந்தியாவில், இதுவரை எந்த கட்சிக்கும் ஏற்படாத, புது சிக்கலுக்கு தீர்வு சொல்லும்படி, அ.தி.மு.க., அணிகள் மல்லுக்கு நின்றன;இதனால், தேர்தல் கமிஷனுக்கு

தலைவலி ஏற்பட்டது. இரண்டு அணிகளும், 'எங்களை அங்கீகரியுங்கள்' எனக் கோரி, லட்சக்கணக்கில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்தன. பின், சசிகலா அணி உடைந்து, புதிதாக பழனிசாமி அணி முளைத்தது. அதன்பின், பழனிசாமியும், பன்னீரும் இணைந்து, பெரும்பான்மை ஆதரவு உடன்,பெரிய அணி உருவானது. அதனால், பொதுக்குழு கூட்டப்பட்டு, பொதுச் செயலர் பதவியிலிருந்து, சசிகலா நீக்கப்பட்டார்.

அடுத்த கட்டமாக, கட்சி பெயர் மற்றும் சின்னத்தை மீட்கும் பணியில், முதல்வர் தரப்பு, முனைப்பு காட்டத் துவங்கி உள்ளது.தமிழக அமைச்சர்கள்,நேற்று தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகம் சென்றனர். பொதுக்குழு தீர்மானங்களை, தேர்தல் கமிஷனிடம் ஒப்படைத்து, கட்சி பெயர் மற்றும் சின்னத்தை, தங்களுக்கு ஒதுக்கும்படி, மனு அளித்தனர்.

மேலும், பிளவுபட்ட கட்சியினர் இணைந்து விட்டதாகவும், அதற்கான ஆதாரங்களையும் அளித்தனர்.தேர்தல் கமிஷனை பொறுத்த வரை, இந்த விவகாரத்தில், பன்னீர்செல்வமும், மதுசூதனனும் தான் மனுதாரர்கள்; சசிகலாவும்,

Advertisement

தினகரனும், எதிர் மனுதாரர்கள். ஆனால், நேற்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், '2016 டிச., 29ல், பொதுக்குழு நடந்தது. அதில், சசிகலா தேர்ந்தெடுக்கபட்டார்' என்ற வார்த்தை, ஒரு இடத்திலும் கூறப்படாமல், கவனமாக தவிர்க்கபட்டுள்ளது. அதேபோல், எதிர் மனு தாரர் என்ற பகுதியில், சசிகலா,தினகரன் என,இருந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதில், 'முதல்வர் தலைமையிலான, எம்.எல்.ஏ., மற்றும், எம்.பி.,க்கள்' என குறிப்பிட்டுள்ளனர்.

அக்.,6ல் விசாரணை


பொதுச்செயலராக சசிகலா நியமனம், நீக்கம் போன்ற, பழைய விஷயங்கள், முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளன.இதன் வாயிலாக, 'பொதுக்குழுவே இறுதியானது; தேர்தல் கமிஷனின் விதிமுறைகளின்படி, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பெரும்பான்மை ஆதரவு எங்களிடம் உள்ளது' என்ற ரீதியில், பிரமாணப் பத்திரம் உள்ளதாக தெரிகிறது. இதன் அடிப்படையில், கட்சியின் பெயரும், சின்னமும் யாருக்கு என்பது குறித்து, தேர்தல் கமிஷன், அக்., 6ம் தேதி விசாரணை நடத்த உள்ளது.

புதிய விதிமுறைகள்!


முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி கூறுகையில், ''இணைப்புக்கான கடிதம் அளிக்கப்பட்டுள்ளது; பொதுக்குழு அங்கீகாரத் துடன், பொதுச்செயலருக்கு இணையாக உருவாக்கபட்ட ஒருங்கிணைப்பாளர், இணை, துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள், கட்சியின் புதிய விதிமுறைகள் ஆகிய விபரங்களை, தேர்தல் கமிஷனிடம் அளித்துள்ளோம்,'' என்றார்.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (21)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Deva Nesan - erode,இந்தியா
23-செப்-201714:30:29 IST Report Abuse

Deva Nesanஇனி வயசுக்கு வந்தா என்ன ? வராட்டி என்ன ?

Rate this:
தேவி தாசன் - chennai,இந்தியா
23-செப்-201713:48:41 IST Report Abuse

தேவி தாசன்இனி இரட்டை இலைய வாங்கி சோறுகூட திங்க முடியாது

Rate this:
kandhan. - chennai,இந்தியா
23-செப்-201715:24:39 IST Report Abuse

kandhan.தேவி தாசன் அவர்களே இரட்டைஇலையை வைத்து மக்களிடம் பிச்சை எடுக்கலாமே ???ஏன் முடியாது அதையும் நம் அமைச்சர்கள் செய்வதற்கு தயாராயுள்ளனர் இதுதான் இன்றைய அரசின் நிலை .......மோடியிடம்தான் பிச்சை கேட்கின்றனரே ??????நமது மக்கள் நன்கு தெளிவாகி உள்ளனர் இதற்க்கு விடை வரும் தேர்தலில் காத்து கிடக்கிறது ?????? கந்தன் சென்னை ...

Rate this:
s.f.edison - chennai,இந்தியா
23-செப்-201711:45:51 IST Report Abuse

s.f.edisonஇரட்டைஇல வந்தால் என்ன போனால் என்ன . ஆத்தா மழை பெஞ்சதும் சாயம் வெளுத்து வெள்ளகோழின்னு தெரிஞ்சுடுச்சு . எல்லாம் கிளம்புங்க.

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X