அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர்களின் பி.ஏ.,க்கள், அதிகாரிகள் கண்காணிப்பு

Updated : செப் 24, 2017 | Added : செப் 24, 2017 | கருத்துகள் (13)
Advertisement
அமைச்சர்களின் பி.ஏ.,க்கள், அதிகாரிகள் கண்காணிப்பு

கட்சி நடவடிக்கைகள் மற்றும் அரசு தகவல்களை, தினகரன் தரப்புக்கு தெரிவிப்போரை கண்டறிந்து, அவர்களை களைய, முதல்வர் தரப்பு முடிவு செய்துள்ளது.

அ.தி.மு.க.,வில், 33 ஆண்டுகளுக்கும் மேலாக, சசிகலா குடும்பத்தினர் கோலோச்சி வந்தனர். ஜெ., இருந்தபோதும், அரசிலும், கட்சியிலும், முக்கிய முடிவுகளை, சசிகலா குடும்பத்தினரே எடுத்து வந்தனர். இதை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் தினகரன் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கினார்.

அவர் பேசுகையில், 'அமைச்சர் சீனிவாசன் எந்த நிலையிலிருந்தார்; அவருக்கு, எம்.எல்.ஏ., 'சீட்' கொடுத்தது யார்; அமைச்சராக்கியது யார்; அமைச்சர் ஜெயக்குமாருக்கு, கட்சிப் பதவி வழங்கியது யார்?' என, கேள்வி எழுப்பினார்.

இதன் வாயிலாக, ஜெ., இருந்தபோதும், வேட்பாளர் முடிவு உட்பட அனைத்திலும், அவர்கள் ஆதிக்கம் செய்தது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், பிளவுபட்ட, அ.தி.மு.க., அணிகள் இணைந்து, ஒட்டுமொத்தமாக, சசிகலா குடும்பத்தை ஓரம் கட்டியுள்ளன.

அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலாவை பொதுச்செயலர் பதவியில் இருந்து விலக்கும் தீர்மானத்தை, அமைச்சர் உதயகுமார் வாசித்தார்; அப்போது, அரங்கமே அதிரும் வகையில், அனைவரும் கை தட்டியது, சசிகலாமீதுள்ள வெறுப்பை காட்டியது.இதை தாங்க முடியாத தினகரன், முதல்வர் பழனிசாமி ஆட்சியை, எப்படியும் கவிழ்த்து விட வேண்டும் என்ற முடிவோடு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், முதல்வர் தரப்பு எடுக்கும் நடவடிக்கைகள், அரசு தகவல்கள், உடனுக்குடன் தினகரனுக்கு தெரிந்து விடுகிறது. இதை தடுக்க, முதல்வர் தரப்பு முடிவு செய்துள்ளது.அமைச்சர்களிடம், பி.ஏ.,க்களாக உள்ளவர்களில், பலர் சசிகலா குடும்பத்தால் நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் வாயிலாக, தகவல் கசிவதாக தெரிய வந்துள்ளது. சில அதிகாரிகளும், தினகரன் தரப்புக்கு தகவல்கள் கூறி வருகின்றனர். இவர்களை தான், 'ஸ்லீப்பர் செல்' என, தினகரன் கூறுவதாக தெரிகிறது.

இதை உணர்ந்த முதல்வர் தரப்பு, சந்தேகத்திற்கு உரியவர்களை கண்காணிக்க துவங்கி உள்ளது. தினகரனுக்கு தகவல்களை, 'பாஸ்' செய்யும், அமைச்சர்களின் பி.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகளை களையெடுக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை, முதல்வர் தரப்பு துவக்கி உள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rahim - Riyadh,சவுதி அரேபியா
24-செப்-201719:43:33 IST Report Abuse
Rahim EPS மற்றும் OPS இருவரையும் கண்காணித்தால் இன்னும் நெறைய விஷயங்கள் கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
24-செப்-201714:11:09 IST Report Abuse
Baskar கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
24-செப்-201710:40:32 IST Report Abuse
balakrishnan கண்காணிப்பு என்பதற்கு பதில் கவனிப்பு என்றிருந்தால் நன்றாக இருக்கும்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X