ரயில் உணவுகளில் 'ஸ்டிக்கர்' கட்டாயம்: ஐ.ஆர்.சி.டி.சி., உத்தரவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரயில் உணவுகளில் 'ஸ்டிக்கர்' கட்டாயம்: ஐ.ஆர்.சி.டி.சி., உத்தரவு

Added : செப் 26, 2017 | கருத்துகள் (30)
Advertisement
ரயில் உணவு,Train food,  ஸ்டிக்கர், sticker,ஐ.ஆர்.சி.டி.சி., IRCTC, இந்திய ரயில்வே உணவு கழகம்,Indian Railway Food Corporation,   ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் , Railway Minister Piyush Goyal,

ரயில் பயணியருக்கான உணவு பொட்டலங்களில், தயாரிப்பு குறித்த விபரங்களை பதிவு செய்ய, இந்திய ரயில்வே உணவு கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., உத்தரவிட்டுள்ளது.

'ஐ.ஆர்.சி.டி.சி., தயாரித்த உணவாக இருந்தாலும், தனியாரிடம் பெறப்பட்ட உணவாக இருந்தாலும், பயணியருக்கு வழங்கும் போது, அதன் தரம் உறுதி செய்யப்பட வேண்டும்' என, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, 'உணவு பொட்டலங்களில், எடை, தயாரிப்பு தேதி, நிறுவனம், ஒப்பந்ததாரரின் பெயர் இடம்பெற வேண்டும் என்றும், மீறும் ஒப்பந்ததாரர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்றும், அவர் எச்சரித்திருந்தார்.

அமைச்சரின் உத்தரவை செயல்படுத்தும் வகையில், உணவு பொட்டலங்களில், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், தயாரிக்கப்பட்ட தேதி, எடை அளவு, சைவமா, அசைவமா என்பது குறித்த, 'ஸ்டிக்கர்' ஒட்டும் பணி துவங்கி உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி., தயாரிக்கும் உணவுகளிலும், இதுபோல், 'ஸ்டிக்கர்' ஒட்டப்படுகிறது.

- நமது நிருபர் -

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hariharan Iyer - Nagpur,இந்தியா
26-செப்-201714:57:23 IST Report Abuse
Hariharan Iyer ஜைஹிந்த்புரம் என்று பொய்யான பெயரை வைத்துக்கொண்டு பொய்யான செய்திகளை போடும் முட்டாளுக்கு மத்திய சர்க்கார் எந்த நல்ல திட்டங்களை கொண்டுவந்தாலும் கண்மூடித்தனமாக எதிர்க்கும் இவனுக்கு எப்போதுமே காமாலைக்கண். ஸ்டிக்கரில் பெயர் அட்ரஸ் விலை தேதி எடை எல்லாம் போட்டால் தானே அவன் மீது வாங்குபவர்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற ஒரு அறிவு கூட இல்லாதவன்.
Rate this:
Share this comment
Cancel
26-செப்-201714:53:42 IST Report Abuse
VSubramanian very good beginning. Similarly action is to be taken for over charging tea/coffee. Usually charge is Rs 10/ agsinst the recommended price of Rs7/
Rate this:
Share this comment
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
26-செப்-201712:17:59 IST Report Abuse
B.s. Pillai நீ கோலத்தில் பாய்ந்தா, நான் புள்ளியில் பாய்வேன். வல்லவனுக்கு வல்லவன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X