98 வயதில் எம்.ஏ., பட்டம் சாதனை படைத்த தாத்தா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

98 வயதில் எம்.ஏ., பட்டம் சாதனை படைத்த தாத்தா

Updated : செப் 27, 2017 | Added : செப் 26, 2017 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எம்.ஏ பட்டம், MA Degree, தாத்தா,Grandpa,  ராஜ்குமார் வைஷ்யா, Rajkumar Vishya,பீஹார், Bihar, நாளந்தா திறந்த வெளி பல்கலை, Nalanda Open University, உத்தர பிரதேசம்,  Uttar Pradesh, ஜார்க்கண்ட் ,  Jharkhand, முதுகலை பட்டம் , Master Degree, வைஷ்யா, Vaishya,பாட்னா, Patna,

பாட்னா: பீஹாரைச் சேர்ந்த, 98 வயதாகும் ராஜ்குமார் வைஷ்யா, அதிக வயதில் முதுகலை பட்டம் பெற்றவர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார்.

பீஹார் தலைநகர் பாட்னாவைச் சேர்ந்தவர், ராஜ்குமார் வைஷ்யா. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர், உத்தர பிரதேசத்தின் பரேலியில் பணியாற்றினார். கடந்த, 1938ல், பி.ஏ., பட்டம் பெற்ற இவர், 1940ல், சட்டமும் முடித்தார்.முதுகலை பட்டம் பெற வேண்டும் என, நீண்டகாலமாக ஆசைப்பட்டு வந்த அவர், 2015ல் பாட்னாவில் உள்ள, நாளந்தா திறந்த வெளி பல்கலையில், எம்.ஏ., பொருளாதாரம் படிக்க பதிவு செய்தார். கடந்த ஆண்டு, முதலாம் ஆண்டு தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றார்.

தற்போது, இரண்டாம் ஆண்டு தேர்விலும் தேர்ச்சி பெற்று, எம்.ஏ., பட்டம் பெற உள்ளார்.
மிக அதிக வயதில், முதுகலை பட்டப் படிப்பை படிப்பவர் என, 'லிம்கா' இந்திய சாதனை புத்தகத்தில் இவருடைய பெயர் இடம்பெற்றது.

“இந்த வயதில் படிப்பது என்பது சற்று கடினமாகவே இருந்தது. இருப்பினும், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதை இளைய தலைமுறையினர் உணர வேண்டும்,” என்கிறார், வைஷ்யா.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kundalakesi - VANCOUVER,கனடா
27-செப்-201716:58:26 IST Report Abuse
kundalakesi இப்படித்தான் , ஒரு கிழவர் "துகிருங் கரனே" என்று இலக்கணத்தை உருப்போட்டுக் கொண்டிருந்தார். அவரைக் கண்டு ஆதி சங்கரர் நகைத்து, கடவுளை அடைய நினையாது, இவ்வயதில் பயனில்லாத இலக்கணம் பயில்கிறாயே என , புத்தியிலுறைக்கும் வாறு பஜகோவிந்தம் என்ற 32 வெண்பாக்கள் பாடினார். அணைத்து ஆத்மாவை தெரியவைக்கும் முத்துக்கள்.
Rate this:
Share this comment
Balaji - ,
27-செப்-201719:34:51 IST Report Abuse
Balajithis is what I also thought .this is the age to think of God only. nothing else.Thay is why sakarar advised correctly....
Rate this:
Share this comment
Cancel
V.Ravichandran - chennai .,இந்தியா
27-செப்-201715:46:30 IST Report Abuse
V.Ravichandran வணங்குகிறேன் . தங்களுடைய முயற்சிக்கு பாராட்டுகள் . இங்கு தமிழ் நாட்டில் படி என்றால் தற்கொலை செய்து கொள்வார்கள் .
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
27-செப்-201714:27:09 IST Report Abuse
மலரின் மகள் தேவையற்ற ஒன்று என்ன பிரயோசனம். உண்மையாக பார்த்தால், திறந்த வெளி பல்கலையின் லட்சங்களை வெளி காட்டுவதாக இது தெரிகிறது. நான் மற்றவர்களிலிருந்து மாறுபடுகின்றேனா? எனது யதார்த்தம் சரி அல்லவா?
Rate this:
Share this comment
27-செப்-201716:37:19 IST Report Abuse
ARUN.POINT.BLANKlearn to appreciate good deeds instead of criticising. this is my humble suggestion....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X