அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே டெங்கு பரவ காரணம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

Added : செப் 28, 2017 | கருத்துகள் (71)
Advertisement
ஸ்டாலின், Stalin, டெங்கு காய்ச்சல்,Dengue Fever, விஜயபாஸ்கர்,  Vijayapaskar, உள்ளாட்சி தேர்தல்,Local election, சென்னை ,Chennai, திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,DMK Executive Chairman Stalin,ஸ்டான்லி மருத்துவமனை,Stanley Hospital,  சிகிச்சை,Treatment,  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், , Health Minister Vijayapaskar,முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, லஞ்சம் , Bribery, ஜெயலலிதா,Jayalalithaa,  டில்லி டாக்டர்கள், Delhi Doctors,

சென்னை : திமுக செயல் தலைவர் ஸ்டாலின், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்தார். அங்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் டெங்கு வேகமாக பரவி வருகிறது. ஆனால் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தவறான தகவல்களை தந்து கொண்டு இருக்கிறார். குதிரை பேர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமியும் இதனை கண்டு கொள்ளவில்லை. தமிழகத்தில் 7000 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 25 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. படுக்கை வசதிகளும் செய்து தரப்படவில்லை. ஆனால் இதனை சரி செய்ய வேண்டிய அமைச்சர்கள் எந்த துறையில் எப்படி லஞ்சம் வாங்கலாம் என பார்த்துக் கொண்டுள்ளனர். ஒருவேளை டெங்குவை பரப்பும் கொசுவிடமும் ஏதாவது வாங்கலாமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்களா என தெரியவில்லை.
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரித்தால் மட்டுமே சரியாக இருக்கும். அப்போது தான் உண்மை வெளி வரும். அமைச்சர்கள், அதிகாரிகள், மத்திய அமைச்சர்கள், டில்லி டாக்டர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும். உரிய நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததே டெங்கு பரவுவதற்கு காரணம். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் சுகாதாரப் பணிகள் முறையாக நடந்திருக்கும். இவ்வாறு ஸ்டாலின் பேசி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
29-செப்-201700:51:49 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> வெளிநாடுகளில் எங்கேயும் எப்போதும் பாலீச்சுன்னு தெருக்கள் மின்னும் குழந்தைகூட லாலிபாப் சாட்டுட்டுட்டு ஒளுங்க குப்பைதொட்டிலே போடும் வெளியே யாராச்சும் பேப்பர் போல ஏதாச்சும் போட்டிருந்தா பொருக்கி உள்ளே போட்டுடும் அதேபோல வீட்டுக்குப்பைகளை அழிந்துபோகும் குப்பை லாரிகளும் ஒட்டிண்டுவரும் நபர்களும் அவ்ளோ கிளீன் ஆகா ஒட்டிண்டுவருவான் வாயிலே சிகரெட்டும் இருக்காது இடுக்கிபோல ஒரு சாதனம் இருக்கு அது அந்தகுப்பை தொட்டிகளை கவ்வி எடுத்து லாறிலே போட்டுடும் அதேபோல ரேசைக்கிள் ஆகும் பொருட்களை தனியாபோட்டால் அந்தடப்பாவையும் எடுத்து இன்னொரு லாறிலே போட்டுண்டுபோயிடுவாங்க நம்ம ஊரிலே குப்பை அள்ளவரும் நபர்கள் வாயிலே வெத்தலை புகையிலை குப்பை அள்ளும் பொது தும்பிண்டே இருக்காங்க (லேடீஸ் ஜென்ட்ஸ்) பீடியா அணைக்காமல் போட்டுட்டு போயின்னே இருக்கானுக இங்கே குப்பை லாரிகள் குப்பாளிகளி இறைச்சுண்டுதான் போறது, மீறிய எல்லா தெருக்களிலும் இருக்கு டோஇலேட் வசதி, இந்த ஜன்மா லே நேக்கு துருவ இந்தியாவை பார்க்கும் பாக்கியம் இல்லேங்க
Rate this:
Share this comment
Cancel
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
28-செப்-201721:47:03 IST Report Abuse
Mahendran TC இந்த லட்சணத்தில் இந்தாளுக்கு முதலமைச்சர் கனவு வேறே
Rate this:
Share this comment
Cancel
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
28-செப்-201721:46:13 IST Report Abuse
Mahendran TC நட்டு , போல்ட் கழண்டவனெல்லாம் இப்படித்தான் பேசுவானுங்க .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X