காங்.,கிற்கு குடைச்சல் தர கூட்டணி கட்சிகள் திட்டம்

Updated : பிப் 14, 2011 | Added : பிப் 12, 2011 | கருத்துகள் (8) | |
Advertisement
விரைவில் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கவுள்ள நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்க பார்லிமென்ட்டின் கூட்டுக்குழு அமைப்பதற்கு ஒப்புக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டுக்குழு விஷயத்தில் காங்கிரஸ் இறங்கி வந்ததற்கு காரணம் எதிர்க்கட்சிகளின் விடாப்பிடியான கோரிக்கை என்பதை காட்டிலும், கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடியே என்று தெரிய வந்துள்ளது. பட்ஜெட்

விரைவில் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கவுள்ள நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்க பார்லிமென்ட்டின் கூட்டுக்குழு அமைப்பதற்கு ஒப்புக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டுக்குழு விஷயத்தில் காங்கிரஸ் இறங்கி வந்ததற்கு காரணம் எதிர்க்கட்சிகளின் விடாப்பிடியான கோரிக்கை என்பதை காட்டிலும், கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடியே என்று தெரிய வந்துள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடருக்காக வரும் 21ம் தேதி முதல் பார்லிமென்ட் கூடவுள்ளது. கடந்த குளிர் கால கூட்டத் தொடர் முழுவதும் வீணாக கழிந்துவிட்ட நிலையில் பட்ஜெட்டை எப்படியும் சுமூகமாக நிறைவேற்றி விட வேண்டுமென்று காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. ஆனால் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை நடத்த ஒப்புக் கொள்ள வேண்டுமென்று பா.ஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிடிவாதம் காட்டுகின்றன. ஆனாலும் இத்தனை நாட்களாக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சுத்தமாக நிராகரித்தே வந்தது காங்கிரஸ். ஆனால் சில தினங்களுக்கு முன் நடை பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முதன் முறையாக தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ள காங்கிரஸ் முன்வந்துள்ளது வெளிப்படையாக தெரிந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முக்கிய கூட்டணி கட்சிகளாக இருக்கும் தி.மு.க., தேசியவாத காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவையே. இந்த கட்சிகளில் தி.மு.க., தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளின் பெயர்களுமே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடிபடுகின்றன.

ராஜாவால் திமுக மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், மும்பையில் கைதாகியிருக்கும் பல்வாவுக்கு சரத்பவார் மிகவும் நெருக்கம் என்று தகவல்கள் கூறுகின்றன. ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் தங்கள் மீது விமர்சனம் விழும் அதே சமயம், காங்கிரஸ் பற்றி இவ்விஷயத்தில் ஒன்றுமே வெளியாகாமல் உள்ளது என்று இக்கட்சிகள் நினைக்கின்றன. இதற்கு ஒரே வழி கூட்டுக்குழு விசாரணை தான் என்றும் இந்த கட்சிகள் முடிவுக்கு வந்துவிட்டன. இதன் அடிப்படையில் தான் கூட்டுக்குழு அமைப்பதற்கு ஆதரவா எதிர்ப்பா என்பது குறித்து வெளியில் தெளிவில்லாமல் குழப்பியபடியே கூறிக் கொண்டிருக்கும் தி.மு.கவும், தேசியவாத காங்கிரசும், பிரணாப் முகர்ஜி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டங்களில் எல்லாம் கூட்டுக்குழுவுக்கு ஆதரவு தெரிவித்தே வந்துள்ளன. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரது பெயர்கள் விமர்சனத்துக்குள்ளாகாமல் இருப்பதை புரிந்து கொண்ட இந்த கட்சிகள் கூட்டுக்குழு விசாரணை நடத்தினால் இவர்களை எதிர்க்கட்சிகள் தீவிரமாக விமர்சிக்க துவங்குமென கருதுகின்றன. அந்த சமயத்தில் தங்கள் மீதான விமர்சன வெப்பம் சற்று தணியும் என்றும் கணக்குப் போட்டதாலேயே கூட்டுக்குழு வேண்டுமென இக்கட்சிகள் கேட்டு வந்தன. தவிர காமன்வெல்த் போட்டிகளில் நிறைய காங்கிரஸ் தலைவர்கள் ஊழல்களில் சிக்கியிருந்தும் அவர்கள் பெயரும் வெளிவராமல் இருப்பதை இக்கட்சிகள் விரும்பவில்லை.

இந்த பின்னணியில் தான் டில்லிக்கு வந்திருந்த போது தமிழக முதல்வர் கருணாநிதியை சரத்பவார் வந்து ஒரு மணி நேரம் சந்தித்து பேசிய விட்டுச் சென்றார் என்று கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளின் 45 எம்.பி.,க்களின் தயவில் தான் மத்திய அரசு உள்ளது. எனவே இவர்களது கருத்துக்களை இனியும் ஏற்காமல் இருக்க முடியாது என்பதை காங்கிரஸ் உணர்ந்ததால் தான் கூட்டுக்குழு விசாரணையை ஏற்கும் மனநிலைக்கு வந்துள்ளது என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. குறிப்பாக திமுக தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நெருக்கமாகி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரசுக்கு பதில் குடைச்சல் கொடுக்க அதிக வாய்ப்பு உருவாகி வருவதாகவும் தெரிகிறது. கருணாநிதி பவார் சந்திப்பு நடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் திண்டிவனம் ராமமூர்த்தி தலைøயிலான கட்சியை கலைப்பதாக அறிவிப்பு வெளியானது. அ.தி.மு.க.,வுடன் ராமமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தியதால் தான் இந்த முடிவு என்றும் கூறப்படுகிறது. உண்மையில் ஏற்கனவே சரத்பவார் சொல்லித் தான் அ.தி.மு.க.,வுடன் ராமமூர்த்தி பேசியுள்ளார். ஆனாலும் இந்த திடீர் முடிவுக்கு பின்னணியில் ஸ்பெக்ட்ரம் விஷயம் தான் என்று தெரிகிறது. பவார் கட்சி சார்பில் ராஜேஸ்வரன் விரைவில் முதல்வர் கருணாநிதியை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி குறித்து சந்தேகங்களும் கிளம்பியுள்ளன. தி.மு.க நெருக்கடி தந்தே ஐந்து பேர் குழு போடப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு போட்டும் பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்காமல் காலம் கடத்துவதும் திமுக வுக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. கூட்டணி குறித்து வேறுசில திட்டங்களை மேற்கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதோ என்றும் தி.மு.க சந்தேகப்பட ஆரம்பித்துள்ளது. இதனால் ஸ்பெக்ட்ரத்தை மையமாக வைத்து கூட்டணியில் புகைச்சல் கிளம்பலாம் என்றும் டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது டில்லிநிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Rajendiran - CHENNAI,இந்தியா
13-பிப்-201112:00:56 IST Report Abuse
Ramesh Rajendiran கவர்னரிடம் சுப்ரமிய சுவாமியின் கொடுத்த மனு தள்ளிபடி செய்ய வாய்ப்பு இல்லை. அதன்படி கருணாநிதி தேர்தலுக்கு பின்பு அல்லது பின்பு கைடு செய்துவிட்டால் தி மு கவின் 18 பேர் காங்கிரஸின் பிடியில்.அதனால் பவர் தனியாக ஒன்றும் செய்ய முடியாது. கடைசியில் ஸ்பெக்ட்ரம் 2G க்கு ராஜாவினால் கொடுத்த லைசென்சை றது செய்வதை தவிர வேறு வழி இல்லை.அல்லது மத்திய அரசு கலக்க படும்.சோனியாவின் வெள்நாட்டு பணத்தை பற்றிய விவகாரத்தை பெரிதாக்க விடமாட்டார்கள்.
Rate this:
Cancel
Tamilnesan - Maskat ,ஓமன்
13-பிப்-201109:23:18 IST Report Abuse
Tamilnesan என்று நேரு குடும்பம் இந்தியாவை விட்டு விரட்டபடுகிறதோ, அன்று தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம்.
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
13-பிப்-201108:08:19 IST Report Abuse
Pannadai Pandian மொத்தத்தில் இவர்கள் தங்களுக்கே சரியாக ஆப்பு வைத்து கொள்வது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X