பொது செய்தி

இந்தியா

சல்வார் கமீஸ் அணிந்ததால் ரூ.5,000 பைன்

Updated : செப் 30, 2017 | Added : செப் 30, 2017 | கருத்துகள் (15)
Advertisement
கேரளா,
Kerala,  மருத்துவ கல்லுாரி, Medical College, சேலை,saree, சல்வார் கமீஸ்,Salwar Kameez, மவுன்ட் ஜியான் மருத்துவ கல்லூரி ,Mount Jian Medical College,  மாணவிகள், students

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில், உடை கட்டுப்பாடு விதிகளை மீறி, சல்வார் கமீஸ் அணிந்த, 19 மாணவியருக்கு தலா, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


சேலைக்கு பதில் சல்வார் கமீஸ்

கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம், அடூர் அருகே சாயலோடே என்ற இடத்தில் மவுன்ட் ஜியான் மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில், நான்காம் ஆண்டு மாணவியர், 19 பேர் செப்., 19ம் தேதி, கல்லூரி வளாகத்திற்கு வெளியே நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அனைவரும் உடை கட்டுப்பாடான சேலை அணியாமல், சல்வார் கமீஸ் அணிந்து சென்று இருந்தனர். இதனால், 19 பேருக்கும் தலா, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், வரும்காலங்களில் இதுபோன்ற தவறுகளில் ஈடுபட்டால், வகுப்பறையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மாணவியர் விளக்கம்

இது குறித்து மாணவியர் கூறுகையில், ' நிகழ்ச்சி நடந்த பகுதியில் கனமழை பெய்தது. எனவே, சல்வார் கமீஸ் உடை அணிந்து சென்றோம். சேலை அணிந்து சென்று இருந்தால் மிகவும் சிரமப்பட்டு இருப்போம். கல்லுாரி வளாகத்திற்கு வெளியே நடந்த நிகழ்ச்சி என்பதால், உடை கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவில்லை' என்றனர். சமூக வலை தளங்களில் இந்த விவரம் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு ஆளானதால், கல்லூரி நிர்வாகம் அந்த நோட்டீசை திரும்ப பெற்றது. மாணவியர் அபராதம் செலுத்தாமல் வகுப்பறைக்கு செல்லவும் அனுமதித்தது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
30-செப்-201722:14:19 IST Report Abuse
jagan கேரளா RC சர்ச்சுகளில் பெண்களில் புடவை அணிந்தவர்களுக்கு மட்டும் தான் அனுமதி..ரொம்ப பழசு
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
30-செப்-201719:36:08 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இதெல்லாம் கலாச்சார மூர்க்கம். கல்லூரி வளாகத்தின் வெளியில் நடக்கும் வைபவத்திற்கு கல்லூரி எப்படி அபராதம் விதிக்க முடியும். எப்படியெல்லாம் ஆட்டையை போட்டு சாப்பிடலாம் என்று ரூம் போட்டு யோசித்ததன் விளைவோ?
Rate this:
Share this comment
Cancel
Kumz - trichy,இந்தியா
30-செப்-201717:42:18 IST Report Abuse
Kumz எதிர்காலத்தில் பர்கா தான் கேரளத்தின் உடையாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X