ஆசை நடிகர்கள்...நடிகை தியா பளீச்| Dinamalar

ஆசை நடிகர்கள்...நடிகை தியா பளீச்

Added : அக் 01, 2017
ஆசை நடிகர்கள்...நடிகை தியா பளீச்

மலையாள கரையோரம் அசைந்தாடும் குருவி; அலைபாயும் கண்களால் கட்டிப் போடும் கருவி; மெல்லிய பார்வையால் மனசை கிள்ளி சின்னத்திரையிலும் வண்ணத்திரையிலும் முத்திரை பதிப்பவர், நடிகை தியா. தினமலர் வாசகர்களுக்காக அவர்...
* முதல் கேமரா அனுபவம்? பத்தாம் வகுப்பு படித்தபோது கேமரா முன் பேசி நடித்தேன். 'டிவி' தொகுப்பாளினியாக உள்ளேன். முன்னணி ஹீரோக்கள் படங்களில் துணை நடிகையாக நடிக்கிறேன்.
*ஆசை நடிகர்? அஜீத், விஜய், சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஆசை. வாய்ப்பு கிடைக்கும் வரை முயற்சிப்பேன்.
* மேக்அப் பிடிக்குமா? அதிக மேக்அப் உடம்புக்கு ஆகாது. எல்லோருக்கும் இயற்கையாக அழகு உள்ளது. கிரீம் பூச்சுகளை விட்டு, இயற்கை அழகை ரசிக்கும் பழக்கம் வேண்டும்.
* ரசிகர்கள் தொந்தரவு? ரசிகர்கள் நம் வீட்டு பிள்ளைகள். அவர்கள் தரும் உற்சாகம் தான் நாம் ஏற உதவும் ஏணி. ஐந்து விரலும் ஒன்று போல் இருக்காது. அதுபோல சில ரசிகர் தொந்தரவையும் ரசிக்க வேண்டும்.
* படப்பிடிப்பு இல்லாத நேரத்தில்... பிடித்த இடங்களுக்கு சுற்றுலா செல்வேன். போட்டோ எடுப்பேன். அதை நானே ரசிப்பேன். மனதுக்கு இனிமையாக, இதமாக இருக்கும்.
* கவிதை ஆர்வம்? கவிதை எழுதுவேன். இசை விரும்பி கேட்பேன். இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இசை ரொம்ப பிடிக்கும்.
* நடனத்தில் எப்படி? முறைப்படி நடனம் கற்றுள்ளேன். பிரபுதேவாவின் நடனம் ரொம்ப பிடிக்கும். அவரை அடிக்கடி தொடர்பு கொண்டு 'வாழ்த்து தொல்லை' கொடுப்பேன்.
*வாழ்த்த விரும்பும் நடிகர்? சிவகார்த்திேகயன். எந்தவிஷயமாக இருந்தாலும் கேஷூவலாக நடிப்பார்.இவரை ttps://twitter.com//vjdiya ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X