வாழையிலும் கை வைத்த ஊழியர்கள் வாழ வைக்க "சபா'வை கவனித்த கட்சியினர்

Added : அக் 04, 2017
Advertisement
""ஆயுதபூஜைக்கு ஒரு நாள் முன்னாடி, கலெக்டர் ஆபீஸில, நைட் என்ன நடந்துச்சுனே தெரியலை,'' என்றவாறே, கடலை பொரியை சாப்பிட்டவாறு, மித்ரா வீட்டுக்கு வந்தாள் சித்ரா.""பெரிய பிரச்னை எதுவும் நடந்துச்சா,'' என்று இழுத்த, மித்ரா தன் பங்குக்கு தட்டில் சுண்டல் வைத்து கொடுத்தாள்.""நூறு நாள் திட்டத்துல, இனி எல்லா விவரத்தையும் மத்திய அரசு "சைட்'ல பதிவு செய்யணும்னு
வாழையிலும் கை வைத்த ஊழியர்கள் வாழ வைக்க "சபா'வை கவனித்த கட்சியினர்

""ஆயுதபூஜைக்கு ஒரு நாள் முன்னாடி, கலெக்டர் ஆபீஸில, நைட் என்ன நடந்துச்சுனே தெரியலை,'' என்றவாறே, கடலை பொரியை சாப்பிட்டவாறு, மித்ரா வீட்டுக்கு வந்தாள் சித்ரா.
""பெரிய பிரச்னை எதுவும் நடந்துச்சா,'' என்று இழுத்த, மித்ரா தன் பங்குக்கு தட்டில் சுண்டல் வைத்து கொடுத்தாள்.
""நூறு நாள் திட்டத்துல, இனி எல்லா விவரத்தையும் மத்திய அரசு "சைட்'ல பதிவு செய்யணும்னு சொல்லிட்டாங்க.
சீக்கிரமா வேலை முடியணும்னு, மூணு "ஷிப்ட்' போட்டு, இரவு, பகலா "அப்டேட்' பண்ணிட்டு இருந்திருக்காங்க,'' என்று சித்ரா கூறினாள்.
""ஓ..அதுதான் சங்கதியா,'' என்றாள் மித்ரா.
""ஆமா. ஆயதபூஜைக்காக, நாலு நாள் லீவுங்கறதால, அரசு ஊழியருங்க, சொந்த ஊருக்கு சீக்கிரம் கௌம்பணும்கிற ஐடியாவில வந்திருக்காங்க. ஆனா, சீக்கிரமா வேலைய முடிச்சாகணும்னு, கண்டிஷன் போட்டிருக்காங்க. ஆத்திரமடைந்த ஊழியர்கள், இரவு, 8:00 மணிக்கு, கலெக்டர் ஆபீஸ் போர்டிகோவில், ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க. ஆனா, எந்த ரியாக்ஷனும் இல்லாததால, ஊருக்கு கிளம்பிட்டாங்க.
இப்படியே இருந்தா, உள்ளடி வேலைய வெளியே சொல்ல வேண்டியிருக்கும்னு, எச்சரிக்கை விட்டிருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.
""வாழைக்கன்னு வித்தவங்களையும் கூட, மாநகராட்சிக்காரங்க விட்டு வைக்கல,'' என்று, அடுத்த விஷயத்துக்குள் நுழைந்தாள் மித்ரா.
""அட, அப்படியென்ன செஞ்சாங்க,'' என்று சித்ரா கேட்டாள்.
""ஆயுதபூஜைக்கு, விவசாயிங்க, வாழைக்கன்னு விற்க திருப்பூருக்கு வந்திருந்தாங்க. ரோட்டோரமா வச்சு,வியாபாரம் செஞ்சிட்டிருந்தவங்களை, மாநகராட்சி மேஸ்திரிங்க,""இப்டி ரோட்ல உட்காரக்கூடாது; விக்கலைன்னா அப்படியே போட்டுட்டு போயிடுவீங்க; நாங்க சுத்தம் பண்ண முடியாது. இடத்த காலி பண்ணுங்க,'ன்னு மிரட்டியிருக்காங்க,'' என்று மித்ரா கூற,
""ஓஹோ,'' என்று வாய் பிளந்தாள் சித்ரா.
""சுத்தம் பண்ணறதுக்கு, காசு கொடுத்துடறோம்னு சொல்லியிருக்காங்க. அதனால, தலைக்கு, 200 ரூபாய் மேஸ்திரிங்க வாங்கீட்டு போய், திரும்ப வரவே
இல்லையாம்,'' என்றாள் மித்ரா.
""அதே மாதிரி கொசு ஒழிப்பு பணியாளர்களும் புலம்பறாங்க தெரியுமா,'' என்று சித்ரா கூற, ""அதென்ன சங்கதி,'' என்று ஆர்வமாக கேட்டாள் மித்ரா.
""கொசு ஒழிப்பு வேலைக்கு, தினக்கூலி அடிப்படையில பெண்களை வேலைக்கு எடுத்திருக்காங்க; 280 ரூபா தினக்கூலி கொடுக்கணும்; ஆனா, 220 ரூபாய் மட்டும் தர்றாங்களாம். மாநகராட்சியில இப்ப, 500 பேர் வேலை செய்யறாங்க, ஒரு பணியாளர் கிட்ட இவ்வளவு பணம் பிடிச்சாங்கனா, மொத்தமாக எவ்வளவு மாயமா போகுது?, '' என்று சித்ரா கேள்வி எழுப்பினாள்.
""முறைகேடுக்கு துணை போகாத பெண் அலுவலருக்கு, ஒன்பது மாசம் சம்பளம் தராமல் இழுத்தடிச்ச விஷயம் பேசினோமே, நினைவு இருக்கா,'' என்று அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
""ஆமா, அதுக்கென்ன இப்போ,'' என்று ஆர்வத்தோடு சித்ரா கேட்டாள்.
""இந்த விஷயம் கலெக்டர் காதுக்கு போயிடுச்சு. இது தெரிஞ்சு, ஒரே நாள்ல, அந்த ஆபீசருக்கு தர வேண்டிய ஆவணங்களை தயார் செஞ்சு, மாவட்ட அதிகாரியிடம் போய், "லடாய்' ஆபீசர், சரண்டர் ஆனாராம்,'' என்றாள் மித்ரா.
""ஊரக வளர்ச்சித்துறையோட வாகனத்தை, சம்பந்தமில்லாத அலுவலர்கள் தான் பயன்படுத்தறாங்களாம். அதுல போக வேண்டிய ஆபீசர்கள், பஸ்சுலயும், டூவீலர்ல போய் களப்பணி பார்க்க வேண்டியிருக்காம்.
உயர் அதிகாரிங்க கேட்டாக்கூட வாகனம் வர மாட்டேங்குதாம். ஆனால், டீசல், பராமரிப்பு எல்லாம், அந்த துறையில் இருந்து தான் போகுதாம். தலையில் அடிக்காத கொறையா, ஆபீசருங்க அவதிப்படறாங்க,'' என்று, சித்ரா ஊரக வளர்ச்சித்துறை மேட்டரை சொன்னாள்.
""யூனியன் ஆபீசு பற்றி இன்னொரு மேட்டர் தெரியுமா? ஜி.எஸ்.டி., அமல்படுத்துன , ஜூலை ஒன்னாம் தேதிக்கு முந்தின நாள், சில பி.டி.ஓ.,க்கள் மோட்டார், லைட்னு பர்ச்சேஸ் பில்லை போட்டு தீட்டி எடுத்துட்டாங்களாம். "டம்மி' நிறுவனங்கள் பேர்ல, அப்புறமா பில் போட முடியாதுங்கறதாலே இதைச் செஞ்சுட்டாங்க,''
என்றாள் மித்ரா.
""சரி, இதுல வேற என்ன பிரச்னை,'' என்றாள் சித்ரா.
""உணர்ச்சிவசப்பட்டு வளர்ச்சிப்பிரிவு பார்க்கற பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி பிரிவு வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிட்டாங்களாம். அது இனி, ஆடிட்டிங்ல தான் வெளிய வரும். அப்ப இருக்குது "ரிவிட்டு,'' என்று, மித்ரா சிரித்தபடி கூறினாள்.
""அப்பத்தான், அதிகாரிங்க, திருந்துவாங்க,'' என்று கூறிய சித்ரா, ""திருப்பூர் வடக்கு ஸ்டேஷனுக்கு சமூக ஆர்வலருன்னு சொல்லீட்டு, ஸ்கூட்டரில் வரும் ஒரு நபரின் ஆட்டம் அதிகமாயிடுச்சாம்.
இவர் ஸ்டேஷனையே சுத்திசுத்தி வர்றாராம். ஒரு போலீஸை கைக்குள்ள போட்டுட்டு, அதிகாரம் பலமா பண்ணறாராம்.
அவர் சொல்ற வேலையை போலீஸ்காரங்க செய்ய மறுத்துட்டா, தன்னோட "ஸ்பை' போலீஸ் மூலம், சம்பந்தப்பட்ட போலீசாரின் விவரத்தை வாங்கி, கமிஷனர் அலுவலகத்தில் பொய்யாக மனு கொக்கிறாராம். இந்த மாதிரி ஆட்களை எதுக்கு, ஸ்டேஷனுக்குள்ள விடறாங்களாம்,'' என்ற போலீஸ் தகவலை ஆரம்பித் தாள். அப்போது, மித்ரா வீட்டுக்கு வந்தவரிடம், பிராஸஸர் சர்வர் வீதியிலுள்ள சேகர் பையிங் ஆபீசுக்கு செல்ல வழி கேட்டாள்.
""எங்கிட்டயும், ஒரு போலீஸ் தகவல் இருக்கு. அவிநாசியில் டிராபிக் போலீஸ் ஒருவர் ரொம்ப புத்திசாலியாம். "வெகிக்கிள் செக்கப்'பில் டி.டி., மற்றும்
வித் அவுட் லைசென்ஸில் வரக்கூடிய வாகன ஓட்டிகளை பிடித்து, தனது டூவீலரை கொடுத்து, பக்கத்துல இருக்கிற பெட்ரோல் பங்குக்கு சென்று, டேங்கை நிரப்ப சொல்றாராம். இதையெல்லாம், எங்க போய்ச்சொல்லி முட்டிக்கிற துன்னே தெரியல,'' என்று தலையில் அடித்து கொண்டாள் மித்ரா.
""அந்த ஆண்டவன்தான் பார்த்துக்கணும். பல்லடம் போலீஸ் லிமிட்டில, கஞ்சா, மூணு நம்பர் லாட்டரி, "சரக்கு' விற்பனைன்னு அமோகமா நடக்குதாம். ஸ்டேஷன் அதிகாரிங்க பலரும், வைட்டமின் "ப' வில் ரொம்ப நல்லா குளிர் காயராங்களாம். ருசி கண்ட பூனையாக, புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கிறதை விட, அதுல ஏதாவது கெடைக்கு மான்னு, ஆராய்ச்சியே பண்றாங்களாம். ஸ்டேஷனை பற்றி ரிப்போர்ட் கொடுக்க வேண்டிய எஸ்.பி., ஏட்டையும், நல்லாவே கவனிச்சுக்கறாங்களாம். யாருக்கும் எந்த பிரச்னையும் வரக்கூடாதுனு, எழுதப்படாத ஒப்பந்தமே போட்டிருக் காங்களாம்,'' என்றாள் சித்ரா.
""ரூரல் ஸ்டேஷன்களில், இவ்ளோ பிரச்னை நடந்தும், ஏன், எஸ்.பி., கண்டுக்கவே மாட்டேங்கறாங்கன்னு, நேர்மையான சில போலீஸ் புலம்பி தள்றாங்களாம்,'' என்று மித்ரா ஆதங்கப்பட்டாள்.
""அட எல்லாத்துறையுமே இப்படித்தான் இருக்கு. பொங்கலூர் வட்டாரத்தில், கோழிப்பண்ணை கணிசமா இருக்குது. அங்கு வேலை பார்க்கறவங்களுக்கு "டாய்லெட்' குடிநீர் வசதி இருக்குதான், பார்த்து, சர்டிபிகேட் கொடுக்க, சுகாதாரத்துறை ஆபீசருங்க, பண்ணைக்காரங்கள மிரட்டி பணம் வாங்குறாங்களாம், தீபாவளி நெருங்குவதால், சுகாதாரத்துறையினரை கண்டு, பண்ணையாளர்கள் செம "காய்ச்சலாம்,'' என்றாள் சித்ரா.
""பக்கத்துல பல்லடத்தில் நடக்குறத கேளு, '' என்று மித்ரா புதிர் போட்டதும், ""சொல்லு, கேட்கலாம்,'' என்றாள் சித்ரா.
""அருள்புரத்துல, "தண்ணீல சாயக்கழிவு கலந்து வந்ததா விவசாயிங்க கலெக்டர்கிட்ட புகார் கொடுத்தாங்க. ஏற்கனவே, கொடுத்ததுக்கே நடவடிக்கை இல்லை. வருஷம் தவறாம பொல்யூசன் போர்டு அதிகாரிங்க, "வாட்டர் சேம்பிள்' எடுத்துட்டு போறாங்க. ஆனா திரும்ப வர்றதே இல்லன்னு விவசாயிங்க குமுறாங்க,'' என்று கூறிய மித்ரா, தண்ணீரை குடித்து விட்டு, ""என்னன்னு, விசாரிச்சப்ப, சாய ஆலை ஓனரு ஒருத்தரு, ரியல் எஸ்டேட்காரர் ஒருத்தரோட சேர்ந்துட்டு, குழாய் வழியா, சாயக்கழிவு தண்ணிய வெளியேத்திட்டு வர்றாங்களாம், '' என்று விளக்கினாள் மித்ரா.
""இது அதிகாரிங்களுக்கு தெரியுமா,'' என்று சித்ரா கேட்டதற்கு, ""இதுவரைக்கும் நாலு தடவ கம்பெனிய மூடியும், மேலிடத்து பிரஷரால மறுபடியும் திறந்து அட்டகாசம் பண்றாங்களாம்,'' என்று மித்ரா பதில் கூறினாள். அப்போது, சித்ராவின் மொபைல் போன், ஒலித்தது.
"எதிரும் புதிருமா இருந்த ஏற்றுமதியாளருங்க, இப்போ ஒண்ணுகூடிட்டாங்கபா' என்று, டீ கொடுத்தவாறே, "டீ' சங்க மேட்டரை ஆரம்பித்தாள் சித்ரா.
""சங்க தேர்தலில், பழைய, புதிய தலைமைக்கும் பனிப்போர் இருந்துச்சு. சமூகவலைதளங் களிலெல்லாம் கூட, நாசூக்கா, எதிர்ப்பை பதிவு செஞ்சாங்க. போன வாரம் ஏ.இ.பி.சி.,க்கு தேர்தல் நடந்துச்சு; மூன்று பதவிக்கான இந்த தேர்தல்ல, முக்கிய புள்ளிங்க களமிறங்கி ஜெயிச்சுட்டாங்க. அதோடில் லாம, மும்மூர்த்தியும், "செல்பி' எடுத்து பேஸ்புக்ல தட்டி விட்டாங்க தெரியுமா,'' என்று ஆச்சரியமாக சொன்னாள் சித்ரா.
""அப்புறமென்ன, இனி பனியன் நகர் இன்னும் முன்னேறத்தான் போகுது.
இதே ஒற்றுமை நீடிக்கணு முன்னு, எல்லோரும் சொல்றாங்க. இதை கெடுக்கற துக்கு, சிலர், வேற்றுமையை புகுத்தி, குளிர் காயவிடக் கூடாது,'' என்றாள் மித்ரா.
""சத்துணவு பணியாளர் அப்பாயின்மென்ட்டில், நிறைய "லகரம்' கைமாறி யிருக்காம். குறிப்பா, லிங்கேஸ்வரர் ஊருல, வடக்கு, தெற்குன்னு பிரிச்சு, தலைக்கு மூணு "ல' வாங்குனாங்களாம், அதில, முக்கால்வாசி, "சபா'வுக்கு, போயிடுச்சாம்,'' என்று சத்தான மேட்டரை போட்டுடைத்தாள் சித்ரா.
""அதே விஷயத்துல, இதையும் கேளு. மூன்று கி.மீ.,க்குள்ள இருந்ததான், போஸ்டிங் போடணும்னு உத்தரவு இருக்கு. ஆனா, குருவாயூரப்பன் நகர், மொய்யாண்டம்பாளையம், வாஷிங்டன் நகர், பொடராம் பாளையம், காவிலிபாளையம், எஸ்.எஸ்., நகர் பகுதியில் உள்ள பலர் விண்ணப்பித்தும், பத்து முதல், 15 கி.மீ., தூரத்தில் இருக்கறவங்களுக்கு போஸ்டிங் போட்டாங்களாம். இது சம்பந்தமாக, பணம் கெடைக்காத ஒரு குரூப், சி.எம்., செல் வரைக் கும் புகாரை தட்டி விட்டாங் களாம்,'' என்றாள் மித்ரா.
""ஓ.கே., மித்து, ரொம்ப நேரம் ஆயிடுச்சு. நான் கௌம்பறேன்,'' என்று மொபட்டை கிளப்பினாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X