பதிவு செய்த நாள் :
கேரள அரசை கண்டித்து பேரணி :
உ.பி., முதல்வர் யோகி பங்கேற்பு

கீசேரி: கேரளாவில்,பா.ஜ.,மற்றும், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் மீதான வன்முறைகளை கண்டித்து நடத்தப்பட்ட பேரணியில், உத்தர பிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது.

'கேரளாவில், பா.ஜ., மற்றும், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, 15 நாட்களுக்கு பேரணி நடத்தப்படும். இதில், பா.ஜ., மூத்த தலைவர்கள் பங்கேற்பர்' என, கட்சியின் தேசியத் தலைவர், அமித் ஷா அறிவித்தார். இந்நிலையில், கன்னுார் மாவட்டம் கீசேரியில் நடந்த யாத்திரையில், உ. பி., முதல்வரும்,

பா.ஜ., மூத்த தலைவருமான,யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்;

அப்போது அவர் கூறியதாவது:


ஜனநாயகத்தில், அரசியல் வன்முறைகளுக்கு இடம் இல்லை. ஆனால், கேரளாவில் அரசியல் வன்முறைகள் அதிக அளவில் நடக்கின்றன. அதை தடுத்து நிறுத்தாமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு வேடிக்கை பார்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., தலைவர்களுக்கு கம்யூ., அரசு அழைப்பு : கேரளாவில் நடக்கும்அரசியல் வன்முறையை எதிர்த்து, நடந்த பேரணியில், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.அவரை கிண்டல் செய்யும் வகையில், மா. கம்யூ.,கட்சி,

Advertisement

கேரள ,அரசை,கண்டித்து,பேரணி,உ.பி., முதல்வர்,யோகி,பங்கேற்பு

சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டு உள்ளது.'பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மூத்த தலைவர்கள் அனைவரும் கேரளாவுக்கு வாருங்கள்; இங்குள்ள மருத்துவ மனைகள் எப்படி செயல் படுகின்றன என்பதை பாருங்கள்' என, அதில் கூறப்பட்டுள்ளது.

உ.பி.,யின், கோரக்பூர் அரசு மருத்துவமனை யில், 70 குழந்தைகள் சமீபத்தில் இறந்ததை
குறிப்பிடும் வகையில், இந்த செய்தியை, மார்க்சிஸ்ட் வெளியிட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
05-அக்-201722:00:46 IST Report Abuse

mindum vasanthamஒத்தை கொள்கை கொண்ட கம்யூனிஸ்டும் காங்கிரஸும் கேரளாவில் ஆண்டது போதும் , வேண்டும் பாஜக அங்கே

Rate this:
mohankumar - Trichy,இந்தியா
05-அக்-201720:11:27 IST Report Abuse

mohankumarகேரளா கம்யூனிஸ்ட் பற்றி இங்குள்ளவர்களுக்கு என்ன தெரியும் . அங்கு படித்தவர்கள் அதிகம் தான் ஆனால் என்ன பிரயோசனம் . கேரளா உருப்படாமல் போனதற்கு காரணம் அங்கு மாறி மாறி ஆண்ட கம்யூனிஸ்ட் காங்கிரஸ் தான் . மதவாதத்திற்கு எதிராக பேசும் இருவரையும் மாறி மாறி மதவாத கட்சிகளான லீக் அல்லது கிறிஸ்தவ முன்னணிகளின் கூட்டணி இல்லாம இங்கு யாரும் ஆட்சி செய்ய முடியாது . கம்யூனிஸ்ட்கள் ஆளும் போது அங்கு எந்த தொழில் சாலை தொடங்க முடியாது . அடுத்த பத்து நாட்களில் கம்பெனியை இழுத்து மூடி அடுத்த மாநிலத்திற்கு ஓடி விடுவார்கள் . காரணம் அடுத்த நாளே strike . யார் அங்கு வந்து தொழில் தொடங்குவார்கள் . காங்கிரஸும் ஆளும் போது இந்த கம்யூனிஸ்ட்களை பயந்து கொண்டு எந்த கம்பெனி அல்லது தொழில் சாலை துவங்க முயற்சிக்க மாட்டார்கள் . அதனால் தான் அங்குள்ள பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள் . உங்கள் உடமைகளை நீங்கள் லோரிகளில் இருந்து வீடு மாற்றல் அல்லது transfer என அந்த மாநிலத்திற்கு செல்லும் போது உங்கள் சொந்த உடமைகளை நீங்கள் புறப்பட்ட இடத்தில் வெறும் 500 க்கு லாரியில் ஏற்றி இருப்பீர்கள் . ஆனால் அங்கே சென்றவுடன் 10000 கொடுக்க சொல்லி கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களை கட்டாயப்படுத்துவார்கள் . சரி நீங்களே இறக்கி கொள்கிறேன் என்று சொன்னால் பணத்தை கொடுத்து விட்டு நீங்கள் எப்படிவேண்டுமானாலும் இறக்கி கொள்ளுங்கள் என்று அடாவடியாக பணத்தை வாங்கி செல்வர் . அப்படி எல்லாம் அங்கு நடக்கும் இங்கே கருத்து சொல்லும் பலருக்கும் இந்த மாநிலத்தை தவிர வேறு மாநிலத்தில் நடப்பவைகளை தெரிவதில்லை பத்திரிகைகள் ஊடகங்கள் இவற்றை எல்லாம் காட்டுவதில்லை). யோகியை குறை சொல்ல யாருக்கும் யோக்கியதை இல்லை இந்த மாநிலத்தில் இருந்து தான் பெண்களை மதம் மாற்றி லவ் ஜிகாத் செய்து பலபெண்களை கடத்தி கொண்டு ISIS இல் SERTHTHU அங்கே அவர்கள் அடிமை பட்டு பல ஆண்களுக்கு ஒரு பெண் என்று வாழ்வு சிதைந்து போய் பின்னர் அவர்களின் பிணம் கூட கிடைப்பதில்லை . இதை எல்லாம் 6 மாதம் முன்னர் பதவிக்கு வந்த யோகியை ஒப்பிட முடியுமா ? கேரளா மக்களை கேளுங்கள் தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் கிடைப்பது போல அங்கே கிடைக்கிறதா இங்குள்ள கம்யூனிஸ்ட்கள் இங்குள்ள அரசை குறை கூறுகிறது. 6 . மாதத்திற்கு ஒரு முறை பஸ் கட்டண உயர்வு ,இங்குள்ள பஸ் கட்டணம் கேரளாவை விட குறைவு இதற்கும் இங்குள்ள கம்யூனிஸ்ட் தோழர்கள் இங்கே உள்ள அரசை குறை கூறுகிறார்கள் . நீங்கள் ஆளும் மாநிலத்தின் கதி என்னவென்றே மக்களுக்கு தெரியாது .

Rate this:
05-அக்-201718:54:52 IST Report Abuse

ரபேல் ஊழல் நாயகன் மோடி:இனிமேல் மோடியின் நிலை அத்வானி, முரளிமனோஹர் ஜோஷி நிலைதானா?

Rate this:
மேலும் 84 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X