பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் சம்பள உயர்வு?

Added : அக் 05, 2017 | கருத்துகள் (47)
Share
Advertisement
அரசு ஊழியர், Government Employees, சம்பளம்,  Salary,தமிழக அரசு, , Tamil Nadu Government, தீபாவளி,Deepavali,  முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy,ஏழாவது ஊதியக்குழு ,Seventh Pay Commission, சட்டசபை ,Assembly,  ஜெயலலிதா, Jayalalithaa,

தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு, தீபாவளிக்கு முன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, சட்டசபை தேர்தலின்போது, 'மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டதும், தமிழக அரசு பணியாளர்களுக்கும், ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க, நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, ஜெயலலிதா அறிவித்தார்.

அவரதுஅறிவிப்பை செயல்முறைப்படுத்த, தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, பிப்., 22ல், ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க, அலுவலர் குழு அமைத்து, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

அலுவலக குழு அறிக்கை அடிப்படையில், அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 20 சதவீதம் சம்பள உயர்வு வழங்க, அரசு முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அரசாணை, அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi s - erode,இந்தியா
05-அக்-201723:26:56 IST Report Abuse
ravi s 58 வயது வரை சுய தொழில் செய்து நேர்மையாக வரி கட்டும். தொழில் முனைவோர் .58 வயதிற்கு பிறகு தொழிலை தொடர முடியவில்லை எனில் அவர்களுக்கு அரசாங்கம் பென்சன் கொடுக்கிறதா?. அரசு ஊழியர்கழுக்குமட்டும் ஏன் பென்சன்.
Rate this:
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-அக்-201717:28:25 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி அரசு ஊழியர்கள் அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகள் போலும். இவர்கள் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் சம்பளம் + கிம்பளம் + அகவிலைப்படி + உள்விலைப்படி + போனஸ் அனைத்தும் கிடைக்கும். அன்னாடம் காய்ச்சிகளை ஆதரிப்போர் யாரும் இல்லை...
Rate this:
Cancel
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
05-அக்-201715:59:58 IST Report Abuse
madhavaraman தனது பணிக்காக அரசு அலுவலகம் சென்றவர்கள் யாரோ ஒரு அரசு ஊழியரால் பாதிக்கப்பட்ட சிலர் ஒட்டுமொத்த அரசு ஊழியரையும் சாடுகிறார்கள் என்பதே உண்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X