பெண் பயங்கரவாதி சுட்டு கொலை| Dinamalar

பெண் பயங்கரவாதி சுட்டு கொலை

Updated : அக் 06, 2017 | Added : அக் 06, 2017 | கருத்துகள் (6)
பெண் பயங்கரவாதி சுட்டு கொலை

குர்தாஸ்பூர்: பஞ்சாபில், பாக்., எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதியில், சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், ஒரு பெண், எல்லையை தாண்டி, இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிப்பதை, எல்லை பாதுகாப்பு படையினர், நேற்று பார்த்தனர்.சரணடையும்படி, அந்த பெண்ணிடம் பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர். அந்த பெண், அதை அலட்சியம் செய்து, இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சித்தாள். இதையடுத்து, அவளை, எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவள், பாகிஸ்தானைச் சேர்ந்தவள் என்பது தெரிந்தது. அவளின் உடலை வாங்க, பாக்., ராணுவத்தினர் மறுத்து விட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X