ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாஜி அமைச்சர் அருண் ஷோரிக்கு சம்மன்

Updated : பிப் 14, 2011 | Added : பிப் 13, 2011 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் அருண் ஷோரிக்கு, சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து, வரும் 21ம் தேதி சி.பி.ஐ., முன் ஆஜராகி, அவர் விளக்கம் அளிக்கவுள்ளார். ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஸ்பெக்ட்ரம்
Arun Shourie to appear before CBI in telecom policy probe, கிண்டி கிளறுகிறது சி.பி.ஐ., மாஜி அமைச்சர்களுக்கு செக்

புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் அருண் ஷோரிக்கு, சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து, வரும் 21ம் தேதி சி.பி.ஐ., முன் ஆஜராகி, அவர் விளக்கம் அளிக்கவுள்ளார். ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து ஆய்வு செய்ய, சிவராஜ் பாட்டீல் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, தனது அறிக்கையை சமீபத்தில் மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. அதில், "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏல முறையை பின்பற்றாமல், முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கை, ஐ.மு., கூட்டணி அரசு பதவிக் காலத்துக்கு முன்பிருந்தே பின்பற்றப்பட்டு வந்துள்ளது' என தெரிவிக்கப்பட்டது.

தே.ஜ., கூட்டணி ஆட்சிக் காலத்தில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தவரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அருண் ஷோரி, இந்த அறிக்கையை கடுமையாக விமர்சித்தார். "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எதிர்க்கட்சிகள் மீது பழி போடுவதற்காக இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது' என்றார்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து அருண் ஷோரியிடம் விசாரிக்க, சி.பி.ஐ., முடிவு செய்தது. விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி அருண் ஷோரிக்கு, சி.பி.ஐ., சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து அருண் ஷோரி கூறுகையில், "விசாரணைக்காக ஆஜராகும்படி சி.பி.ஐ., சார்பில் எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் கோல்கட்டாவில் சுற்றுப் பயணம் முடித்து விட்டு திரும்புவதற்கு ஒரு வாரமாகும். எனவே, வரும் 21ம் தேதி விசாரணைக்காக சி.பி.ஐ., முன் ஆஜராவேன். அப்போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான சில ஆவணங்களை சி.பி.ஐ.,யிடம் தாக்கல் செய்வேன்' என்றார்.

சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறுகையில், "முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் 50 உரிமங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பார்தி, வோடபோன் மற்றும் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் பயன் அடைந்துள்ளன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் நடத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது' என்றன.

இதற்கிடையே, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் ஏற்கனவே அளித்த அறிக்கையில், "தொலைத்தொடர்புத் துறையில் ஈடுபட்டுள்ள ஸ்வான் நிறுவனம், தொழிலதிபர் அனில் அம்பானியின் குழுமத்தைச் சேர்ந்தது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், சி.பி.ஐ.,க்கு இதுகுறித்து கடிதம் ஒன்றை, ஸ்வான் நிறுவனத்தின் புரமோட்டர் ஷாகித் பல்வா எழுதினார்.

அதில், "ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்துடன், எங்கள் நிறுவனத்துக்கு வர்த்தக ரீதியான தொடர்பு உள்ளது. ஆனால், எங்கள் நிறுவனம் தனியாக இயங்கி வருகிறது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஸ்வான் நிறுவனத்துக்கும், அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V. Mani - chennai ,இந்தியா
13-பிப்-201122:51:46 IST Report Abuse
V. Mani அடமானமே இல்லாமல் புதுசா வந்த கலைஞர் டிவி க்கு 214 கோடி கடன் கொடுத்தானாம்.டீல் சரியில்லாததால் 31 கோடி வட்டியோடு திருப்பிக் கொடுத்தார்களாம்!ஆமாம் இவ்வளவு சானல் துவங்கி இத்தனை குறுகிய காலத்தில் 245 (214 +வட்டி 31)கோடி எங்கே லாபம் கிடைத்து கடனை அடைத்தார்கள்? உலகும் முழுவதும் ரசிக்கப்படும் இந்தி சானல்களே பல ஆண்டுகளுக்குப் பிறகும் இவ்வளவு லாபம் பார்த்ததே இல்லை!முதல் போதாமல் கடன் வாங்கியவர்கள் சில மாதங்களிலேயே வட்டியும் முதலுமாக லாபம் பார்த்து கடனை அடைத்தது உலக சாதனைதான்!விஞ்ஞான ஊழல் தவிர வேறென்ன? கேட்டால் நான் சாமானியன்.உயர் சாதியினர் என்னை போய்ப் பழி கூறுகிறார்கள் என கதை வேறு! உருப்படமாட்டீங்க. தமிழ்நாட்டையும், ஏன் இந்தியாவையும் கூறு போட்டு வித்துடுவீங்க!படிப்பறிவு உள்ள மாநிலத்திலேயே இப்படி விளையடுறீங்கன்னா..எனக்குத் தோனுற விஷயம் என்னன்னா......'வாங்கறத' வாங்கிட்டாங்க. திடீர்னு ஸ்பெக்ட்ரம் கேசுல மாட்டிக்க வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்ச உடனே அதை வட்டியோட திருப்பிக்கொடுத்துட்டதா கணக்கு எழுதிட்டாங்க. கேக்கறவன் கேனையனா இருந்தா கேப்பையில நெய் வடியுதுன்னு சொல்லுறவங்க தான்!நீங்கசொல்றது சரி.தலீவரே .தன் மொத்த சொத்தே அஞ்சு கோடிதான் னு சொல்றாரு. பையன்களோ வேலைக்குப் போனதோ, டாக்டரோ,எஞ்சினியரோ ,ஆடிட்டரோ இல்லை! ஆனால் ஒரு வேலைக்கும் போகாமலேயே சம்பாதிச்சு, 214கோடி கடனை 31கோடி வட்டியோட உடனே திருப்பிக் கொடுத்துட்டானுன்களாம் !ஒரு வேலை அந்த நாசில ரூபா நோட்டு அடிக்கறாங்களே அந்த ப்ரெஸ்ஸயும் ஸ்டார் வழியா குத்தகைக்கு எடுத்திருக்கிராங்களோ?
Rate this:
Cancel
appu - madurai,இந்தியா
13-பிப்-201119:58:54 IST Report Abuse
appu ஙொயால அப்டி போட்டு தாக்கு 2003 ல இருன்தே இன்த ராவடி நடக்குதா??சி பி ஐ போட்டு தாகி ஒரு பயல் மிஞ்ச கூடாது.எவன் எவன் இதுல லஞ்சமா வாஙுனானோ அன்த பயபுல்லைகல் எல்லரும் கலி திஙனும்.நாட்ட கூரு போட்ட எல்லரயும் அமுக்கு.சபாஷ்டா சி பி ஐ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X