அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருப்பதி தரிசனமும் சிவாஜி சிலை வதந்தியும்

Added : அக் 08, 2017 | கருத்துகள் (32)
Advertisement
திருப்பதி ,Tirupati, சிவாஜி சிலை ,Shivaji Statue, நடிகர் சிவாஜி, Actor Shivaji, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy,துணை முதல்வர் பன்னீர்செல்வம்,Deputy Chief Minister Panneerselvam, சிவாஜி சென்டிமென்ட், Shivaji Sentiment, தமிழக அரசு , Government of Tamil Nadu, அமைச்சர் ஜெயகுமார் ,Minister Jayakumar, கருணாநிதி , Karunanidhi,

நடிகர் சிவாஜியின் மணிமண்டபம் திறந்த கையோடு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், பன்னீர்செல்வம், அடுத்தடுத்து திருப்பதி சென்றதற்கும், 'சிவாஜி சென்டிமென்ட்'க்கும் முடிச்சு போடப்படுகிறது.மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு, தமிழக அரசு சார்பில், 2.8 கோடி ரூபாய் செலவில், சென்னையில், மணிமண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. சிவாஜி பிறந்த நாளன்று, அது திறக்கப்பட்டது. கடற்கரை சாலையில் இருந்த, சிவாஜி சிலை அகற்றப்பட்டு, இந்த மணிமண்டபத்தின் உள்ளே நிறுவப்பட்டுள்ளது.


மணி மண்டபம்ஆட்டிப்படைக்கும் சிவாஜி சென்டிமென்ட்

இந்த மணிமண்டபத்தை, முதலில், 'அமைச்சர், ஜெயகுமார் தலைமையில், அமைச்சர், ராஜு திறந்து வைப்பார்' என, அரசு அறிவித்தது. ஆனால், 'முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், பன்னீர்செல்வம் ஆகிய இருவரில், ஒருவராவது திறந்து வைக்க வேண்டும்' என, சிவாஜி ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்று, துணை முதல்வர், திறந்து வைக்க சம்மதம் தெரிவித்தார். மணிமண்டபம் திறந்த கையோடு, அவர், தன் குடும்பத்தினருடன், திருப்பதிக்கு சென்று, தன் பேரனுக்கு மொட்டை அடித்து, சுவாமி கும்பிட்டு வந்தார்.அதற்கு அடுத்த நாள், முதல்வர் பழனிசாமியும், தன் மனைவியுடன் திருப்பதி சென்று சாமி கும்பிட்டார். முதல்வர், துணை முதல்வரின் திருப்பதி பயணம், ஏற்கனவே திட்டமிட்ட பயணமாக அமைந்தாலும், அவர்களின் எதிர்கோஷ்டியினர், பரிகார பூஜைக்காக தான் சென்றனர் என, கிளப்பி விட்டுள்ளனர்.

சிவாஜி மணிமண்டபத்தை திறந்த, பன்னீர்செல்வமும், ஆட்சியை வழி நடத்தி செல்லும் பழனிசாமியும், சிவாஜி சென்டிமென்ட்டுக்கு பரிகாரம் செய்ய தான், திருப்பதி சென்றனர் என கூறியுள்ளனர். இதனால், ஆளுங்கட்சியினர் மீது, சிவாஜி ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


'சென்டிமென்ட்'இது குறித்து, ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:சிவாஜி சிலையை, அப்போதைய முதல்வரும், தி.மு.க., தலைவருமான, கருணாநிதி திறந்து வைத்த பின், அவரது ஆட்சி மீண்டும் அமையவில்லை. சிவாஜி வீட்டுக்கு, முதல்வராக ஜெயலலிதா சம்பந்தம் பேசி வந்த பின், அவரும், அடுத்த முறை ஆட்சி கட்டிலில் அமர முடியவில்லை.

சென்னை, சத்தியமூர்த்தி பவனில், சிவாஜி படத்தை திறந்து வைத்த பின், காங்கிரஸ் தலைவர்களின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. திரையுலகில் ராசியான நடிகராகவும், ஜாம்பவானாகவும் சிவாஜி ஜொலித்தாலும், அரசியல் உலகில், அவருக்கு ராசி கிடையாது; அவர் தோல்வியை கண்டவர் என்ற சென்டிமென்ட் உருவாகியுள்ளது.
இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVAJI SAMOOGANALA PERAVAI - CHENNAI,இந்தியா
10-அக்-201711:16:22 IST Report Abuse
SIVAJI SAMOOGANALA PERAVAI இப்படி சிவாஜியின் அரசியல் ராசி குறித்து அவதூறாக வெளிவருவது இது முதல் முறையல்ல. எனவே எங்களுடைய மறுப்பையும். அப்படிப்பட்ட அவதூறு செய்திகளுக்கான விளக்கத்தையும் தங்களுக்குத் தெரிவிப்பது எங்களது கடமையாகும். 2006 -ல் சிவாஜி சிலையை திறந்த கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், 2006 ஆம் ஆண்டு தி.மு.கவின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் சிவாஜிக்கு சிலை அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துத்தான் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அதன்பிறகும், ஆட்சிக்கு வந்தவுடனேயே சிலையை நிறுவிய கலைஞரின் ஆட்சி முழு ஐந்து ஆண்டு காலமும் ஆட்சிப் பொறுப்பில் நீடித்து நிறைவு செய்தது. அது மட்டுமல்ல. 1987 - எம்.ஜி.ஆர் ஆட்சிக்குப் பிறகு. எந்த அரசும் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது இல்லை. ஆனால் 2015 -ஆகஸ்டில் சட்டப்பேரவையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, சிவாஜிக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்தார். அதன்பிறகுதான். 2016 சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்து வரலாறு படைத்தார். மேலும். ஜெயலலிதாவின் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்குத் தலைமையேற்று நடத்தியவர் நடிகர் திலகம் சிவாஜி. அப்போது. "தங்கச்சிலையாக ஜொலிக்கும் இந்தப் பெண்ணுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது" என்று வாழ்த்திய சிவாஜியின் வாக்குப்படியே திரையுலகிலும். அரசியலிலும் ஜெயலலிதா ஜொலித்தார் - இதுதான் வரலாறு. 2006 -ல் கலைஞருக்கு முன்னதாக சிவாஜிக்கு சிலை அமைத்தவர் புதுவை முதல்வராக இருந்த ரங்கசாமி. அதன்பிறகு நடைபெற்ற 2011 புதுவை சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்த மூன்றே மாதங்களில். தனித்து ஆட்சியைப் பிடித்து ஐந்து ஆண்டுகாலம் முதல்வராக பணியாற்றினார் ரங்கசாமி என்பதும் வரலாறு. அதேபோல. சென்னை சத்தியமூர்த்தி பவனில் சிவாஜி படத்தை வைத்தபின் காங்கிரஸ் தலைவர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக எந்த ஆதாரமும் இன்றி பொத்தாம் பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி எந்த நிகழ்வும் நடைபெறவில்லை என்பதும். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி என்பது. அகில இந்திய தலைமையால் பலமுறை மாற்றம் செய்யப்படும் வழக்கமான நடைமுறையை, வேண்டுமென்றே சிவாஜி படத்தைத் திறந்ததால் பறிக்கப்பட்டதாக கூறியிருப்பது கண்டனத்துக்குரியதாகும். நடிகர்திலகத்தின் ஆதரவாளராக அறியப்பட்ட EVKS. இளங்கோவன்தான் தமிழக காங்கிரஸ் தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார். நடிகர்திலகம் சிவாஜி பிறந்தநாள் விழாவை நடத்திய பின்னர்தான் இளங்கோவன் மீண்டும் தமிழக காங்கிரஸ் தலைவரானார். கடந்த ஆண்டு சிவாஜி-பிரபு அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற சிவாஜி பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக, மத்திய அமைச்சராகக் கலந்துகொண்ட வெங்கையா நாயுடு, இந்த ஆண்டு துணை ஜனாதிபதியாக உயர்ந்திருக்கிறார். சிவாஜி சிலையையோ படத்தையோ திறந்தவர்கள், நடிகர்திலகத்தைப் போற்றியவர்கள் யாரும் கெட்டதில்லை. அவருடைய சிலையை அகற்ற நினைத்தவர்களுக்குத்தான் கேடு விளைந்தது என்பதுதான் வரலாறு. இதுபோன்ற, சிவாஜியால் வாழ்ந்தவர்களின் சிவாஜியைக் கெடுக்க நினைத்து வீழ்ந்தவர்களின் வரலாறு ஏராளமாக உள்ளது. தேவையென்றால் தங்களுக்கு அவற்றைத் தொகுத்து தர தயாராக உள்ளோம். இனியும் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியோடு யாரோ தரும் தகவல்களைக் கொண்டு வரலாற்றைத் திரித்து செய்தியாக வெளியிட்டு நடிகர்திலகத்தின் லட்சோபலட்சம் ரசிகர்களை புண்படுத்தவேண்டாம் என்று தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. தங்கள் அன்புள்ள K .சந்திரசேகரன் தலைவர் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Fernandez - Kanyakumary,இந்தியா
09-அக்-201700:24:12 IST Report Abuse
Selvaraj Fernandez 1980 ல் தேர்தல் நடந்த போது டிஎம்கே & காங்கிரஸ் கூட்டணிக்கு நடிகர் திலகம் அவர்கள் பிரச்சாரம் செய்து 32 பாராளுமன்ற தொகுதிகளை வெற்றி பெற செய்தார். MGR பிரச்சாரம் செய்தார் ADMK க்கு கிடைத்ததோ 2 தொகுதி மட்டுமே.. இந்த வேளையில் ஒரு திருமண விழாவில் கலைஞர் மணமக்களை வாழ்த்தி எங்களை போல் 32 செல்வங்களையும் பெற்று, அவர்களை போல் 2 குழந்தைகளை மட்டும் பெற்று வளமோடு வாழ்க என்று வாழ்த்தினார்கள் . மேலும் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட திரு. வெங்கையா நாயுடு அவர்கள் உதவி ஜனாதிபதியாக வெற்றி கொண்டாரே. நல்ல மாந்தர்களுக்கு தான் நல்லவர்களை பற்றி நினைவுகளும், சரித்திரமும் தெரியும். ஊழலே கொள்கையாக, ஊழலே வாழ்க்கை என்று வாழும் இவர்களுக்கு என்ன சொல்வது. காலமே பதில் சொல்லும். 1980 ல் தேர்தல் நடந்த போது டிஎம்கே & காங்கிரஸ் கூட்டணிக்கு நடிகர்திலகம் அவர்கள் பிரச்சாரம் செய்து 32 பாராளுமன்ற தொகுதிகளை வெற்றி பெற செய்தார் .MGR பிரச்சாரம் செய்தார் ADMK க்கு .கிடைத்ததோ 2 தொகுதி மட்டுமே..இந்த வேளையில் ஒரு திருமண விழாவில் கலைஞர் மணமக்களை வாழ்த்தி எங்களை போல் 32 செல்வங்களையும் பெற்று,அவர்களை போல் 2குழந்தைகளை மட்டும் பெற்று வளமோடு வாழ்க என்று வாழ்த்தினார்கள் .மேலும் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட திரு.வெங்கையா நாயுடு அவர்கள் உதவி ஜனாதிபதியாக வெற்றி கொண்டாரே.நல்ல மாந்தர்களுக்கு தான் நல்லவர்களை பற்றி நினைவுகளும்,சரித்திரமும் தெரியும்.ஊழலே கொள்கையாக , ஊழலே வாழ்க்கை என்று வாழும் இவர்களுக்கு என்ன சொல்வது .காலமே பதில் சொல்லும் . 1980 ல் தேர்தல் நடந்த போது டிஎம்கே & காங்கிரஸ் கூட்டணிக்கு நடிகர்திலகம் அவர்கள் பிரச்சாரம் செய்து 32 பாராளுமன்ற தொகுதிகளை வெற்றி பெற செய்தார் .MGR பிரச்சாரம் செய்தார் ADMK க்கு .கிடைத்ததோ 2 தொகுதி மட்டுமே..இந்த வேளையில் ஒரு திருமண விழாவில் கலைஞர் மணமக்களை வாழ்த்தி எங்களை போல் 32 செல்வங்களையும் பெற்று,அவர்களை போல் 2குழந்தைகளை மட்டும் பெற்று வளமோடு வாழ்க என்று வாழ்த்தினார்கள் .மேலும் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட திரு.வெங்கையா நாயுடு அவர்கள் உதவி ஜனாதிபதியாக வெற்றி கொண்டாரே.நல்ல மாந்தர்களுக்கு தான் நல்லவர்களை பற்றி நினைவுகளும்,சரித்திரமும் தெரியும்.ஊழலே கொள்கையாக , ஊழலே வாழ்க்கை என்று வாழும் இவர்களுக்கு என்ன சொல்வது .காலமே பதில் சொல்லும் . 1980 ல் தேர்தல் நடந்த போது டிஎம்கே & காங்கிரஸ் கூட்டணிக்கு நடிகர்திலகம் அவர்கள் பிரச்சாரம் செய்து 32 பாராளுமன்ற தொகுதிகளை வெற்றி பெற செய்தார் .MGR பிரச்சாரம் செய்தார் ADMK க்கு .கிடைத்ததோ 2 தொகுதி மட்டுமே..இந்த வேளையில் ஒரு திருமண விழாவில் கலைஞர் மணமக்களை வாழ்த்தி எங்களை போல் 32 செல்வங்களையும் பெற்று,அவர்களை போல் 2குழந்தைகளை மட்டும் பெற்று வளமோடு வாழ்க என்று வாழ்த்தினார்கள் .மேலும் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட திரு.வெங்கையா நாயுடு அவர்கள் உதவி ஜனாதிபதியாக வெற்றி கொண்டாரே.நல்ல மாந்தர்களுக்கு தான் நல்லவர்களை பற்றி நினைவுகளும்,சரித்திரமும் தெரியும்.ஊழலே கொள்கையாக , ஊழலே வாழ்க்கை என்று வாழும் இவர்களுக்கு என்ன சொல்வது .காலமே பதில் சொல்லும் . 1980 ல் தேர்தல் நடந்த போது டிஎம்கே & காங்கிரஸ் கூட்டணிக்கு நடிகர்திலகம் அவர்கள் பிரச்சாரம் செய்து 32 பாராளுமன்ற தொகுதிகளை வெற்றி பெற செய்தார் .MGR பிரச்சாரம் செய்தார் ADMK க்கு .கிடைத்ததோ 2 தொகுதி மட்டுமே..இந்த வேளையில் ஒரு திருமண விழாவில் கலைஞர் மணமக்களை வாழ்த்தி எங்களை போல் 32 செல்வங்களையும் பெற்று,அவர்களை போல் 2குழந்தைகளை மட்டும் பெற்று வளமோடு வாழ்க என்று வாழ்த்தினார்கள் .மேலும் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட திரு.வெங்கையா நாயுடு அவர்கள் உதவி ஜனாதிபதியாக வெற்றி கொண்டாரே.நல்ல மாந்தர்களுக்கு தான் நல்லவர்களை பற்றி நினைவுகளும்,சரித்திரமும் தெரியும்.ஊழலே கொள்கையாக , ஊழலே வாழ்க்கை என்று வாழும் இவர்களுக்கு என்ன சொல்வது .காலமே பதில் சொல்லும் .
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
08-அக்-201723:58:55 IST Report Abuse
Amirthalingam Sinniah ஏனையா முழங்காலுக்கும் மொடடந்தலைக்கும் முடிச்சு போடுகிறீர்கள் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X