திரை உலகம் மாறி விட்டது: சுரேஷ் சந்திர மேனன்| Dinamalar

திரை உலகம் மாறி விட்டது: சுரேஷ் சந்திர மேனன்

Added : அக் 08, 2017
திரை உலகம் மாறி விட்டது: சுரேஷ் சந்திர மேனன்

நீண்ட இடைவெளிக்கு பிறகு தானா சேர்ந்த கூட்டம், சோலோ, 4ஜி, பரத் நடிக்கும் படம் என்று பிசி நடிகராகி விட்டார் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சுரேஷ் சந்திர மேனன். இவருடன் ஒரு சந்திப்பு
* சோலோ படம் பற்றி ?ஒரு சின்ன ரோல் பண்ணிருக்கேன் ,ஆனால் ரொம்ப பிடித்த ரோல். துல்கர் மற்றும் அந்த டீம் உடன் நடிச்சிருக்கேன். புதுசான கதை என்று சொல்லலாம்
* இப்ப திடீர்னு பல படங்கள் உங்கள் வசம் எப்படி ?அஜித் ஆரம்பித்து வைத்த சால்ட் அன் பெப்பர் லுக் இப்ப எனக்கு பயன்படுது. நிறைய ரோல் எனக்கு இப்ப வருது. புதுமுக இயக்குனர்கள் நல்ல நல்ல கதையுடன் வராங்க ,நானும் என் புது பயணத்தை துவக்கி இருக்கேன்.
* இவ்ளோ நாள் எங்க இருந்தீங்க ?நான் சென்னையில் தான் இருக்கேன், நிறைய விளம்பர படங்கள் எடுத்தேன், டாகுமென்டரி பிலிம் எடுத்தேன் , சென்னையில் ஓட்டல் பிஸ்னஸ் மூணு வருஷம் பண்ணினேன், அப்புறம் கேரளாவில் போய் படகு வீடு கட்டினேன்.
* இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து நடிக்க வந்திருக்கீங்க; இப்ப என்ன மாற்றங்கள் இருக்கு ?நிறைய மாறி இருக்கு, பிலிம் மேக்கிங் ரொம்பவே மாறி இருக்கு. முன்னாடி நாங்க படம் எடுக்கும்போது பிலிம் என்பதால் ரொம்ப கவனமா இருந்தோம், இப்ப டிஜிட்டல் சினிமா என்பதால் சுதந்திரமா வேலை பார்க்குறாங்க. * தானா சேர்ந்த கூட்டம் படம் பற்றி ?நான் ரொம்ப எமோஷனல் நடிகர் கிடையாது. முப்பது கதை கேட்டு சில மட்டும் ஒத்துக்குறேன். ரொம்ப வித்தியாசமான கதை இது, சின்ன ரோலா இருந்தாலும் நல்ல ரோல், படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்
* இப்ப எந்த மாதிரி படங்கள் மக்களுக்கு தேவை என நினைக்கிறீங்க ?சினிமா என்பது பொழுது போக்கு அம்சம், எந்த மாதிரி இங்க ஓடும்னு யாருக்கும் தெரியாது. படங்கள் பொதுவா மக்கள் மனதை போய் அழுத்துவதாக இருக்கணும், அந்த மாதிரி படங்கள் தான் ஓடிருக்கு.
* நீங்க எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க விரும்புறீங்க ?ஸ்கிரிப்ட் தான் ஹீரோ என்று சொல்வேன். இயக்குனர்கள் ஹீரோவை முடிவு செய்வதில்லை; ஹீரோக்கள் தான் இயக்குனர்களை முடிவு செய்கிறார்கள்.



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X